என் மலர்
நீங்கள் தேடியது "Kashi"
- தற்போது அந்த வீட்டில் பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
- பாரதி சிலையுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இங்கு மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது:
பாரதியார் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் பாரதியார் எப்படி தனது கவிதைகள் மூலம் அணுகினார் என்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும்.
பாரதி வாழ்ந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன்கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஆன்மீக சுற்றுலா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியக் கோரிக்கையின் போது, 60 வயதிற்கு மேல் 70 வயதுக்கு உள்ளே இருக்கும் 200 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தோம்.
அதற்குரிய 5 லட்சம் ரூபாய் செலவுத் தொகையை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த பயணத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் முதியவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிர்காலம் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதியை பெற்று காசிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
- காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள 5-வது குழு வாரணாசி சென்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 216 பேர் கொண்ட 5-வது குழு வாரணாசி சென்றது. வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஸ்வநாதரை தரிசித்த பின் அன்னை அன்னபூரணி ஆலய வளாகத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியின் பல்வேறு பாரம்பரிய இடங்களுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை, காவிரி சங்கமத்திற்கு இணையானது என காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன் இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், தரிசிக்கவும், தமிழ் நாட்டின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். தற்போது பக்தர்கள் கூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வருகையால் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவும் அதிகரித்துள்ளது.
விஸ்வநாதர் கோவில் முன்பு மிகக் குறுகலாக, சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் மோடி, கோவிலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் தற்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதோடு பிரசாதமும் கொடுக்கப்படுகிறது.
விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலேயே உள்ள மணிகர்னிகா தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாராயணங்களும், ஆன்மீக கச்சேரிகளும் நடைபெற வசதியாக தமிழக கோவில்களில் உள்ளதை போன்று விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
காசி ஆன்மீகப் பயணத்தில் அா்ச்சகா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அா்ச்சகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசு விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை மூலம் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தகுதி வாய்ந்த 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். இதனால் பூசாரிகள், அா்ச்சகா்களின் பக்தி அனுபவம் அதிகரிப்பதுடன், பக்தா்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு செய்யவும், ஏனைய பக்தா்கள் காசி யாத்திரை சென்று வர அனுபவ ரீதியாக சொல்லவும் உதவியாக இருக்கும். மேலும் நாள் முழுவதும் கோவிலில் பணியாற்றும் அா்ச்சா்களுக்கு இந்த ஆன்மிகப் பயணம் புத்துணா்ச்சி அளிப்பதாக இருக்கும். 200 பக்தா்கள் செல்லும் ஆன்மிக பயணத்தில், அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- சக்திக்கு மீறி செய்யும் தானம் விஷத்திற்கு சமம்.
- கடமைக்காக செய்யும் தீர்த்த யாத்திரையால் எந்த பலனும் கிடைக்காது.
காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை.
ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.
காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு.

ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.
மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும்.
அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.
கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும்.
சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.
ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:
ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும்.
இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது.
ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்).

மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது.
வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து.
ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்.
கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம்.
பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.
வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.
விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.
ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.
அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.
பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது.
தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம்.
ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும்.
தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.
- கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு.
- 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர். சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஐ.ஆர். சி.டி.சி. மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாரணாசி நகரை பொறுத்தவரையில் 27 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.
- கங்கை கரையில் அதிகமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
வாரணாசி:
இந்துக்களின் புனித நகராக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி திகழ்கிறது. இங்கு கங்கையில் நீராடுவதற்காகவும், காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். அந்த வகையில் நாளை (புதன்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். அதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் செய்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவரும், வாரணாசி துணை போலீஸ் கமிஷனருமான சரவணன் கூறியதாவது:-
வாரணாசி நகரை பொறுத்தவரையில் 27 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இங்கு முக்கியமான நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து 22 லட்சம் மக்கள் வருகை தருவார்கள். இவர்கள் அனைவருக்கும் வசதிகளையும் நாங்கள் செய்து கொடுத்து வருகிறோம்.
குறிப்பாக நாளை சிவராத்திரியை முன்னிட்டு 50 லட்சம் மக்கள் இங்கு வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாரணாசி நகருக்கு 30 கிலோ மீட்டருக்கு வெளியே நிறுத்தப்படுகிறது. அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்காகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு உள்ளது. வாரணாசிக்கு புறநகர் பகுதியில் இருந்து கோவிலுக்கும், கங்கை நதிக்கும் பஸ்களில் இலவசமாக அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் வயதானவர்கள், நோயாளிகளுக்கு அவர்களை கோவில் செல்வதற்கு சிறப்பு வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக படித்துறைகளிலும் கூடுதல் பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளது. இங்கு 84 படித்துறைகள் உள்ளன. அதில் 21 படித்துறைகள் பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் நீராடுவார்கள். எனவே கங்கை கரையிலும் அதிகமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.