என் மலர்
நீங்கள் தேடியது "laborer killed"
- கதிரேசன் பட்டணம் அருகே வந்த போது சாலையை கடக்க முயற்சி செய்தார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை மோதியது எந்த வாகனம்? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மதுக்கரை சீராப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சேலம்-பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். பட்டணம் அருகே வந்த போது சாலையை கடக்க முயற்சி செய்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கதிரேசன் மீது மோதியது. பின்னர் நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை மோதியது எந்த வாகனம்? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- கருப்பன் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கருப்பன் (வயது 68) தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக டிராக்டர் டிரைவரான புதுப்பட்டையை சேர்ந்த வேலு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்த்திக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- லாரி மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கோவை,
சிவகங்கை மாவட்டம் வெட்டிகுளத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சித்தாபுதூர் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனது மனைவி சின்னப்பொண்ணுவுடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி சின்னப்பொண்ணுவுடன்(55), இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சின்ன பொண்ணு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்
- வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்
உடுமலை :
உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 52). இவர் வேலை நிமித்தமாக சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.ஜி.வி.ஜி. கல்லூரி அருகே வந்த போது பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஈஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு எதிரே சந்தைப்பேட்டை தெரு அமைந்துள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது ஒரு சாக்கு மூடை ஒன்று ரத்தம் கசிந்த நிலையில் கிடந்துள்ளது.
அந்த பகுதியில் ஏராளமான இறைச்சி கடைகள் இருப்பதால் யாராவது கழிவுகளை கொட்டிச் சென்று இருக்கலாம் என்று நினைத்தனர். ஒருசிலர் கொலையாக இருக்கலாம் என்றும் கூறினர்.
இதையடுத்து அச்சத்தில் உறைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக எதிரே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்க்கு சென்று தகவல் அளித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சாக்கு மூடை கிடந்த இடத்திற்கு சென்று அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் அதே பகுதியில் மைக் செட் கடை வைத்திருக்கும் பிரகாஷ் (வயது 48) என்பவர் முகம், தலை, உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பிரகாசுக்கு திருமணமாகவில்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்ததும், பின்னர் அந்த வேலைக்கு செல்லாமல் தனது தந்தையுடன் மைக் செட் போடும் தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.
மேலும் தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அத்துடன் கொலையாளிகள் அவரை கொன்று சாக்கு மூடைக்குள் வைத்து வீசிச் சென்றிருப்பதன் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக் கப்பட்டும், தடயவியல் நிபுணர்ர்கள் வந்தும் கொலையில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
- அவரது நண்பர் தங்கவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டு சென்று விட்டு மீண்டும் தும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர் கருக்கன் மகன் அழகேசன் (வயது 48). தொழிலாளி.இவர் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் தங்கவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டு சென்று விட்டு மீண்டும் தும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தங்கவேலு ஓட்டினார். மோட்டாம்பட்டி சாலையில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அழகேசன், தங்கவேல் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அழகசேன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.