என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jewelry shop"
- கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
- தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
சேதராப்பட்டு:
புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த நாவற்குளம் முல்லை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46).
இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி வளாக கட்டிடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வருவது வழக்கம். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கடை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளியின் வளாக வீட்டில் வசித்து வருபவர்கள் இன்று அதிகாலை நகைக் கடையின் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கடையின் உரிமையாளர் செந்தில்குமாரும் அங்கு வந்தார். நகை கடையில் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதையும் கடைக்குள் இருக்கும் நகைகள் ஏதாவது கொள்ளையடிக்கப் பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டனர்.
கடையின் சுவற்றை ஆயுதங்கள் மூலம் துளையிட்ட மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் மிஷின் மூலம் கடைக்குள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கர் வலிமையாக இருந்ததால் அதனை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் கடையில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.
இதையடுத்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர்.
- பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள்
கோவை:
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் நாங்கள் சேர்ந்துள்ளோம்.
இந்த கடையின் பங்குதாரர்கள் எங்கள் கடையில் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், மேற்படி திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு எங்களை நம்பிக்கையூட்டினர். இதனை நம்பி நாங்களும் அந்த திட்டங்களில் சேர்ந்து பணம் கட்டினோம்.
ஆனால் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டிய பின்னரும், எங்களுக்கு நகையோ, பணத்தையோ கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், தருவதாகவே கூறி வருகிறார்கள். ஒரு வருடமாகியும் இன்னும் தரவில்லை.
இந்நிலையில் பணத்தை கேட்டு நாங்கள்அனைவரும் பங்குதாரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர்களிடம் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம், நகையை தரமுடியாது என மிரட்டும் தொனியில் பேசினர்.
இதுநாள் வரை பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் கூறுவதை பார்த்தால் பணத்தை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிகிறது.
மேலும் பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எனவே கடையின் பங்குதாரர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் இருந்து நாங்கள் செலுத்திய தொகையினை திரும்ப பெற்று தந்து, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் பாண்டி பஜாரில் உள்ள பிரபல தங்க நகை கடையில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மன வேதனையில் இருந்தார். இதுபற்றி மனைவி கேட்டபோது கடையில் பிரச்சினை என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் அறைக்குள் சென்ற ரவிக்குமார் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கூச்சலிட்டார். தகவல் அறிந்ததும் குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களாக கடையில் உள்ள பிரச்சினை குறித்து ரவிக்குமார் மனைவியிடம் கூறி புலம்பி வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவிக்குமாரின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? அவருக்கும் கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே மோதல் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சிகில் ராஜவீதியில் மனோகரன் என்பவரின் நகை கடை உள்ளது. இங்கு நேற்று மாலை 2 பெண்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்க வந்தனர்.
இருவரும் தேர்வு செய்த நகை மாடல் பிடிக்கவில்லை என்று கூறி விற்பனையாளர் காட்டிய சாம்பிள் நகைகளை திரும்ப கொடுத்தனர். அதில் சில நகை மாயமானது குறித்து உரிமையாளரிடம் விற்பனையாளர் தெரிவித்தார்.
இது குறித்து அந்த பெண்களிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரண்பட்ட தகவலை தெரிவித்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது கடையில் திருடிய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, தங்க நகைகளை அந்த 2 பெண்களும் சேலை முந்தானையில் பதுக்கியது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின்படி விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி ஆர்.ஆர்.நகர் .மனைவி அழகுமார் (வயது 26), ஆர்.எஸ்.ஆர் நகர் சங்கர் மனைவி சரோஜா (29) ஆகியோரை பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்