என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kalpana Soran"
- ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
- காந்தே தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிடுகிறார்
ஜார்கண்ட் தேர்தல்
81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
கூட்டணி
கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாராளராக நிற்கிறார்.
அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையில் இருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தாவினார்.
கல்பனா சோரன்
இதனால் ஹேமந்த் சோரன் கட்சி பின்னடைவு என்று கூறப்படுகிறது. சம்பாய் சோரன் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தாலும் ஹேம்நாத் சோரன் ஜனவரியில் கைது செய்யப்பட்டதில் இருந்து கட்சி தலைமையில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பானா சோரன் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த மக்களவை தேர்தலில் முக்தி மோர்ச்சா கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயனப்டுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கை பெற்றவராக திகழ்கிறார்.
கட்சியின் முகம்
எனவே இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முகமாககாந்தே தொகுதியில் போட்டியிடும் கல்பனா சோரன் மாறியுள்ளார் ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.
அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களை சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது பேச்சு குறித்த திட்டமிடல் கல்பனாவிடம் உள்ளதாக ஆங்கில ஊடங்கங்கள் கூறுகின்றன.
இதனால் தங்கள் தொகுதியிலும் அவர் பேச வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்தன என இந்தியா டுடே கள நிலவரம் கூறுகிறது. நேற்றைய தினம் இறுதிக்கட்ட கட்ட பிரசாரத்தில் கல்பனா சோரனின் ஹெலிகாப்ட்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் போன் மூலமே பிரசார மைக்கில் உரையாற்றிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் வேண்டிய நிலையில் ஹேமந்த் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 41- 44 இடங்களிலும், பாஜக 36-39 இடங்களிலும், இதர கட்சிகள் 3-4 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோகபால் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது .
- ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
- தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.
ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
- சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது
- இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் சந்தித்து பேசினார்.
இருவரது கணவர்களும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டெல்லி மாநில அமைச்சர் அதிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தலைமை தாங்கும் தங்கள் கணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மத்திய ஏஜென்சிகளின் மிருகத்தனமான அதிகாரத்திற்கு பயப்படாத இரண்டு வலிமையான பெண்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது பாஜக பயப்பட வேண்டும். இந்த பெண்களின் வலிமை மற்றும் தைரியத்திற்காக நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில், கல்பனா சோரன் பதிவிட்டுள்ளார். அதில்,
சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சட்டவிரோதமாக கைது செய்வது, ஜனநாயக நாட்டில் சாதாரண நிகழ்வு கிடையாது. இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஏப்ரல் 4-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . அதே போல மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்