search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகை கடை சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி- பல கோடி நகைகள் தப்பியது
    X

    நகை கடை சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி- பல கோடி நகைகள் தப்பியது

    • கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    • தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த நாவற்குளம் முல்லை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46).

    இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி வளாக கட்டிடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வருவது வழக்கம். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கடை திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் பள்ளியின் வளாக வீட்டில் வசித்து வருபவர்கள் இன்று அதிகாலை நகைக் கடையின் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    கடையின் உரிமையாளர் செந்தில்குமாரும் அங்கு வந்தார். நகை கடையில் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதையும் கடைக்குள் இருக்கும் நகைகள் ஏதாவது கொள்ளையடிக்கப் பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டனர்.

    கடையின் சுவற்றை ஆயுதங்கள் மூலம் துளையிட்ட மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் மிஷின் மூலம் கடைக்குள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கர் வலிமையாக இருந்ததால் அதனை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் கடையில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.

    இதையடுத்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×