என் மலர்
நீங்கள் தேடியது "ks alagiri"
- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழக காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
- அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 30-ந்தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து இளைஞர் ஒருவர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகளில் பாகுபாடு காட்டப்பட்டு விசாரணைகள் நியாயமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க என்.ஐ.ஏ. அமைப்புக்குத் தேவையான காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நியமிக்கவில்லை என்றால் விசாரணைக்குக் குந்தகம் ஏற்படுகிற நிலை ஏற்படும்.
இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழக காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31-ந்தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும்.
- தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது.
பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்தி திணிப்பிலிருந்து இந்தி பேசாத மக்களுக்கு அன்றைய பிரதமர் நேரு 60 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலும், தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சிகள் வழங்கிய சட்டப் பாதுகாப்பின்படியும் தான் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும். இதில் தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.
ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தருமபுரி டி.என்.சி. விஜய் மகாலில் மதியம் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.
- ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நினைவாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 கொடிக்கம்பங்கள் நிறுவும் நிகழ்ச்சியினை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தொங்கனூரில் ஸ்ரீ மகா சங்கரலிங்கம் பித்தன் பழனிவேல் சித்தர் 15-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி நடைபெற்ற யாக பூஜை, பழனிவேல் சித்தர் குருபூஜை ஆகியவற்றை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று காலை தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவிலில் மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தருமபுரி டி.என்.சி. விஜய் மகாலில் மதியம் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நினைவாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 கொடிக்கம்பங்கள் நிறுவும் நிகழ்ச்சியினை அவர் தொடங்கி வைக்கிறார்.
- தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.5.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதிக கட்டணம் வசூலித்தால் தேர்வுக்குழு அல்லது கட்டணக் குழுவிடம் புகார் அளிக்கலாம் என தேர்வுக்குழு செயலர் தெரிவித்திருந்தார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஒதுக்கீடு பெற்ற மாணவர்களிடம், தமிழகத்தில் கட்டணக்குழு நிர்ணயித்ததை விட ரூ. 3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டு அனைத்து சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டணக்குழு உயர்த்தியது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை செலுத்துகின்றனர்.
தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு ஆண்டு கட்டணம் ரூ.5.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் தேர்வுக்குழு அல்லது கட்டணக் குழுவிடம் புகார் அளிக்கலாம் என தேர்வுக்குழு செயலர் தெரிவித்திருந்தார். எனினும், கூடுதல் தொகையைச் செலுத்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்ப்பந்திப்பது பெற்றோரை வேதனையடையச் செய்துள்ளது. ரூ. 5 லட்சம் தான் செலவாகும் என்று நினைத்த பெற்றோரிடம், கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்வது எந்த வகையில் நியாயம்?
எனவே, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலிக்கின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை
- சத்தியமூர்த்தி பவனில் நேருவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழர்கள் என்றால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தமிழர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லலாமா?
கோவை குண்டுவெடிப்பில் கைதான இஸ்லாமியர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள்.
எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகளை கொண்டாடக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் ஒரே கருத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம்.
மதசார்பின்மை என்பதில் நாங்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சத்தியமூர்த்தி பவனிலும் நேருவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், டெல்லிபாபு, சிவராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும்.
- கொலைகாரர்களை வெளியே உலாவவிடுவது தவறு.
கிண்டி :
ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது;-
ஜவஹர்லால் நேரு, இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி. விவசாயம், பொருளாதார வளர்ச்சிக்கு அவர் நிறுவிய கொள்கைதான் காரணம். நேரு, இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு வந்திருக்கும்.
நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார்மயம் செய்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம். இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம்.
கொலைகாரர்களை வெளியே உலாவவிடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ?.
இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி?, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டுக்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு, கொள்கை வேறு. காங்கிரஸ்-தி.மு.க. இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்.
தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
- கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
- என்னை ‘பொருளாளர்’ என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர்.
சென்னை :
தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கையெழுத்துப் பெறப்பட்ட 62 மாவட்டத் தலைவர்களிடம், அந்தக் கடிதத்தை படித்துப் பார்ப்பதற்குகூட நேரம் கொடுக்காமல், அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது கூட தெரிவிக்காமல், அவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.
நெல்லையில் இருந்து வந்திருந்த கட்சியினரை எப்படி ஓடஓட விரட்டி அடித்தார்களோ, அதே பாணியில் தான் 62 மாவட்டத் தலைவர்களிடமும் வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.
