என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kadambur Raju Mla"
- சக்திவிநாயகர் கோவில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 11-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
- தொடர்ந்து அலங்கரி க்கப்பட்ட விநாயகர் சிலையுடன் பால்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் புது கிராமம் விநாயகர் கோவிலுக்கு புறப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்து பிள்ளைமார் சமுதா யத்துக்கு பாத்தியப்பட்ட சக்திவிநாயகர் கோவில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 11-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
சதுர்த்தி ஊர்வலம்
அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர்பூஜை, மஹா சங்கல்பம், புண்யாக வாகனம், கும்பபூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமங்களும், 6.30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்தது.
காலை 10 மணிக்கு சக்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பகுதியில் சென்று ஊர்வலம் கோவில்பட்டி ெரயில்வே நிலையம் விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலங்கரி க்கப்பட்ட விநாயகர் சிலையுடன் பால்குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் புது கிராமம் விநாயகர் கோவிலுக்கு புறப்பட்டது.
கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.
ஊர்வலத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார். இல்லத்து பிள்ளைமார் சங்கத் தலைவர் சங்கரன், தொழிலதிபரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், குருமூர்த்தி, ராம்கி, மாரிக்கண்ணன், தனசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலத்தில் குழந்தைகள் சிவன், கருப்பசாமி, கிருஷ்ணன், பாரத மாதா உள்ளிட்ட வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.
அதுபோல், ஊர்வலத்தில் சிலம்பாட்டம் நடந்தது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கம், இல்லத்துப்பிள்ளைமார் இளைஞர் சமூக சங்கம், சங்கடஹர சதூர்த்தி நண்பர்கள் குழு ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
- எல்.எல்.நகரில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு:
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் மற்றும் கோவில்பட்டி, நாலாட்டி ன்புதூர், எப்போதுவென்றான், கயத்தாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த செயற் பொறியாளர், காளிமுத்து, கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் முனியசாமி, குருசாமி, மிக்கேல், தங்கராஜ், வேலாயு தம், உதவி மின் பொறியாளர் பாலமுருகன், கயத்தாறு இளநிலை பொறி யாளர் சுரேஷ், சுப்பையா மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி அம்பாள் நகர், பூரணம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
- கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மின்மாற்றிகளை இயக்கி வைத்தார்.
கோவில்பட்டி:
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி அம்பாள் நகர், பூரணம்மாள் காலனி, பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராஜூவ்நகர் 6ஆவது தெரு, முடுக்கு மீண்டான்பட்டி, கரடி குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சி.ஆர். காலனி, கயத்தாறு அண்ணா நகர் ஆகிய 6 இடங்களில் ரூ.29.17 லட்சம் மதிப்பில் 6 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை பொறியாளர் குப்புராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு மின்மாற்றிகளை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், உதவி செயற்பொறியாளர்கள் குருசாமி (நகர்ப்புறம்), மிகாவேல் (ஊரகம்), முனியசாமி (கயத்தாறு), தங்கராஜ் (கட்டுமானம்), உதவி மின் பொறியாளர்கள் லட்சுமி பிரியா, மாரீஸ்வரன், கண்ணன், விஷ்ணுசங்கர் சுரேஷ், அருண்நேரு, மின்வாரிய பணியாளர்கள்,
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலர் விஜய பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, ஜெய லலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலர் செல்வ குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தென்னக ரெயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்தார்.
- மனுவினை பெற்றுக்கொண்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவில்பட்டி:
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, தென்னக ரெயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்தார். அப்போது விரைவில் நெல்லையில் இருந்து சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவினை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த தென்னக ரெயில்வே பொது மேலாளர், கோவில்பட்டி ரெயில் நிலையம் அம்ரீத் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி மதிப்பில் ஒப்பந்தம் நிறைவு பெற்று விரைவில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.
- சண்முகநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை தொடக்கவிழா நடைபெற்றது.
- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இலுப்பை யூரணி பஞ்சாயத்திற் குட்பட்ட சண்முகநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை தொடக்கவிழா நடைபெற்றது. கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில் பட்டி யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கவி யரசன், செண்பக மூர்த்தி, வள்ளி யம்மாள், மாரியப்பன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாவட்ட பொருளாளர் அம்பிகா வேல்மணி, முன்னாள் ஒன்றிய செய லாளர் போடு சாமி, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வக்குமார், இளைஞர் பாசறை வானரமூட்டி பழனிக்குமார், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் தாஸ்அய்யனுராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹேமலா, திட்டங்குளம் ஜெயந்தி சரவணசாமி, அன்னை தெரசா நகர் கிளை செய லாளர்- இலக்கிய அணி மேற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வக்கீல்கள் சிவபெருமாள், சங்கர் கணேஷ், பழனிக் குமார், நகர அவைத்தலைவர் அப்பாசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் பீக்கிலி பட்டி மணிராஜ், அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நாலாட்டின்புத்தூர் அய்யலுராஜன், மகளிரணி கோமதி அய்யலுராஜன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகரப் பொருளாளர் வேல்முருகன், குழந்தைராஜ், ஜெயசிங், கோபி, 11-வது வார்டு செய லாளர் ரவிசந்திரன், பாடகர் முத்தையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அங்கு சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
அ.தி.மு.க. பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் அவரது தலைமையில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியையும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.கே. பெருமாள், சின்னப்பன், மோகன், கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, மகேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன். முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிச்சாமி, கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் நகர் மன்ற
துணைத்தலைவர் ராமர், மாவட்ட கவுன்சிலர் லெட்சுமணபெருமாள், மாணவரணி நிர்வாகி செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுதா, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசு, வள்ளியம்மாள், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பத்மா, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ் ஆரோக்கியராஜ், பழனிக்குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவும், ஆசி பெறவும் எடப்பாடிக்கு கிளம்பி சென்றனர்.
- கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது.
- கூட்டத்தில தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது என்று கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.22 லட்சத்தில் புதுக்கிராமம் வள்ளுவர் நகர் பகுதியில் சலவைக்கூடம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஒ. அவரது அலுவல கத்துக்குள்ளேயே பட்டப்பகலில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறினர். அப்படி என்றால் 5 ஆண்டுகள் அதாவது 60 மாதங்களுக்கு அவர்கள் தர வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தை பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் போது, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராமர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், மார்க்சிஸ்ட் நகர் மன்ற உறுப்பினர் ஜோதி பாசு உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரைபாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், எட்டையபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசுகையில், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை அவரை தொடர்ந்து ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. எத்தனை நெருக்கடி வந்தாலும், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அவர்கள் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் .கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் வரலாற்று சாதனை படைத்து நமது மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக கோவில்பட்டி இருந்து வருகிறது.
- எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.
கோவில்பட்டி:
சட்டசபையில் நடைபெற்ற வணிகவரி மற்றும் செய்திதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடக்கி வைத்து கடம்பூர்ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப் பகுதியாக கோவில் பட்டி இருந்து வருகிறது. எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இங்கு விவசாயத்திற்கு மாற்றாக, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தீப்பெட்டி தொழில் உள்ளது.
தறபோது சீனாவில் இருந்து வருகிற லைட்டர் தீப்பெட்டி தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே மாநில அரசு லைட்டருக்கு தடை விதித்து பல்லாயிரக்க ணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை கணக்கில் பார்த்தால் சராசரியாக 52 சதவீதம் தான் மழை பெய்துள்ளது.
நிலத்தடிநீர் மிகவும் குறைந்த நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை அரசு உடனடியாக இந்த ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
- அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி :
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் வழங்குவது தொடர்பாகவும், நகராட்சி தினசரி சந்தை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசியதாவது:-
கோவில்பட்டியில் நக ராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி காய்கறிசந்தை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை கோவில்பட்டி நகர் மட்டுமின்றி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது தினசரி சந்தையில் அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஏற்கனவே அந்த காய்கறி சந்தையில் 396 கடைகள் செயல்பட்டு வருகின்ற இதனால் 146 வியாபாரிகள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பதற்றத்தினையும், அச்சத்தினையும் உருவாக்கி உள்ளது.
கொரோனா காலத்தில் கடை கள் மூடப்பட்டு இருந்த போது வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் பழுது பார்த்து நல்ல நிலையில் வைத்துள்ளனர். எனவே அந்த இடத்தில் கடைகளை கட்டுவதற்கு பதிலாக புதியதாக கிருஷ்ணா நகரில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் தற்பொழுது குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. 5 ஏக்கர் இடம் பயன்பாட்டிற்கு உகந்த இடமாக உள்ளது. அந்த இடத்தில் மாற்று ஏற்பாடாக புதியதாக கடைகளை கட்டும் நேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைக்கும், அங்குள்ள வியாபாரிகளும், பொது மக்களும் பயன்படுத்து சூழ்நிலையை அமைச்சர் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறுகையில், ஏற்கனவே 396 கடைகள் இருந்த தாகவும், புதியதாக கட்டுப்படுவதில் 250 கடைகள் கட்டுப்படுவதாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அதிகமான மக்கள் வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
வசதிகள் செய்வதற்கும், வாகனங்கள் எளிதாக உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தான் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பவர்கள் அனைவருக்கும் கடைகள் தரவேண்டும் என்றால் குப்பைகள் அகற்றி நகராட்சி இடம் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அந்த இடத்தினை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும், இ.எஸ்.ஐ மருந்தகத்தில் இடம் இருப்பதாக தெரி வித்துள்ளீர்கள், சம்ப ந்தப்ட்ட துறை அமைச்ச கத்தில் பேசி, அவர்கள் சம்மதம் தெரி வித்தால் அனைவருக்கும் கடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கயத்தாறு, ஏப்.4-
கயத்தாறு பேரூராட்சி பகுதியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோவில் தெருவில் வாறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவைசெயலாளர் செல்வகுமார், கயத்தாறு ஒன்றிய மாணவரணி செய லாளர் நவநீதகண்ணன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி,நகர துணைச் செயலாளர் தங்க பாண்டியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அகிலாண்டபுரம் பஞ்சா யத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வேதக்கோவில் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதி யிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் சத்திரப்பட்டி கிளை செயலாளர் ஞான தாஸ், அகிலாண்ட புரம் கிளை செயலாளர் லெனின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
- தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி, தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச்செயலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன், தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினார்.
இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமத் ஸ்ரீதர் சுவாமிகள் யோகா சென்டரில் பயின்ற மாணவி ஜெயவர்தினி (வயது 12), அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, தாய்லாந்தில் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் அளவிலான யோகா போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவிக்கு எம்.எல்.ஏ., ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
போட்டியில், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மெட்ரிக் பள்ளி சாத்தூர் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம், கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியர் கிளப் மற்றும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடம், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு தமிழர் போர்க்கலை சிலம்பம் ஆகியவை 3-வது இடத்தையும் பெற்றன.
தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணை செயலர் சூரியநாராயணன் வரவேற்றார். பொருளாளர் சிவசக்திவேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்