என் மலர்
நீங்கள் தேடியது "Kanmai"
- விருதுநகர் அருகே கண்மாயில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலியானார்.
- துணி துவைக்க சென்ற பெண் ஒருவரும் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனிைய சேர்ந்தவர் பரமசிவம் (வயது 33). மாற்றுத்திறனாளியான இவர், சகோதரர் உத்தமனுடன் பாத்திரம் வியாபாரம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தில் உத்தமன், பரமசிவம் ஆகியோர் பாத்திரம் வியாபாரத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாயில் மீன்பிடிக்க செல்வதாக பரமசிவம் கூறி விட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உத்தமன், கண்மாய் பகுதியில் சென்று பார்த்தபோது தண்ணீரில் பரமசிவம் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீன்பிடித்து கொண்டிருந்தபோது பரமசிவம் கண்மாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா (29). வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத் தன்று கவிதா அருகில் உள்ள நீர்நிலைக்கு துணி துவைக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கவிதா தண்ணீரில் பிணமாக மிதந்தார். வலிப்பு ஏற்பட்டதில் அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
- தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடாகியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாதநிலை இருந்து வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 20 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக 4 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை ஆற்றில் கடந்த 6 மாத காலமாக தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருப்பது வரலாற்று உண்மையாகும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இது போன்று வைகை ஆற்றில் தண்ணீர் சென்றது கிடையாது என்று பெரிய வர்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.
தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடா கியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சங்க பொறுப்பாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, செயலாளர் மோகன், மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, செயலாளர் முத்துராமலிங்கம், கீழமேல்குடி வெள்ளமுத்து, கீழமேல்குடி ஊராட்சி மன்றததலைவர் தர்மராமு மற்றும் கிராம பெரியவர்கள் வைகை ஆற்றில் வெள்ளமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது கீழ்மேல் குடி கண்மாய், மானாமதுரை கண்மாய், கால்பிரவு கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய் ஆகிய 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத அவல நிலையை எடுத்து கூறி இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் செல்கிறது. தூர்ந்து போயுள்ள அந்த கால்வாயை சீரமைத்து அதன் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது.
இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காசிராஜன் நன்றி தெரிவித்தார்.
- உசிலம்பட்டி அருகே கண்மாய்கள் ஏலத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலு வலகத்தில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் மீன் பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.
இதில் பொதுப்பணி த்துறை உதவி பொறியா ளர்கள் செல்லையா, கோவிந்தராஜ், பணி ஆய்வாளர் ஒச்சுக்காளை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏலம் நடத்தினர்.
இதில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள், வாலாந்தூர் முதலைக்குளம், விண்ணகுடி உள்பட பல்வேறு கண்மாய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், செல்லப்பன் கோட்டை கண்மாய் மற்றும் பல்வேறு கண்மாய்கள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்து ஏலத்தை நிறுத்தி வைக்க கோரியும், கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது எனவும், குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.கண்மாய்கள் ஏலம் தொடர்பாக இரு தரப்பின ருக்கிடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அபிராமம் பகுதியில் கண்மாய்-ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன.
- இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பருவமழை பொய்த்ததாலும், வைகை ஆற்று தண்ணீர் இந்த பகுதிக்கு வராததாலும் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், வல்லக்குளம், பொட்டகுளம், பாப்பனம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவமழையை நம்பி நெல், மிளகாய், பருத்தி, உளுந்து உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர்.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் வறண்டு காணப்படுகிறது. வைகையாறு, கிருதுமால் நதி, பரளையாறு கால்வாய்களும் மண் மேடாகவும், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படுகிறது.
இதனால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது அபிராமம் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும் பருவமழை நேரத்தில் கண்மாய், ஊரணிகளில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதுடன், குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும்.
தற்போது தண்ணீர் நிரம்பாததால் கண்மாய், ஊரணிகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக கோடை காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- திருமங்கலம் அருகே 40 ஆண்டுகளுக்கு பின் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
- விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடக்கோவில் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மீட்டர் சுற்றளவில் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவில் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக அதிசயமாக கூடக்கோவில் கண்மாய்க்கு அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் வைகையாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் இந்த கண்மாய்க்கு வந்தடைந்தது.
தொடர்மழை மற்றும் வைகையாற்று தண்ணீரால் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 1981-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக கூடக்கோவில் கண்மாய் நிரம்பியது. அதன்பின் கண்மாய் முழுவதும் நிரம்பவில்லை. ஆனால் தற்போது பெய்த மழை காரணமாக 40 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.
கண்மாய் நிரம்பியதை முன்னிட்டு அந்தப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கண்மாய் கலுங்கில் உள்ள கல்லை வழிபட்டனர்.
