என் மலர்
நீங்கள் தேடியது "Kanja"
- வாசுதேவநல்லூர் பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
- மாயசுடலை, கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்த சென்றனர். அப்போது பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மாயசுடலை(வயது 21) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- ஓடை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
- கைதானவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று கடங்கநேரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஓடை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது அதில் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த மகாராஜன்(வயது 18) என்பவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நெட்டூர் பஜனைமட தெருவை சேர்ந்த சுப்புக்குட்டி, முப்புடாதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்:
கோவை போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் செட்டிபாளையம் ஈச்சனாரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 2.700 கிலோ கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு சாமநாயக்கன் பாளையம் மைதானத்தில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் ஒரு மூதாட்டி சந்தேகத்திற்கிடமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மூதாட்டி சாமநாயக்க ன்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சரஸ்வதி (வயது 62) என்பதும் அவர் மீது ஆனைமலை, துடியலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிக வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்