என் மலர்
நீங்கள் தேடியது "Labour"
- ஆறுமுகம் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
- ஆறுமுகம் உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
நெல்லை:
பாளையை அடுத்த சீவலப்பேரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
குடிப்பழக்கம்
ஆறுமுகம் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதற்காக நெல்லையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஆறுமுகத்தின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னையில் வசித்து வரும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோருடன் வசித்து வந்த ஆறுமுகம் மதுரையில் வசித்து வரும் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு நேற்றுமுன்தினம் இரவு ஊருக்கு வந்துள்ளார்.
தற்கொலை
அதன் பின்னர் நேற்று திடீரென வீட்டிலிருந்து மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலன் சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
- பாலாஜி அன்ட் கோ உரிமையாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் மத்திய அமைச்சரகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பாலன்(வயது 60). இவர் சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் அங்கு இறந்துவிட்டார். அவரை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உரிய வசதி இல்லாத நிலையில், அவரது மனைவி லட்சுமி தங்கம் மற்றும் அவர்களது உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட பொருளாளரும், பாலாஜி அன்ட் கோ உரிமையாளருமான செட்டிகுளம் பாலகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பாலாஜி ஆகியோர் மத்திய அமைச்சரகத்தை தொடர்பு கொண்டு பேசினர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான வள்ளியூர் ஹவுசிங் போர்டில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த மத்திய, மாநில அரசுக்கும் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், நரேந்திர பாலாஜி ஆகியோருக்கும் பாலன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
- முத்து மாரியப்பனுக்கும், மாயகிருஷ்ணனுக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது.
- 4 பேரும் சேர்ந்து எட்டப்பனை தாக்கி கீழே தள்ளி அவரை வெட்ட முயற்சித்துள்ளனர்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் எட்டப்பன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மகன் முத்து மாரியப்பன் (24) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (20) என்பவருக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துமாரியப்பன் தற்போது ஜெயிலில் உள்ளார். இதனால் முத்துமாரியப்பனை ஜாமினில் வெளியே எடுக்கும் முயற்சியில் அவரது தந்தை எட்டப்பன் வக்கீலை பார்த்து முயற்சி செய்து வந்துள்ளார்.
இதை அறிந்த குலசேகர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்,அவரது தந்தை முருகன் (50), கப்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜ் (46) உள்பட 4 பேர் குலசேகர நல்லூர் வடக்கு தெருவில் வைத்து அங்கிருந்த எட்டப்பனை தாக்கி கீழே தள்ளி வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது எட்டப்பன் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து எட்டப்பன் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட மாயகிருஷ்ணன், முருகன், ரவிராஜ் மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சரஸ்வதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரால் வீட்டு வேலைகளை மேற்கொள்ள முடியவில்லை.
- வெளி வேலையுடன் சேர்த்து வீட்டு வேலையையும் கவனிக்க முடியவில்லை என்று அடிக்கடி முருகராஜ் கூறி வந்துள்ளார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் மேலபண்டாரபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகராஜ் (வயது53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (49). இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவரால் வீட்டு வேலைகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து முருகராஜ் வீட்டு வேலைகளையும் கவனித்து வந்தார். இதில் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வந்தது. வீட்டு வேலைகளையும், வெளி வேலைகளையும் கவனிக்க முடியவில்லை என்று அடிக்கடி கூறி வந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை முருகராஜ் வீட்டின் முன்புள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் கூரையில் உள்ள கம்பில், நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- டி.என்.புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த பாதுஷா கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார்.
- ஊருக்கு வருவதற்காக கேரளா அரசு பஸ்சில் பாதுஷா ஏறினார்.
நெல்லை:
புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பாதுஷா(வயது 40). இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு கேரளாவில் இருந்து ஊருக்கு வருவதற்காக புறப்பட்ட அவர், கேரளா அரசு பஸ்சில் ஏறினார். இன்று அதிகாலை தென்காசி பஸ் நிலையத்திற்கு பஸ் வந்து நின்ற நிலையில், பாதுஷா மட்டும் இறங்கவில்லை. அவரை கண்டக்டர் எழுப்ப முயன்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த செவிலியர், பாதுஷாவை சோதனைசெய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருமாள் தனது மாமியார் ராசம்மாளுக்கு ரூ.4 லட்சம் கடனாக கொடுத்தார்.
- சங்கரபாண்டி, சேர்மதுரை ஆகியோர் பெருமாளை சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே மூன்றடைப்பை அடுத்துள்ள மாயநேரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மாமியார் ராசம்மாளுக்கு ரூ.4 லட்சம் கடனாக கொடுத்தார்.