- ஆக்கிரமிப்பு செய்த கண்மாயை மீட்டு தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லாம்பட்டி கிராமத்தில் 150 குடியிரு ப்புகள் உள்ளன. கிராமத்திற்கு பாத்தியப்பட்ட குலவன் கண்மாய் சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
பருவ மழை காலங்களில் கண்மாயின் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கண்மாய்க்கு அருகே இருந்து வரும் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை 1987-ம் ஆண்டிலிருந்து 5 நபர்கள் கொண்ட கூட்டு பட்டா எங்கள் வசம் இருந்து வருவதாக அவர்களின் வாரிசுதாரர்கள் கூறி அந்நிலங்களில் உள்ள முட்செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கண்மாய்க்கு அருகே உள்ள நிலங்கள் அனைத்தும் கண்மாய்க்கு உட்பட்ட தாகவே இருந்து வருகிறது. எனவே இதில் தற்சமயம் தனியார் தரப்பினைச் சேர்ந்த நபர்கள் மேற்கொண்டு வரும் பணியினை நிறுத்த வேண்டும், கண்மாய்க்கு நடுவே இரு திசைகளில் இருந்து வரும் கோவில் மற்றும் மயான பகுதிக்கு செல்லும் பாதைகள் முதலியவற்றை மீட்டு தர வேண்டும்.
அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். கண்மாய்க்கு பாத்தியப்பட்ட கலிங்கு மற்றும் கரை பகுதியை மீட்டு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்துள்ளனர். ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
எனவே கண்மாய்க்கு அருகில் உள்ள நிலப்பகுதிகள் கிராமத்திற்கு சொந்தமானதா? அல்லது 5 பேர்கள் கொண்ட குழுவினரின் வாரிசுகளுக்கு சொந்தமானதா? என்று முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்தி னருக்கும், வருவாய் துறையினரும் மட்டுமே உள்ள காரணத்தினால் அவர்கள் மௌனம் கலைத்தால் மட்டுமே இதற்கு முடிவு எட்டும் என்பது சமூக ஆர்வலர்க ளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
மேலும் இது சம்பந்தமான நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கிராம மக்கள் தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க தகுதி வாய்ந்த கண்மாய்களாக தேர்வு செய்யப்பட்ட விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வெளியீடு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துச் செல்ல விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநரிடம் மனு செய்து தேவையான வண்டல் மண், களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 222 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட பயன்பாட்டிற்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
- கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை
மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள வெள்ளக்கல் பகுதியில் அயன்பாப்பாக்குடி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
வறண்ட நிலையில் காணப்பட்ட கண்மாய் 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தற்போது ஓரளவு நீர் நிரம்பியுள்ளது. கண்மாய் அருகே சில கிலோ மீட்டர் தொலைவில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக இங்கு கழிவுநீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையை யொட்டி வாய்க்காலில் அதிகளவு சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் கண்மாயில் துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீர் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேலான கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப் பாக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 130 ஏக்கர் கொண்ட திறந்த வெளி நிலப்பரப்பு மற்றும் தோட்டங்களை ஆக்கிர மிக்கிறது.
இதனால் அந்த பகுதியில் விவசாயம் கேள்வி குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தோல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அயன்பாப்பாக்குடி மற்றும் விவசாய நிலங்களில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
- எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி வேல்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சுபபிரியன் (வயது14).
இவன் சூரப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பொதுத்தேர்வு எழுதியிருந்த சுபபிரியன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.
இந்தநிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த சுபபிரியன், நேற்று அங்குள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அங்கு தண்ணீரில் இறங்கிய அவர் ஆழமான பகுதியில் சிக்கினான்.
அங்கிருந்து வெளியேற முடியாமல் சுபபிரியன் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து தகவலறிந்த எம்.ரெட்டியபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாயில் மாணவனை தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.
மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.
- வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
மதுரை
ஆனையூர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(48). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, ஆனையூர் கோசாகுளம் கண்மாயில் அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி கார் டிரைவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தை சேர்ந்தவர் காசி (வயது54). கப்பலூர் தொழிற்பேட்டையில் கார் டிரைவராக வேலை பார்த்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கூத்தியார்குண்டு கண்மாயில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அந்த பகுதியில் நின்றவர்கள் கண்மாய்க்குள் இறங்கி காசியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
ஆகவே கண்மாயில் காசி மூழ்கியது குறித்து திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வெகுநேர தேடுதலுக்கு பிறகு காசி பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சென்னல்குடி கண்மாயில் ஊத்தாகூடை மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். கண்மாயில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தாகூடைகளில் மீன் பிடித்தனர். இதில் சிலருக்கு நாட்டு மீன்களான கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாப்புலெட், வயித்து கெண்டை உள்ளிட்ட பெரிய மீன்கள் கிடைத்தன.
பலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதும் ஆர்வத்துடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.