என் மலர்
நீங்கள் தேடியது "Karate"
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
- இந்த முகாமை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் சிறப்பு கட்டா பயிற்சி முகாம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ருக்மா சரவணன் தலைமை தாங்கினார்.காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து வருகை புரிந்த பிளாக் பெல்ட் 3-வது டான் பயிற்சியாளர் தன நாராயண பிரபு குழுவினர், சிறப்பு பயிற்சி அளித்தனர். இதில் சிவகங்கை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் வீரசேகர், தியாகராஜன், சிரஞ்சீவி, சந்தீப், அயயாரு, சண்முகவேல், கஸ்பாரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழை ஜே.சி.ஐ. காரைக்குடி கிங்ஸ் இயக்க தலைவர் ராஜீவ் வழங்கினார்.சங்க செயலாளர் சென்டாய் சுகுமார் நன்றி கூறினார்.
- மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
- மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் உலக சோட்டோகான் கராத்தே பெடரேஷன் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 6 வயது முதல் 20 வயது வரை பங்கேற்ற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை உலக சோட்டோகான் பெடரேஷன் அமைப்பின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த விபூஷணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்ஷெரிப், சுபாஷ், விக்னேசன், ஹரிகரன் ஆகியோர் நன்றி கூறினர்.
- நெல்லையில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
- போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
களக்காடு:
நெல்லையில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் தலைமை தாங்கினார். ஒய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை, திமுக நகர செயலாளர் மணிசூரியன், வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். யூசுப் அலி வரவேற்றார்.
இதில் மீரானியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் பீர்முகம்மது, செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி தலைவர் தமிழ்செல்வன், ஏர்வாடி மாடன் ஸ்கூல் தாளாளர் ஹாஜாமுகைதீன், சிங்கம்பத்து இமாம் யூசுப், நகர திமுக துணை செயலாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினர்.
மேலப்பாளையம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜமால் முகம்மது நன்றி கூறினார்.
- அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு:
சேலத்தில் அகில இந்திய சிலம்ப போட்டி நடந்தது. இதில் 700 பேர் கலந்துகொண்டனர். இதே போல் ஈரோடு சிஎஸ்ஐ அரங்கத்தில் ஈரோடு ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சூரியா, சர்வேஷ், அபிநயா, துர்கா முதல் பரிசையும் குமரவேலு, பாலாஜி, வெற்றிவேலன் 2-ம் பரிசையும், 4 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.
இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். இதில் பவித்ரா தேவி முதல் பரிசையும், கனிஷ்கா, சந்தோஷ் 2-ம் பரிசையும் 17 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய செங்குந்தர் மண்டபத்தில் நடந்தது. ஜான்சன்ஸ் நிறுவனங்களின் தலைவரும் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஜான்சன்ஸ் நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிந்தியா பாபு தலைமை வகித்தார். வக்கீல் ஜனார்த்தனன், ஹைடெக் ரோட்டரி சங்கத்தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தினார்கள்.
As per the orders from Honourable CM Thiru Edappaadi K Palaniswami, from next week onwards, Girl Students are to be taught Karate and other self defence Martial arts at Government Schools.
— AIADMK (@AIADMKOfficial) October 19, 2018