என் மலர்
நீங்கள் தேடியது "Kochi"
- சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது.
- மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.
மலையாள திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களாக இருப்பவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கின்றன. எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் என்றுமே போட்டி பொறாமை என்று இருந்ததே இல்லை.
அவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவர்களுக்குள் இருக்கும் நட்பு பந்தம் மிகவும் அழகானது.
சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மமூட்டி மற்றும் மோகன்லால் அதில் பங்கேற்றனர். மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.
மோகன்லால் ஆடிய நடன வீடியோ மோகன்லால் ரசிகர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியது. அதைப் பார்த்த ஷாருக்கான் அவரது எக்ஸ் பக்கத்தில்
'இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நான் உங்களைப்போல் பாதி நன்றாகச் ஆடியிருக்க விரும்புகிறேன். லவ் யூ சார் மற்றும் உங்கள் வீட்டின் இரவு உணவிற்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒர்ஜினல் ஜிந்தா பண்டா" என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.
அதற்கு மோகன்லால் பதிலளிக்கும் வகையில் அன்புள்ள @iamsrk, உங்களைப் போல் யாரும் நடனமாட முடியாது! நீங்கள் எப்போதும் உங்கள் உன்னதமான, ஒப்பற்ற பாணியில் OG ஜிந்தா பண்டாவாக இருப்பீர்கள். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. மேலும், வெறும் இரவு உணவா? காலை உணவுக்கு மேல் ஏன் ஜிந்தா பண்டாவை விரும்பக்கூடாது? என்று பதிலலித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த விருது வழங்கும் விழாவில் மம்மூடிக்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் அதை மோகன்லால் அவருக்கு வழங்கினார். விருதை வாங்கி கொண்டு மமூட்டி "நான் இந்த திரையுலகில் 42 வருடங்களாக இருக்கிறேன். என்னோடு இத்தனை காலங்கள் பயணித்து தோளோடு தோள் நின்று இருப்பது மோகன்லால் ஆவார், அவர் திறமையான நடிகர், நல்ல நடனமாட கூடியவர் எல்லாத்தையும் சிறப்பாக செய்பவர்" என்று கூறிய பிறகு மம்மூட்டி மோகன்லால் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மோகன்லால் அதே அன்போடு மம்மூட்டி கன்னத்திலும் முத்தம் கொடுத்தார். இப்புகைப்ப்டம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
- கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.
கேரளா மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதில், சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
9 பேரை கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.
மேலும், கோழிக்கோடு அருகே ராதாபுரத்தில் முதியவர்கள் இருவரை கடித்துவிட்டு தெருநாய் ஓடியுள்ளது.
- பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை.
- விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச துறை முகமாக செயல்படும் இங்கு மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இங்குள்ள வல்லார்பாடம் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அத்துமீறி நிழைந்தார்.
கொள்கலன் முனை யத்தின் மேற்கு பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து புகுந்த அந்த நபரை பாது காப்பு படையினர் பிடித்தனர். பின்பு அவரை முளவு காடு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த இலியா எகிமோவ்(வயது26) என்பது தெரியவந்தது.
அவர் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு கேரளாவுக்கு வந்ததாகவும், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த தாகவும், கூகுள் மேப்பை பார்த்து வந்தபோது வழி மாறி கொச்சி துறைமுகத்தின் கொள்கலன் முனை யத்துக்குள் நுழைந்து விட்ட தாகவும் விசாரணையில் ரஷ்ய வாலிபர் தெரி வித்துள்ளார். ஆனால் அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை. எர்ணாகுளத்துக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் மட்டும் வைத்தி ருந்தார். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர் கேரளா வந்தது எப்படி? எதற்காக துறைமுக பகு திக்குள் நுழைந்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவரிடம் மத்திய உளவு அமைப்புகளான 'ரா' மற்றும் 'ஐ.பி.' அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ரஷ்ய வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு எர்ணாகுளம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். கொச்சி துறை முகத்துக்குள் ரஷ்ய வாலிபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
- விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.
அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Kochi-bound Air India Express flight with 179 passengers makes emergency landing in Bengaluru after engine catches fire@AirIndiaX @BLRAirporthttps://t.co/8FWyotoh1v pic.twitter.com/jifx6nQSYh
— ChristinMathewPhilip (@ChristinMP_) May 19, 2024
- கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோவை மறித்து பிடித்த பெண் போலீஸ் அதிகாரி.
- சுஜித் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்தவர் சுஜித். இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுஜித், ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.
ஆனால் சுஜித் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இருந்த போதிலும் வழக்கு விசாரணைக்கு அவர் வரவில்லை. ஆகவே அவரை கண்டுபிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டனர்.
போலீஸ் சீருடையில் வந்தால் சுஜித் உஷாராகிவிடுகிறார். இதனால் அவரை பிடிக்க முடியாமலேயே இருந்தது.
ஆகவே அவரை மாறுவேடத்தில் சென்று பிடிக்க பெண் போலீஸ் அதிகாரி கிருஷ்ணா திட்டமிட்டார். அதன்படி அவர் சாதாரண உடையணிந்து சுஜித்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.
