என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai"

    • கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
    • யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடியில் அருகே ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும் போது,

    பத்திரிகையாளர்களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்ச்சை க்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்கு ரியது, அரசியல் கட்சித் தலைவருக்கு இது அழகல்ல. பத்திரிகையாளர்களை மதிக்கும் பண்பை முதலில் அவர் கற்றுக் கொள்ள வேண்டும் .

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தி ல் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக ளை கண்டறிந்தது, அதே வேளையில் இந்த சம்பவத்தில் தேசிய மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ப தால் தான் இந்த வழக்கை என்ஐ ஏ விற்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்,

    இந்த பிரச்சனையில் முறையான விசார ணை நடந்து கொண்டிருக்கும்போது தேவையில்லாத கருத்துக்க ளை அரசியல் தலைவர்கள் சொல்ல வேண்டியதில்லை,

    திருமாவளவன் வைகோ உள்ளிட்டவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என ஹெச். ராஜா சொல்லி இருப்பது நகைச்சுவையாக உள்ளது, ஹெச்.ராஜா கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,

    கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது, இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிற்கு வயதாகி விட்டாலும் உணர்ச்சி வேகம் இன்னும் குறையவில்லை,அவர் இன்று வரை களத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார், அவரின் வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

    • 77 நிரந்தர தூய்மை பணியாளர்கள் நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.
    • மாடியில் வைத்துள்ள குடிநீர் தொட்டியில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியில் 131 தற்காலிக, 77 நிரந்தர தூய்மை பணியாளர்கள் நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களில் நிரந்தர பணியாளர்கள் 60 பேருக்கு நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு வெள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு 60 குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 8 மாதமாக கட்டிடத்தின் மாடியில் வைத்துள்ள குடிநீர் தொட்டியில் நீர்கசிவு ஏற்பட்டு, வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் குடும்ப த்தினர் கூறியதாவது:

    கடந்த 8 மாதமாக குடிநீர் தொட்டியில் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து வீடுகளுக்குள் வருகின்றன. இதனால் வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இதனால் வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்கு குடியேறி யுள்ளனர். நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளையும் தூய்மை செய்யும் எங்களுக்கு எங்கள் பகுதிக்கு தூய்மை பணி செய்ய நகராட்சி அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. இதனால் எங்கள் பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

    குடியிருப்பு கட்டிடங்களில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து நடைபாதைகளில் தண்ணீர் வழிந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த போது இக்குடியிருப்புகளை சீரமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக நகராட்சி ஆணையாளர் வினோத் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தெரிவித்தார். ஆனால் இன்று வரை எங்கள் பகுதியில் எந்த அடிப்படை பிரச்சனைகளும் நிறைவேற்றப்படாமல் நோய் தாக்கும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

    இக்குடியிருப்பை யொட்டி உள்ள கழிவுநீர் ஓடை செல்லும் பகுதி புதர் மண்டி உள்ளது. இதனால் புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன. இதோடு கரட்டுமேடு, வெள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் மொட்டை மாடியில் இரவு நேரங்களில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் ‌எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மர்மநபர்களை தேடி வருகிறர்கள்.
    • பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கோவை

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது ராமகிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 6½ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராமகிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே உள்ள கார்மல் நகரை சேர்ந்தவர் காணிக்கைமேரி ( 62). இவர் சிட்கோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 1¼ பவுன் மோதிரம், வெள்ளி செயின், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து காணிக்கை மேரி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறர்கள். 

    • தீபாவளி போனஸ் பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
    • தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 80,000 மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பஸ்நிலையம், கிழங்கு மண்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், உணவகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 20 டன்னுக்கு அதிகமாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 77 தற்காலிக, 140 நிரந்தர பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.300 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606 ஊதியமாக வழங்க தொகை நிர்ணயம் செய்திருந்ததை துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திடம் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மாதம் முதல் தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தாங்கள் 10 மாதங்களாக பணியாற்றியதற்கு தீபாவளி போனஸ் நகராட்சி பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

    ஆனால் நகராட்சி ஆணையாளர் அளித்த பதில் தூய்மை பணியாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில்: தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியம் வழங்கினால் எங்களின் பணி சுமை குறையும். இந்த ஆண்டு எங்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட சென்றால் எங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்காமல் எங்களை அலைக்கழித்து வருகிறார் என்றனர்.

    • கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    • கோவைக்கு காலை, 10.42-க்கும் வந்து செல்லும்.

    கோவை :

    வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக, வரும், 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறியிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்:05905), புதன் இரவு 8.50-க்கு அசாம் மாநிலம் திப்ருகர் சென்றடையும்.

    இதேபோன்று செவ்வாய்கிழமைகளில், அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்: 05906) வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். திப்ருகரில் இருந்து இன்று மற்றும் வரும் 8, 15-ந் தேதிகளில் இந்த சிறப்பு ெரயில் இயக்கப்ப டுகிறது.

