search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ITI"

    • ஐ.டி.ஐ.யில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலு வலகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கட்ட கலந்தாய்வு முடிந்து, தற்போது வருகிற 31-ந்தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையத்தில் தற்போது டர்னர், மெஷி னிஸ்ட், மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கில் போன்ற 2 வருட தொழிற்பிரிவுகளுக்கும், கோபா, இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவு களுக்கும் ஒரு சில இடங்களே காலியாக உள்ளது.

    எனவே மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவர்கள் உடனடியாக காரைக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேரலாம். இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாணவர் களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை யில்லா மிதிவண்டி, விலை யில்லா சீருடைகள், விலை யில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள், போன்றவை வழங்கப்படும். மேலும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750/- உதவித் தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750/- உதவித் தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாண வர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காரைக்குடி பகுதியில் உள்ள மாண வர்கள் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
    • தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களி லும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றிட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.

    முதற்கட்டமாக தற்போது தமிழகத்தில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையமும் இதில் அடங்கும். அங்கு நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மண்டல துணை இயக்குனர் செல்வ குமார், உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், பேட்டை ஐ.டி.ஐ. முதல்வர் லட்சுமணன், பொறியாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். பின்னர் ஐ.டி.ஐ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    இக்கல்வியாண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள இந்த தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தின் மூலம் புதிதாக மேலும் 4 தொழிற்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    மேம்படுத்தப்பட்ட சி.என்.சி எந்திர தொழில் நுட்ப பணியாளர், அடிப் படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகியவை இந்த 4 புதிய தொழில் பிரிவுகள் ஆகும்.

    இத்தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுவதின் மூலம் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

    மேலும் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து வளமான இந்தியாவை உருவாக்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
    • 8 -ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்வித் தகுதி உடையவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

    இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 -ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள். இம்முகாமில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

    தனியார்வேலைவாய்ப்பு பெற்றவர்களதுமுகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

    • 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
    • புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வந்தது.

    இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு கலைக்கல்லூரி எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகம் ,தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷமிகள் சிலர் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்கின்றனர். பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பவும் பாதுகாவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற 10-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
    • மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தோ்வு செய்ய உள்ளனா்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற 10-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.

    முகாமில், ஐ.டி.ஐ. பயின்று தோ்ச்சிப் பெற்ற பயிற்சியாளா்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் கலந்துகொள்ளலாம். இதில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தோ்வு செய்ய உள்ளனா்.முகாமில் பங்கேற்க விரும்பும் பயிற்சியாளா்கள், தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தோ்ச்சி பெற்ற சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04622-342432, 9499055790 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது
    • ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் படித்து முடித்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ -ன் புரவலரும், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தர்மகர்த்தா வுமான மருத்துவர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதிப்பெண் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மதர் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் தெரன்ஸ் பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

    விழாவில் கள்ளிகுளம் டி.எம்.பி.வங்கி மேலாளர் அய்யனார் இளையரசன், அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜாண்ததேயுஸ், முன்னாள் மாணவர் மனோஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஐ.டி.ஐ. முன்னாள் முதல்வர் டி.சி.ஸ்டீபன் வரவேற்றார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • பிட்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகின்றது.
    • இதில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    உடுமலை :

    அரசு தொழில் பயிற்சி நிலையங்களில்( ஐ.டி. ஐ) சேர வரும் 20 ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உடுமலை அரசு தொழில் பயிற்சிநிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.டி.ஐ., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிட்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகின்றன இதில் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு அரசின் விலை இல்லா மடிக்கணினி, புத்தகம், சைக்கிள், சீருடை மற்றும் காலனி மாதம் ரூ. 750 பயிற்சி உதவித்தொகை ,கட்டணம் இல்லா பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.பயிற்சி முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர www.skiltraning.tn.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 20 ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் தாராபுரம் உடுமலை அரசினர் தொலைபேசி நிலையங்களில் உள்ள சேவை மையங்களை அணுகலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×