என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kerala congress"
- கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பல புகார்கள் வந்தன.
- கொட்டும் மழையில் மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
அரியானாவில் உள்ள கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என்று இந்தாண்டு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், கொட்டும் மழையில் கர்னல் நகரில் உள்ள மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வரும் வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று யார் சொன்னது. ஹரியானாவில் உள்ள கர்னல் நகரில் போர்க்கால அடிப்படையில் மோசமான சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. சிறப்பான வேலை நரேந்தர் ஜி" என்று கேரளா காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
- கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது.
- இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,
ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.
- போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.
- நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.
- நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.
- உங்களுக்கு ரெயிலில் இருக்கை கிடைத்தாலும், ரெயில் விபத்து, 'இருக்கை விழுந்து விபத்து' போன்றவற்றில் நீங்கள் கொல்லப்படலாம்"
என்று பதிவிட்டுள்ளது.
- நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கிறது.
- ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வுத்தாள் லீக் ஆனது என்ற குற்றச்சாட்டிலிருந்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றார்கள். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 67 மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து கூட்டி கழித்து பார்த்தாலும் எடுக்க முடியாத 718 மற்றும் 719 போன்ற மதிப்பெண்களை ஏராளமானோர் பெற்றிருந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் கேள்வி எழுப்பியபோதுதான், கடந்த முறை சில மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத சுமார் 30 நிமிடங்கள் வரை காலதாமதம் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது என தேசிய தேர்தல் முகமை (NTA) தெரிவித்தது. இதனால் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான திமுக நிலைப்பாட்டை இந்த முடிவு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. நுழைவுத் தேர்வு சமூக நீதி மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்வது தான் சரி என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,
"நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கும் ஒரு முறை என தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உள்ளூர் நடுத்தர பள்ளிகளில் படித்து வரும் ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது. 2017-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு எழுப்பி வரும் குரல் இதுதான். இதே போன்ற புள்ளிவிவரங்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் சேகரிக்கப்பட வேண்டும்" என்று கேரள காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
- ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
- இந்தக் கோரிக்கையை ரெயில்வே அமைச்சகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தது.
திருவனந்தபுரம்:
இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி புகார் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் கேரள காங்கிரஸ் உதவி கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
இதுதொடர்பாக, கேரள காங்கிரஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிக கட்டணம் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் பெரும்பாலும் காலியாகவே இயங்கி வருகிறது. இந்திய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ரெயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூட்ட நெரிசலில் மக்கள் ரெயிலில் பயணிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட கேரள காங்கிரஸ், அந்தப் பதிவில் அமிதாப் பச்சனை டேக் செய்துள்ளது.
அதில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரபலங்களின் கோரிக்கைகளுக்கு உடனே பதிலளிப்பார் என்பதால் சமூக காரணங்களுக்காக இந்த விவகாரம் குறித்து அமிதாப் பச்சன் டுவீட் செய்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளது.
Dear @SrBachchan,
— Congress Kerala (@INCKerala) May 30, 2024
We need a small help from you. Crores of ordinary people are forced to travel like this. Even the reserved compartments are packed with people. It is 52°C in North India, and this video is from Gorakhpur where the UP CM hails from.
Our population grew by 14 Cr… pic.twitter.com/B5PaS1dmEq
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்