'மாநில பொருளாளர்' என்கிற பெயரை மட்டும்தான் நான் வைத்திருக்கிறேனே தவிர, நான் பொறுப்புக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரையில், மாநிலத் தலைவர் என்ன செய்தார் என்று, எனக்கு கடுகளவும் தெரியாது. பொருளாளர் பதவியை மட்டுமே எனக்குத் தந்திருக்கிறார்களே தவிர, கட்சியின் கொடுக்கல்-வாங்கல் பற்றி சிறிதளவும் கூட என்னிடம் சொன்னது கிடையாது. கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் எப்போதுமே கலந்தாலோசித்தது கிடையாது. அதிகாரம் எல்லாமே தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அவரே தன்னிச்சையாக செய்து வருகிறார்.
இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து இருக்கிறேன். என்னை 'பொருளாளர்' என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர். அந்தப் பதவியை என்னிடம் இருந்து பறித்தால், எனக்கு எதுவும் ஆகப்போவது இல்லை. அந்தப் பதவி இல்லை என்று நான் கவலைப்பட போவதும் இல்லை.
ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்வேன். அதன்பிறகு, கட்சித்தலைமை என்ன முடிவு எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டை கூறுவதற்காகவே நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்தனர்.
- கே.எஸ்.அழகிரி தரப்பில் டெல்லி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் இது நேரடியாகவே எதிரொலித்தது. இதில் கே.எஸ்.அழகிரியுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால் இவர்கள் அனைவரும் கே.எஸ்.அழகிரியுடன் ஒன்றாக கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்தனர். பின்னர் அனைவரும் தனியாக சென்று இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் தனியார் ஓட்டலிலும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி இந்த தலைவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் மோதல் முற்றியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று வரும் மோதல் சம்பவத்தை டெல்லி தலைமையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த நிலையில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு செயல்படும் எதிரணி தலைவர்கள் நாளை டெல்லி சென்று கே.எஸ்.அழகிரி மீது புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களிடமும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடமும் கே.எஸ்.அழகிரி மீது அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூற உள்ளனர்.
சத்தியமூர்த்தி பவனில் மோதல் சம்பவம் நடைபெற்ற அன்று, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என்று எதிரணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டை கூறுவதற்காகவே நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்தனர்.
புதிதாக வட்டார தலைவர் பதவியில் போடப்பட்டுள்ள ஒருவர், திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோது கருப்பு கொடி காட்டியவர் ஆவார். பல பதவிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது. இதற்கு நியாயம் கேட்டு வந்தவர்களே தாக்கப்பட்டு உள்ளனர்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அங்கீகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனை எடுத்துச் சொல்ல வந்தவர்கள்தான் தாக்கப்பட்டுள்ளனர். கே.எஸ்.அழகிரியே ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
முன்னதாக நடந்த கூட்டத்திலும் கே.எஸ்.அழகிரி நடந்துகொண்ட விதம் சரியானதாக இல்லை. அந்த கூட்டத்தில் அவர் பேசிய விவரங்களையும், சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் நடந்து கொண்ட விதம் குறித்தும் டெல்லியில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் கே.எஸ்.அழகிரியின் பதவி பறிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகள் பலரும் போர்க்கொடி தூக்கி இருப்பதும், நாளுக்கு நாள் அது வலுவடைந்து கொண்டே செல்வதும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கே.எஸ்.அழகிரி தரப்பிலும் டெல்லி மேலிடத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்குநேரியில் இருந்து புறப்பட்டு சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட உள்ளது.
இதனால் மோதலுக்கு காரணமான நாங்குநேரி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கே.எஸ்.அழகிரி 2019-ம் பிப்ரவரி 8-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.
- காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது.
புதுடெல்லி :
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரசில் தற்போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கட்சி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர்.
இதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீது புகார் கூறப்பட்டது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் இரு அணியாக சென்று இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இது காங்கிரசில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டனர்.
அவர்கள் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்க சென்றதாக கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது, தமிழக காங்கிரசில் தற்போது நிலவும் கோஷ்டி பூசல் பற்றியும், இதற்கெல்லாம் நெல்லை மாவட்ட தலைவரை நியமித்ததில் கே.எஸ்.அழகிரி பாரபட்சமாக செயல்பட்டதே காரணம் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் பேசியதாக தெரிகிறது. கட்சி தொடர்பான மேலும் சில விஷயங்களையும் அவர்கள் தலைவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், 'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றது முதல் கடந்த 15-ந் தேதி வரை எந்தவிதமான கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகவும் சாதுரியமாக செயல்பட்டு வந்தார். இதனை அண்மையில் நடைபெற்ற கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் விழாவில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகவும் பெருமையுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீர் கோஷ்டி பூசல் ஏற்பட்டு, முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
- நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
மூலக்கரைப்பட்டி:
நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை கேட்பதற்காக நாங்கள் 50 பேர் வாகனத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றிருந்தோம். நாங்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைப்பின் பேரில் செல்லவில்லை, அங்கு அவரை சந்தித்து பேசவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவரை சந்தித்து பேச நேரம் கேட்டோம். 4 மணி நேரம் காக்க வைத்து விட்டு மாநிலத் தலைவர் சந்திக்காமலேயே புறப்பட்டு சென்றார்.
