search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallikkattu"

    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரன் முதல் இடம் பிடித்தார்
    • 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் இரண்டாம் இடம் பிடித்தார்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகள் பிரபலமானவை.

    மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்தது.

    முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், பைக், தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் முதலிடம் பிடித்தவர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக கிடைத்தது.

    கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3-வதாக இடம் பிடித்தார்.

    சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளைக்கு முதல் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ராமநாதபுரம் அருகே நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு மீண்டும் ஒத்திவைப்பு.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது பொக்கனாரேந்தல். இங்குள்ள சாத்தாருடைய அய்யனாா் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டது. 

    ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான ராஜேந்திரன் தலைமையில் கிராமத்தினர் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு இதற்காக வாடிவாசல் அமைத்தனா். ஆனால், அனுமதி பெற்று நடத்த வேண்டும் என கோரியதால் ஜல்லிக்கட்டுப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு போலீசார் அனுமதிக்க தயங்கிவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு 2-வது முறையாக ஜல்லிக்கட்டு நடத்த காதா்பாட்சா முத்துராமலிங்கம்  எம்.எல்.ஏ. தலைமையில் வாடிவாசல் அமைக்க பூமி பூஜை நடந்தது. 

    அப்போது  வருகிற 25-ந்தேதி ஜல்லிக்கட்டு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அரசின் முறையான அனுமதி கிடைக்காத நிலையில், ஜல்லிக்கட்டு மே மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் கூறிகையில், 
    ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மே மாத இறுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயமாக நடைபெறும் என்றாா்.
    • இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ளது வஞ்சி நகரம். இங்குள்ள கருப்பணசாமி கோவிலுக்கு பட்டத்து கோவில் காளை உள்ளது.

    இந்த காளை அலங்காநல்லூர், அவனியா புரம், சிராவயல் உள்பட பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த காளை இன்று காலை இறந்தது.

    இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதனை அடக்கம் செய்தனர்.

    பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்னும் பாடலை தெம்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். #Thembu
    ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேய வெற்றிச்செல்வன் மூவிஸ் தயாரிப்பில் பழனிக்குமரன் இயக்கத்தில் ஜேபிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் "தெம்பு". இப்படத்திற்கு ஜித்தேந்திர காளீஸ்வர் மற்றும் ஹரிபிரசாத் இசை அமைக்க தனசேகர் ஒளிப்பதிவு செய்ய சின்னபராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

    விரைவில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற உள்ள நிலையில் பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஜல்லிக்கட்டு' எனும் சிங்கிள் டிராக்கை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. 



    இதனை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவரான ஜாக்குவர்தங்கம் தலைமையில் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு தெம்பு படக்குழுவினர் இப்பாடலை சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
    ×