தற்போது பெருமாள் புதியதாக வீடு கட்டி வருவதால், மாமியார் ராசம்மாளிடம் சென்று கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவில் மாயநேரியில் உள்ள சுடலை கோவில் அருகே பெருமாள் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராசம்மாளின் மகன்கள் சங்கரபாண்டி (40), சேர்மதுரை (35) ஆகியோர் எங்களது தாயாரிடம் எப்படி பணத்தை கேட்கலாம் என்று கூறி பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சங்கரபாண்டியும், அவரது தம்பி சேர்மதுரையும் சேர்ந்து மைத்துனரான பெருமாளை முள் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கரபாண்டி, சேர்மதுரையை தேடி வருகின்றனர்.
- விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
- விபத்து குறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் விசாரணை நடத்தி வருகிறார்.
வள்ளியூர்:
நெல்லை மேலப்பாளை யத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 26). பூக்கட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மேலப்பாளையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
விபத்தில் பலி
அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் அப்துல் கரீம், அல்தாரிக் ஆகிய 2 பேரும் அவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கணேசன் ஓட்டினார். வள்ளியூர் அருகே நம்பியான்விளையில் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்றபோது விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விசாரணை
அவர்கள் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அப்துல் கரீம், அன்சாரி ஆகியோர் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 3 பேரும் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கணேசன் இறந்தாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் ஏதும் மோதி இறந்தாரா? என்று விசாரித்து வருகிறார்.
- பாலசுப்பிரமணியன் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் பாலசுப்பிரமணியன் லிப்ட் கேட்டுள்ளார்.
களக்காடு:
நெல்லை, பாளை குலவணிகர்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது48). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார்.
நேற்று முன் தினம் இவருக்கு இரவு பணி என்பதால் நெல்லையில் இருந்து நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கிருந்து மில்லுக்கு செல்வதற்காக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் லிப்ட் கேட்டார். அவர்களும் பாலசுப்பிரமணியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி மில்லுக்கு சென்றனர்.
மில் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து பாலசுப்பிரமணியன் இறங்கியதும், 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 தருமாறு கேட்டனர். அதற்கு பாலசுப்பிரமணியன் மறுத்தார். எனினும் அவர்கள் அவரை மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ரேசன்கார்டு, பான்கார்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிர மணியன் இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியிடம் செல்போன் மற்றும் ஆவணங்களை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார்.
- விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள மொண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் குமார்(47), இவர் தவில் வாத்திய வித்வானாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 7-ம் தேதியன்று பல்லடம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் தண்டபாணி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழ ந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து அவரின் மனைவி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.
- ரவி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- போலீசார், ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ரவி(வயது 40). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.நேற்று இரவு குடித்துவிட்டு வந்தவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் வெறுப்படைந்த ரவி தனது மனைவியின் சேலையால் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது மனைவி எழுந்து அறைக்கு சென்று பார்த்தபோது ரவி தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ரவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
- சதீஷ் நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
- சுடலைக் கண்ணு கத்தியை காட்டி மிரட்டி சதீஷிடம் பணம் பறிக்க முயன்றார்.
நெல்லை:
ஈரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது34). இவர் நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது சி.என். கிராமத்தை சேர்ந்த சுடலைக் கண்ணு (27) என்பவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.
அங்கிருந்து தப்பிய சதீஷ் இது தொடர்பாக சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி சுவாதிகா வழக்குப்பதிவு செய்து சுடலைக்கண்ணுவை கைது செய்தார்.
- அய்யப்பன் தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- ஆத்திரம் அடைந்த சிறுவன், அய்யப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 50). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
அய்யப்பன் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சேது(18), தாழையூத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யப்பனுக்கும், சேதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சேது வேலையை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சேதுவும், சிறுவனும் அய்யப்பன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி வேலையை முடித்துவிட்டு நிறுவனத்தின் அருகே அய்யப்பனும், 15 வயது சிறுவனும் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது என்னை மதிக்காமல் சேது என்னை பற்றி அவதூறாக பேசிவிட்டான். அவனை தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சிறுவனிடம் அய்யப்பன் கூறி உள்ளார். இதனை அந்த சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிறுவன், அங்கிருந்த அரிவாளால் அய்யப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அய்யப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவன் மற்றும் அவன் இந்த சம்பவத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்த சேது ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலைவழக்காக மாற்றம் செய்தனர்.