search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel snatching"

    • ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    திருமங்கலம்

    மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

    இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனூர் வழியாக செல்லும் ஊமச்சிகுளம் டவுன் பஸ் சில் ஏறி தனலட்சுமி அமர்ந் திருந்தார்.

    அப்போது அந்த பஸ்சில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பஸ் சில் இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே இதனை உணர்ந்த தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கோமதி இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து பின்னால் சென்றுள்ளார்.
    • பெண்ணின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கரசானூர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் இவரது மனைவி கோமதி (வயது 32) இவர் நேற்று இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கோமதி இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து பின்னால் சென்றுள்ளார். அப்போது கோமதி வீட்டின் பின்னால் சென்றபோது கதவின் பின்னால் ஒளிந்திருந்த மர்ம நபர் வீட்டினில் புகுந்தார். மீண்டும் கோமதி வீட்டிற்குள் வந்து தூங்கினார். அப்போது மர்ம நபர் கோமதியின் வாயை துணியால் அமுக்கி அவரது கழுத்தில் இருந்த 2 தங்கச் செயினை அறுத்துள்ளார். அப்போது 2 தங்கச் செயினும் பாதி மர்ம நபர் கையில் வந்த நிலையில் பின்புறமாக தப்பிச் சென்றார். இதனை அடுத்து கோமதி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார்.

    உடனே திடுகிட்டு எழுந்த வீட்டிலிருந்த வர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடினர் ஆனால் அவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். இது குறித்து கோமதி கணவர் வெற்றிவேல் வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இதேபோன்று நேற்று முளைச்சோர் பகுதியில் மூதாட்டி இடம் நூதன முறையில் நகை பறித்துச் சென்றனர். மீண்டும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து வானூர் பகுதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதற்கு போலீசார் வானூர் பகுதிகளில் ரோந்து உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுகின்றனர். 

    • குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • சுமதி கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார்.

    நெல்லை:

    தொடர்விடுமுறை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அதிக அளவு பெண்கள் நின்று குளித்து கொண்டிருந்தனர். புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் அங்கு குளித்துள்ளார்.

    நகை பறிப்பு

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார். சுதாரித்து கொண்ட சுமதி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவருடன் குளித்து கொண்டிருந்த மற்ற பெண்கள், நகை பறித்த பெண்ணை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த பெண்ணை குற்றாலம் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்த லெட்சுமி(வயது 39) என்பதும், அவர் மீது ஏற்கனவே சேலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பெண்ணாடம் அருகே பஞ்சாயத்து தலைவர் மகளிடம் நகைகளை திருடிச் சென்றனர்.
    • வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே காரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவர் தனது மனைவியுடன் நேற்று வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அக் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதின் காரணமாக அனைவரும் வீட்டின் வரண்டாவில் படுத்துள்ளனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் பொழுது வராண்டாவில் படுத்து இருந்த கலையரசியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பரித்துள்ளனர்.

    அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட கலையரசி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதை அறிந்த மர்ம நபர்கள் கலையரசியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஊர் மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. நகைகளை திருடிச் சென்ற திருடர்கள் வீட்டின் அருகில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அங்கிருந்து துணியால் மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அன்பழகன் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பெண்ணாடம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கலையரசி கூறும்போது மர்ம நபர்கள் கால் சட்டை அணிந்தும், லுங்கியை கழுத்தில் போட்ட படியும் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

    ×