இந்நிலையில் சுஜித் ஆட்டோவில் வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து ஆட்டோ வந்த சாலையில் பெண் போலீஸ் அதிகாரி கிருஷ்ணா காத்திருந்தார்.
சுஜித் வந்த ஆட்டோவை நிறுத்துமாறு அவர் சைகை காட்டினார். டிரைவரும் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது ஆட்டோவுக்குள் அதிரடியாக ஏறிய கிருஷ்ணா, அதில் இருந்த சுஜித்தை அதிரடியாக பிடித்தார்.
மேலும் அவரது 2 கைகளையும் துணியால் கட்டினார். சுஜித்தை தப்பிவிடாமல் அழுத்தி பிடித்துக்கொண்டு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
டிரைவரும் ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். அங்கு ஆட்டோ வந்ததும், சக போலீசார் வந்து சுஜித்தை பிடித்து போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகே சுஜித்தை நடுரோட்டில் ஆட்டோவை மறித்து பிடித்த கிருஷ்ணா பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவரை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், சினிமா பாணியில் தனி ஆளாக சென்று பிடித்து கைகளை கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. கைது செய்யப்பட்ட சுஜித் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
- வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர்.
கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் ஏற விமான நிலையத்துக்கு வந்த 42 வயதான மனோஜ் குமார் என்பவரது பையையும் அதிகாரிகள் சோதித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்தபோது, எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
அவர் எதோ ஜோக் அடிப்பது போல் இதைக் கேட்டிருந்தாலும், வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாணை நடந்த அவரை உள்ளூர் போலீசிடம் பாதுகாப்பு அதிகரிகள் ஒப்படைத்தனர்.
- எருவேலி அரண்மனை சதுக்கத்திற்கு அருகில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லாத வீடு அமைந்துள்ளது.
- முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புகள் அப்படியே காணப்பட்டன.
கேரளாவில் 20 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டில் குளிர்சாதனப் பெட்டிக்குள் கவரில் சுற்றப்பட்ட நிலையில் மண்டை ஓடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சியின் சோட்டானிக்கரையில் எருவேலி அரண்மனை சதுக்கத்திற்கு அருகில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லாத வீடு அமைந்துள்ளது. கொச்சியில் வசிக்கும் மருத்துவரான மங்களசேரி பிலிப் ஜானுக்குச் சொந்தமான சொத்து இது.

பூட்டிய வீட்டில் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் அளித்ததையடுத்து, பஞ்சாயத்து உறுப்பினர் கோரிக்கையின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, குளிர்சாதன பெட்டியில் எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்சங்களின் வயது இன்னும் காவல்துறையால் தீர்மானிக்கப்படவில்லை.
முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புகள் அப்படியே காணப்பட்டன. அந்த மண்டை ஓடு மனிதனுடையது என்பது பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு பல ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் சோட்டாணிக்கரை எஸ்.எச்.ஓ., தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மண்டை ஓட்டை கொண்டு வந்து வீட்டுக்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வளாகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளரான மருத்துவரையும் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
- அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
- இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் உயிரிழப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலுர் பகுதியை சேர்ந்தவர் நசீர். காய்கறி வியாபாரி. இவரது மகன் தோயிப் நசீர் (வயது26). எம்.ஏ. பட்டதாரியான தோயிப், தனது தந்தைக்கு உதவியாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க தந்தை நசீர் முன்வந்தார். இதையடுத்து தந்தை-மகன் இருவரும் அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர்.
நசீரின் கல்லீரலில் இருந்து ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவரது மகன் தோயிப்புக்கு பொருத்தப்பட்டது. இந்தநிலையில் அறுவை கிச்சைக்கு பிறகு நசீரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நசீர் பரிதாபமாக இறந்துவிட்டார். தந்தையிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப், அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் தோயிப்பும் பரிதாபமாக இறந்தார்.
மகனுக்கு கல்லீரல் தானம் கொடுத்த நசீர், அவரிடமிருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப் என தந்தை-மகன் இருவரும் பலியான சம்பவம் கொச்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
- இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
கொச்சி:
11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.
அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.
புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை எரித்து அழிப்பதற்காக எந்திரங்கள் உள்ளன. பல மாநிலங்களில் இவற்றை பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நிறுவி இருக்கிறார்கள்.
கேரள மாநிலத்திலும் இதேபோல பல பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை எரிக்கும் எந்திரங்களை வைத்துள்ளனர்.
கொச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரம் வைக்கப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் வைக்கப்பட்ட நாப்கின் எந்திரங்களுக்கான செலவு தொகைகளை கணக்கிட்டு நிதி தணிக்கை குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதில் பள்ளிகளில் நாப்கின் எந்திரங்களை பொருத்த ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் செலவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்திற்கான செலவுக்கு நிதி தணிக்கை துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், இதில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால் அதுபற்றி விசாரணை நடத்தவும் தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருந்தார்கள்? என்பது இனிமேல் தான் தெரியவரும். #SanitaryNapkinMachines