என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ladakh"

    • இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள்  இருந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது. 

     

    எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 - 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும் இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 வாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது. 

     

    • இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
    • ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்தது

    லடாக் எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா சீனா இடையே புதிய ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.

    அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.

    முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

     

    ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் தற்போது புதிய ஒப்பந்தமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டுஉள்ளது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்வது முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிற

    • இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்துள்ளது.
    • கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    கிழக்கு லடாக், அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020-ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா-சீனா இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவ வீரர்களை குவித்து வந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

    இருநாட்டுக்கும் எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படாததால் எல்.ஏ.சி. எனப் படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவ வீரர் களும் அவரவர் பகுதியில் ரோந்து சென்று வந்தனர்.

    இருநாட்டினரும் தொடர்ந்து ராணுவ வீரர்களை நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் குவித்ததால் அங்கு எப்போது வேண்டு மானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் இருந்து வந்தது.

    இதற்கு தீர்வு காண 4 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர்.

    அப்போது எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன் படி இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.

    சீன ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது. இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.

    அந்த பகுதியில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர்.
    • 25வது கார்கில் விஜய் திவாஸில் நம்க்யால், ஆசிரியையாக உள்ள தனது மகள் டிசெரிங் டோல்கருடன் கலந்துகொண்டார்.

    இந்தியா - பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, லடாக்கின் கார்கில் மாவட்டத்தின் வழியே செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து, கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

    1999 ஆம் ஆண்டின், மே 3 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர்.

    உயரமான பகுதியை அடைந்த இந்த கூட்டுப்படை மே 5 ஆம் தேதி இந்திய வீரர்கள் உடன் சண்டையிடத் தொடங்கியது. மே தொடங்கி ஜூலை வரை நீடித்த இந்த போரில் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் சண்டையிட்ட இந்திய ராணுவம் இறுதியில் வென்றது. இதுவே விஜய் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது.

    இந்த வருடம் 25 வது விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டது. இந்த போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

     

    இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய படையினருக்கு முதலில் எச்சரித்த பெருமைக்குரிய லடாக்கி மேய்ப்பரான தாஷி நம்க்யால் [58 வயது] நேற்று [வெள்ளிக்கிழமை] காலமானார்.

    லடாக்கின் ஆரியப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கார்கோனில் வசித்து வந்த நம்கியால் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய ராணுவம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

    இந்த ஆண்டு விஜய் ட்ராஸில் நடந்த 25வது கார்கில் விஜய் திவாஸில், நம்க்யால், ஆசிரியையாக உள்ள தனது மகள் டிசெரிங் டோல்கருடன் கலந்துகொண்டார்.

    • லடாக் பகுதியில் இருதரப்பு ராணுவமும் அவர்களை பழைய இடத்திற்கு திரும்பி கொஞ்ச நாட்கள்தான் ஆகிறது.
    • அதற்குள் லடாக் பகுதிகளை தங்களுடைய மாவட்டம் என சீனா அறிவித்துள்ளது.

    கிழக்கு லடாக்கின் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருந்து இருதரப்பு ராணுவமும் தங்களது இடத்திற்கு திரும்பியது. இந்த சம்பவம் நடைபெற்று ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் லாடாக் பகுதிகளை இணைத்து ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் பெயரை சீனா அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என இந்தியா தெரிவித்துள்ளது.

    "இந்தியப் பிரதேசத்தில் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனாவின் ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நாம் பார்த்தோம்.

    இந்த மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளின் அதிகார வரம்பு இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் வருகிறது" என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பிரம்மபுத்திரா ஆற்றில் உலகப் பெரிய அணை கட்ட இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பான இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறத. நமது நலனை காக்கும் வகையில் தேவையைனா நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    லடாக்கின் துர்துக் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 26 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 19 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    லடாக்கில் நடந்த வாகன விபத்தில் எங்கள் துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

    விபத்து குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், " லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சோகமான விபத்து குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த நமது வீரர்கள் வீரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." என்றார்.

    மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சாலை விபத்தில் உயிரிழந்த 7 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், லடாக்கில் இன்று காலை எங்கள் 7 துணிச்சலான வீரர்கள் இறந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்தால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். பிரிந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் பிரதமர் மோடி- அண்ணாமலை
    ஜம்மு காஷ்மீரில் இன்று மதியம் ஒரு மணி நேரத்துக்குள் தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் லேசான அளவில் ஏற்பட்டது. #Earthquake
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டடது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

    அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மதியம் 3.12 மணியளவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 3.7 ரிக்டர் அளவில் பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குள் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டடது. #Earthquake
    இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IndiaBorder #IndianArmy #ChinaArmy
    புதுடெல்லி:

    இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக பதட்டம் நீடித்தது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு பதட்டம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.



    அதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதேபோல் கடந்த ஜூலை மாதமும் இந்திய பகுதிக்குள்  சீன ராணுவம் ஊடுருவியதாகவும், பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதையடுத்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சனைக்குரிய 23 இடங்களில் டெம்சாக் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaBorder #IndianArmy #ChinaArmy

    ×