என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kalasam"
- 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
- 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்திபெற்ற மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம், சுவாமி- அம்பாள் கருவறை கோபுரங்கள், பரிவார தேவதைகள் கோபுரங்கள் உள்ளிட்ட 84 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர் 3-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்காக 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல மோதாளங்கள் முழங்க மயிலாடுதுறை காவேரி நகர் பாலத்தில் இருந்து 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. இதில் திருவாவடுதுறை கட்டளை தம்புரான் வெள்ளப்ப சுவாமிகள், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் அய்யாத்துரை என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கீரை விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று இவரது மகன் அருணாச்சலம் என்பவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்தார். அப்போது தண்ணீர் வரவில்லை. இதையடுத்து அருணாச்சலம் தோட்டத்து கிணற்றில் இறங்கிப் பார்த்தார். அப்போது 4 கோவில் கோபுர கலசங்கள் கிணற்றுக்குள் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுண் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கலசங்களை மீட்டனர்.
இதை திருடியவர்கள் யார்? எதற்காக கிணற்றில் வீசிச் சென்றார்கள்? எந்த கோவிலின் கோபுர கலசங்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.
எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள் அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.
புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மன் சிலை 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி காலங்களில் பெரிய நாயகி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட தனி சன்னதியில் அம்மன் எழுந்தருளியுள்ளார். வேறு எங்கும் இந்த அளவில் உயரமான அம்மன் சிலையை காண முடியாது.
ஒரே கல்லால் செய்யப்பட்ட கருங்கல் தொட்டி சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சன்னதியின் வாயிலில் மட்டும் பல்வேறு கோயில்களின் வரலாற்று சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிபிரகாரத்தில் பள்ளியறை அமைந்துள்ளது. பெரிய கோவிலை பற்றி மகாத்மா காந்தி எழுதிய கருத்து பற்றிய கல்வெட்டு அம்மன் சன்னதிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. பெரிய நாயகி அம்மன் சன்னதியில் தான் கோவில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இக்கோயிலை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
இத்தனை சிறப்பு வாய்ந்த பெரிய கோவில் பெரிய நாயகி அம்மன் சன்னதியின் கோபுர கலசம் காற்று, மழையால் சாய்ந்துள்ளது இன்று தெரியவந்தது. அதனை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், பொது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கேட்டபோது, அம்மன் சன்னதியின் கோபுர கலசம் சாய்ந்து விட்டது. கோவில் நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மன் சன்னதியில் சாய்ந்துள்ள கோபுர கலசத்தை விரைந்து சரிசெய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்