search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalpakkam"

    • 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.
    • வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.48 கோடி செலவில் கட்டிடம்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, அணுமின் நிலையம் சார்பில் அதன் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1கோடியே 48 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.


    இதன் திறப்பு விழா வெங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, ஆகியோர் பங்கேற்று, வகுப்பறையை திறந்து வைத்து மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.

    நிகழ்ச்சியில் அனுமின் நிலைய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பவானி, ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி கல்பாக்கம் வருவதை ஒட்டி, "மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக" மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்பாக்கம்:

    கல்பாக்கம் ஜீவா நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 40). அப்பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கல்பாக்கம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பெண், வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருக்கும் நகரியம் பகுதி வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து நகைக்கொள்ளை நடந்தது.

    கொள்ளையர்களை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் தனிப்படை அமைத்தார். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அங்கு வீடுகளில் வேலை செய்யும் புதுப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    தனிப்படை போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பானிபூரி விற்கும் வட மாநில வாலிபர்கள் இருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்பாக்கம் நகரியம் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு அந்த பெண் மூளையாக செயல்பட்டாரா? எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கல்பாக்கத்தில் மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்தராமையா (வயது 60) ஆந்திராவை சேர்ந்தவர். இவரது மகன் ஆனந்தராஜ். கல்பாக்கம் அணுசக்தி துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த வாரம் ஏற்பட்ட தகராறின் போது ஆனந்த ராஜ், தந்தை சித்தராமையாவை கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சித்தராமையா கடந்த 13-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இளையனார் குப்பம், கடற்கரை ஓரம் உள்ள முட்புதரில் சித்தராமையா பிணமாக கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் நேற்று நள்ளிரவில் இருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதுபற்றி அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொழில் நுட்ப கோளாறால் முதல் அணுஉலையும் இயங்காமல் இருக்கிறது. இதனால் தற்போது மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

     மாமல்லபுரம், கோவளம், நெய்வேலி, கொக்கிலமேடு, வெண்புரு‌ஷம், சூலேரிக்காடு, கல்பாக்கம் பகுதி மீனவ கிராமங்களில் 2-வது நாளாக இன்றும் காற்றின் வேகம் அதிகரித்து சாரல் மழை பெய்து வருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மழை, காற்று, கடல்சீற்றம் என அப்பகுதி கடலோர கிராம மக்களும், மீனவர்களும் பீதியில் உள்ளனர். இந்த நேரத்தில் அணு உலையும் நிறுத்தப்பட்டதால் கடலோர பகுதி மீனவர்களிடையே தற்போது சுனாமி பயமும் நிலவி வருகிறது.



    கல்பாக்கம் அருகே கணவரை மிரட்ட தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). கார் டிரைவர். இவரது மனைவி கீதா ராதாகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் உண்டு.

    இதனை கீதா கண்டித்து அடிக்கடி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கீதா தற்கொலை செய்யப்போவதாக கூறி மண்ணெய் உடலில் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கிருஷ்ணன் உடல் கருகிய மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார்.

    புட்லூரை அடுத்த மலை வாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோதண்டராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை மனைவி கண்டித்து வந்தார்.

    கடந்த 23-ந் தேதி மனைவி ஜெயலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு கோதண்டராமன் தகராறில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலட்சுமி பணம் கொடுக்கவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த கோதண்டராமன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கோதண்டராமன் பரிதாமாக இறந்தார்.

    கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ், சாப்ட்வேர் என்ஜினீயர். நேற்று மதியம் காரில் நண்பர் பிரவீனுடன் பாண்டிச்சேரி சென்றார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது.

    இதில் காரை ஓட்டிச் சென்ற ஹரீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரவீன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரிய வளாகத்தின் வீடுகளின் எதிரே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டும் பூட்டுகளை உடைத்தும் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

    இது குறித்து கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜ் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பைக் மெக்கானிக் ஒருவர் கொடுத்த தகவலின்படி செய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கபால், கமலேஷ் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் கல்ப்பாக்கம் நகரியத்தின் வளாக பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாத பகுதிகளை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×