    இந்த ெரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு ஒன்று, மூன்றடு க்கு-5, படுக்கை வசதி-11, பொது இரண்டாம் வகுப்பு-3, சரக்கு பெட்டி-1, என 21 பெட்டிகள் இணைக்கப ்பட்டுள்ளது. இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கன்னியாகுமரி-திப்ருகர் ெரயில், திங்கட்கிழமை காலை 4.12-க்கு கோவை ெரயில் நிலையம் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ெரயில், வெள்ளிக்கிழமை, கோவைக்கு காலை, 10.42-க்கும் வந்து செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • 3 பவுன் செயினை பறித்தார்.

    கோவை

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேர்மன்ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது 38).

    இவர் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார்.

    அவர் கண்இமைக்கும் நேரத்தில் லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்தார்.

    இதில் உஷாரான அவர் அந்த வாலிபரின் சட்டையை பிடித்தார். நிலைதடுமாறி அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.பின்னர் அவரை சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பேரூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராம்குமார் (26) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் 7 திருட்டு வழக்குகளும், மேற்கு அனைத்து மகளிர் போலீசில் போக்ேசா வழக்கும் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ராம்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில்
    • ரூ.50 ஆயிரம் பணத்துடன் மூதாட்டியின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை :

    கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த மர்மநபர் யாரோ மயிலாத்தாளின் கைப்பையைதிருடி தப்பிச் சென்றனர். அந்த கைப்பையில் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம், 4 சேலை, செல்போன் ஆகியவை இருந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பணத்துடன் மூதாட்டியின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை தினமும் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
    • இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    கோவை :

    காற்றாலை மின்உற்பத்தி யில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மொத்தம் 8,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை காற்று பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தமிழகத்தின் தினசரி மொத்த மின்தேவையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிக அளவில் பங்களிக்கும்.

    இந்த ஆண்டு காற்று பருவ காலம் மார்ச் மாதமே தொடங்கியது. காற்றின் வேகம் சீராக இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிக மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை தினமும் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    ஆடி மாதத்தில் தமிழகத்தின் தினசரி மின்நுகர்வில் 80 சதவீதத்துக்கு மேல் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் பங்களிப்பு செய்தது. இந்த ஆண்டு காற்று பருவகாலம் அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறை வடைந்ததாகவும் மொத்த மின் உற்பத்தி சிறப்பாக இருந்ததாகவும் மின்உற்பத்தியாளர்கள் தெரிவித் துள்ளனர்.இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:- எதிர்வரும் காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்க தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஆண்டு காற்று பருவ காலம் மார்ச் 15-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறை வடைந்துள்ளது. இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    மின்சாரத்தை வீண டிக்காமல் தமிழக மின்வாரியம் உரிய முறை யில் பெற்றுக்கொண்டது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பெறப்பட்ட மின்சாரத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை இதுவரை 2 தவணைகளாக மின்உற்பத்தி யாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையும் தொடர்ந்து வினியோகி க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார்.
    • தர்மராஜை போலீசார் கைது செய்த பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை :

    கோவை புலியகுளத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் தர்மராஜ் (வயது 22) என்ற வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார். பின்னர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். இதனையடுத்து அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தர்மராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தர்மராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சூலூர்:

    கருமத்தம்பட்டி அருகே கணியூர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பன்மாலை கண்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • கோவைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தார்.
    • நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை :

    ேகாவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா தர்காவில் புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக வேண்டியும், வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில் மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என 75 மாவட்டங்களில் 70 தர்காக்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளேன்.

    39-வது மாவட்டமாக இன்று கோவைக்கு வந்துள்ளேன். மிக அதிகமான தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும்.

    இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அ.தி.மு.க. தான். உலமாக்களுக்கு ஒய்வூதியம் வழங்கிய கட்சி அ.தி.மு.க.

    ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றிக்கும் மெக்கா மதினா செல்லவும், இஸ்லாமியர் வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அ.தி.மு.க. செய்து இருக்கின்றது. 21 ஆண்டுகள் இப்தார் நோன்பை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா .

    கோவைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தார். தி.மு.க. ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடக்கிறது.கோவை சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில்

    பாராளுமன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமையும்.பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • குப்பைகள் தரம் பிரிப்பை ஆய்வு செய்தனர்.
    • 14 நபர்கள் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டு, குப்பைகள் சேகரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்தனர்.

    கோவை :

    திடக்கழிவு மேலாண்மை மற்றும் வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய அந்தமானில் இருந்து மாவட்ட கவுன்சிலர்கள் கோவை வந்தனர். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 27-வது வார்டில் உள்ள நவ இந்தியா, எஸ்.டி.வி நகரில் ஆய்வு நடத்தினர்.கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். அந்தமான் நகரின் நகராட்சி சபை பிளேயர் துறைமுகத்தின் தலைவர் கவிதா உதயகுமார் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, லட்சுமி கணேசன், ரவிச்சந்திரன், வெற்றிவேல், பாண்டிசெல்வி, தர்மேந்திர நாராயணன், கருணாநிதி, செல்வராணி, உதவி பொறியாளர் வகாப் அடங்கிய 14 நபர்கள் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டு, குப்பைகள் சேகரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்தனர். உடன் மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா, தனபால், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×