அப்போது அங்கு இருந்த அவருடைய ஆதரவாளர்கள் எங்களை அரிவாள், கம்பு மூலம் தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் எங்கு போவது என்று சிதறி ஓடினோம். அவர்களது செயல் வேலியே பயிரை மேயும் நிலை அங்கு ஏற்பட்டது. நாங்கள் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறோம். தற்போது மாநில தலைவருடைய செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்தியில் உள்ளோம். உடனடியாக கட்சி தலைமை மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், சுப்பிர மணியன், வேல்முருகன், மாரிமுத்து, மயில் ராஜா, வின்சன், சுப்பிரமணி, ஆதவ், தாமோதரன், ஊசி காட்டான், வன்னி நாச்சி யார், மாடசாமி செட்டியார், ருக்மணி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பா.ஜனதாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அழகிரி தலைமையால் முடியவில்லை.
- பா.ஜனதாவின் வலிமையான தலைவர்களால் அந்த கட்சி நாளுக்கு நாள் ஏற்றமடைந்து வருகின்றன.
புதுடெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் மாநில தலைவர்கள் தங்க பாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் டெல்லி சென்றனர்.
அங்கு முகாமிட்டு இருக்கும் இந்த தலைவர்கள் கார்கேவை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அடிதடி சண்டை குறித்தும் அதற்கான முக்கிய காரணங்களையும் அவரிடம் எடுத்து கூறினார்கள்.
அதுமட்டுமல்லாமல் அழகிரி பொறுப்புக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையவில்லை. அதற்கு மாறாக பா.ஜனதா வளர்ச்சி அடைந்துள்ளது. பா.ஜனதாவின் வலிமையான தலைவர்களால் அந்த கட்சி நாளுக்கு நாள் ஏற்றமடைந்து வருகின்றன.
ஆனால் பா.ஜனதாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அழகிரி தலைமையால் முடியவில்லை. அந்த கட்சியின் கருத்துக்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கவும் இயலவில்லை.
வலிமையான தலைவரை நியமிக்க வேண்டும். பா.ஜனதா வேகமாக வளருகிறது. அதற்கு பதிலடி கொடுத்து கட்சியை வளர்க்கும் வகையில் அழகிரி தலைமை இல்லை. எனவே தலைமையை மாற்றுவது தான் காங்கிரசின் வளர்ச்சிக்கு உதவும்.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய நேரத்தில் செயல்பாடு இல்லாமல் கட்சி முடங்கி கிடக்கிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட கார்கே தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் இப்போது எழுப்பாதீர்கள்.
ஏனெனில் ராகுல் காந்தி நடைபயணம் நடந்து வருவதால் இப்போது எல்லோரது கவனமும் அதில்தான் இருக்க வேண்டும்.
மேலும் இந்த விசயத்தில் நான் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. ராகுல் நடைபயணம் முடிந்ததும் அவருடன் ஆலோசித்த பிறகு தான் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகள் நியமனம் போன்றவை நடைபெறும் என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து சோனியா காந்தியை சந்திக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் தங்கள் முயற்சிகள் வெற்றி பெறாததால் தலைவர்கள் 4 பேரும் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி இருக்கிறார்கள்.
இதற்கிடையில் நடந்த சம்பவங்கள் பற்றி ஏற்கனவே அறிக்கை அனுப்பி விட்ட நிலையில் தன்மீது எதிர்தரப்பினர் கார்கேவிடம் புகார் தெரிவித்துள்ளதால் அதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கே.எஸ். அழகிரியும் முடிவு செய்துள்ளார்.
இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அழகிரியும் டெல்லி சென்று கார்கேவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
- கட்சியின் தலைவர் மற்றும் கட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் உதயநிதி தாராளமாக அமைச்சராக வரலாம்.
- மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி. கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளார்.
சென்னை:
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று சொந்த கட்சியினர் வற்புறுத்தி வரும் நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரசும் இதை ஆதரித்துள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் தாராளமாக அமைச்சராக வரலாம். கட்சியின் தலைவர் மற்றும் கட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர் தாராளமாக அமைச்சராக வரலாம்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி. கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளார். அமைச்சர் ஆவதற்கான முழுத்தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஆனால் அமைச்சர் ஆவதற்கு அவர் விருப்பப்பட வேண்டும். கட்சியினர் விரும்புகிறார்கள். இனி அவர் விரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.