என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IS organization"

    • சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை.

    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இவர்களை அழிக்க சிரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தலைவர்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

    இதையடுத்து சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் உசாமா அல்-முல்காஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இவரை கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அல்-முல்காஜிரை தேடி அமெரிக்காவின் 3 எம்.கியூ.-9 ஆளில்லா விமானம் சிரியா வானில் வட்டமிட்டது. அப்போது வடமேற்கு சிரியாவில் உள்ள அலெப்பா பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அவர் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை.

    • இச்சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர்
    • அந்த சந்திப்பின் போது நான் அங்கு இல்லை என ஆசாத் மவுலானா கூறினார்

    இலங்கையில் 2019 ஏப்ரல் 21 காலை ஈஸ்டர் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று, 3 கிறித்துவ தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. சில மணி நேரங்கள் கழித்து அதே நாளில் டெமடகோடா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும், டெஹிவாலா பகுதியில் ஒரு விருந்தினர் விடுதியிலும் மீண்டும் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேருக்கும் மேல் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆசாத் மவுலானா என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.

    அதில், "அவ்வருடம் நடக்க இருந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்காக இலங்கையில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ள இலங்கையை சேர்ந்த கும்பலுக்கு, அந்நாட்டின் உளவுத்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பின் போது நான் இல்லை. ஆனால், சந்திப்பிற்கு பிறகு அந்த அதிகாரி, 'தேச பாதுகாப்பின்மை மட்டுமே ராஜபக்ஷேவின் குடும்பம் ஆட்சியில் அமர ஒரே வழி' என என்னிடம் கூறினார்," என்று அவர் தெரிவித்தார்.

    இந்த பேட்டி இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதில் குறிப்பிடப்படும் உயர் அதிகாரி யார் என்றும் அவருக்கு குண்டு வெடிப்பில் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரிக்கவும் ஒரு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. விசாரணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கையின் தொழிலாளர் துறை அமைச்சர் மனுஷ நானயக்கரா தெரிவித்தார்.

    • ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர்.
    • விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (வயது 30). இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிப்பை ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் ஆசிப் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று ஜெயில் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயில் அலுவலர் சிவராசன் தலைமையில் போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆசிப், போலீசாரை சோதனை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அறை முழுவதும் சோதனை செய்தனர்.

    ஆசிப்பின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் கருப்பு மையால் ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப்பே வரைந்து வைத்திருந்தார். இதனை போலீசார் கைப்பற்றினர்.

    அப்போது ஆசிப் உங்கள் நாட்டு தேசிய கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்து உள்ளேன். இதனை எதற்காக எடுத்து செல்கிறீர்கள், கொடியை திருப்பி தரவில்லை என்றால் கட்டாயம் இதற்கு பதில் சொல்ல நேரிடும் என மிரட்டல் விடுத்தார். விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த ஜெயிலும் இருக்காது என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயில் அலுவலர் சிவராசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்
    • இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் 2 ஆண்கள் [வயது 56, 67] மற்றும் ஒரு பெண்ணை[வயது 56] கொடூரமாக கொன்றுளளார். இந்த தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

     

    சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்நதனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து நடத்தி வரும் நிலையில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

     

    இதற்கிடையே இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்த தாக்குதலை நடந்தியகாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 26 வயது நபருக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 165,000 மக்கள் வாழும் சொலிங்ஜென் நகரம் அங்குள்ள மிகப்பெரிய கத்தி தயாரிப்பு தொழிற்சாலைக்கு பெயர் போனது குறிப்பிடத்தக்கது.

    ×