என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "interrogated"
- மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
- இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தர்மலிங்கம் (வயது45).இவர் சோழவந்தான் அருகே நகரி டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்தில் மின்மோட்டரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான அன்பு தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலியான டாஸ்மாக் ஊழியருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சசிதரன், ராகவி என்ற குழந்தைகளும் உள்ளனர்.
- கோகுல் கொலை வழக்கில், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது28). ரவுடியான இவர் மீது கோவை நகரில், 15-க்கும் மேற்பட்ட அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கோவை கோர்ட்டு அருகே நடந்த கோகுல் கொலை வழக்கிலும், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை தேடி வந்தனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கவுதம் சென்னையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பின்னர் அவர் புழல் ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் ரவுடி கவுதமிடம் விசாரணை நடத்த வேண்டி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஜே.எம்.3 கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ரவுடி கவுதமை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாகநடந்து வருகிறது
- 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார்,
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாக தொடர்கதையாகி வருகிறது.இதுபோல் போலி நகையை அடகு வைத்து பணம் பறிக்கும் பெண் ஒருவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். மரக்காணம்- புதுவை சாலையில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையில் கடந்த 6மாதத்திற்கு முன் 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் அதே கடைக்கு ஒரு கும்பல் சென்று நகையை கொடுத்து பணம் கேட்டுள்ளனர்
.அந்த கடைக்காரர் ஏற்கனவே பல லட்சங்களை இழந்திருந்ததால் மர்ம நபர்கள் கொடுத்த நகையை முறையாக சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் கொடுத்த நகைகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த நகைக்கடையின் உரிமையாளர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக் கும்பலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த கும்பல் யார் இவர்களுடன் எந்தெந்த கும்பல் தொடர்பில் உள்ளது. இதுபோல் இவர்கள் எந்தெந்த இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறித்து சென்றுள்ளனர் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறினர்.இதனால் அவர்களடம் போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
- வெள்ளி கொலுசு, 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு ரூ.15,000 ரொக்கம் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள காமகரம் என்ற ஊரை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகன் குமரவேல் (வயது 32). இவர் செஞ்சியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திண்டிவனத்தில் பத்திரபதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஆங்காங்கேயே தங்கி உள்ளதால் வீடு பூட்ட ப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இதே போல் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் குமார் (39) என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பக்கத்து அறையில் இருந்த பீரோவை திறந்து பீரோவில் இருந்து 200 கிராம் வெள்ளி கொலுசு, 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு ரூ 15,000 ரொக்கம் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டினுள் உரிமையாளர் உறங்கி கொண்டிருந்த போதே திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து நல்லான் பிள்ளை பெற்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 60). விவசாயியான இவர் வயல்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென இடி-மின்னலுன் மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கி சண்முகவேல் அதே இடத்தில் பலியானார். இது குறித்து இளஞ்செம்பூர் போலீசில் புகார் செய்தனர். இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்