search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lander"

    • புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும்.
    • இஸ்ரோ, அதன் முழுப் பயனைப் பெறுவதற்காக, தொகுதிக்கு ஷேப் கருவியை சேர்த்தது என்பது குறிப்பித்தத்தக்கது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் உறக்க நிலையில் இருந்து இன்னும் விழிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவான நிலையில் அமாவாசை முடியும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்போம் என ஏற்கெனவே விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

    இந்த சூழலில் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனுடன் ஏற்கனவே ஸ்பெக்ட்ரோ-போலரி மெட்ரி ஆப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (ஷேப்) என்ற ஆய்வுக்கருவி அனுப்பப்பட்டிருந்தது. இந்த கருவி நிலவை 52 நாட்களாக சுற்றி வருகிறது. இதுவரை அதன் செயல்பாடுகளில் போதுமான தகவல்களை அனுப்பியுள்ளது. இது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும். அதாவது, அந்த கதிர்களின் பிரதிபலிப்பைக் கொண்டு அங்கு கார்பன், ஆக்சிஜன் உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை அறியலாம். எதிர்காலத்தில் பிற கோள்களிலும் இத்தகைய ஆய்வை நடத்தி அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய உதவும்.

    இதன் ஆய்வு முழுமை அடையவும், கண்டுபிடிப்புகள் ஏதேனும் இருந்தால் அறிவிக்கப்படவும் பல மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    சந்திரயான்-3 உந்துவிசை தொகுதி, ஆரம்பத்தில் விக்ரம் மற்றும் பிரக்யான் அடங்கிய தரையிறங்கும் தொகுதியை சந்திரனுக்கு கொண்டு செல்வதற்கும், அதைச் செய்வதற்கு பொருத்தமான சுற்றுப்பாதையை அடைந்தவுடன் அதிலிருந்து பிரிப்பதற்கும் மட்டுமே திட்டமிடப்பட்டது. இருப்பினும், இஸ்ரோ, அதன் முழுப் பயனைப் பெறுவதற்காக, தொகுதிக்கு ஷேப் கருவியை சேர்த்தது என்பது குறிப்பித்தத்தக்கது.

    • வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    • நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

    பின்னர் நிலவில் இரவுகாலம் தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது தொடங்கிய நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.

    ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம்.

    அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

    இதனிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை.

    இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது.

    நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், நிலவின் மண் தூசி நிறைந்ததாக இல்லை, ஆனால் கட்டியாக உள்ளது. மண்ணை ஏதோ பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    • சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
    • லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன.

    சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.

    இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அவற்றை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது. இந்நிலையில், நிலவின் அடுத்த சூரிய உதயம் நாளை(வெள்ளிக்கிழமை) நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதற்கான பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். லேண்டர், ரோவர் மீண்டும் விழித்து ஆய்வில் ஈடுபடும் பட்சத்தில் நிலவின் தென் துருவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உலகுக்கு இஸ்ரோ மூலமாக கிடைக்கும்.

    • அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது.
    • ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் சுற்றுச்சுற்றி படம் எடுத்து வருகிறது.

    சேலம்:

    சேலம் அரசு கலைகல்லூரி புவி அமைப்பியல் துறை மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான சூரிய குடும்பம் மற்றும் நிலவு தொடர்பான 2 நாள் அறிவியல் கருத்தரங்கம் சேலம் அரசு கலைக்கல்லூரியில் இன்று தொடங்கியது.

    கருத்தரங்கிற்கு அரசு கல்லூரி முதல்வர் செண்பகலட்சமி தலைமை வகித்தார். இதில் ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் கலந்து கொண்டு அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகள் மற்றும் கோள்களில் உள்ள தட்ப வெட்ப நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் புவி அமைப்பியல் உள்தர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பேராசிரியர்கள், அரசு கலை கல்லூரியில் பயிலும் இயற்பியல், புவியியல் மற்றும் புவி அமைப்பியல் துறை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது. அதே போல இந்தியாவில் எவ்வாறு ஆராய்ச்சி நடைபெற்றது என்பதை குறித்து மாணவர்களிடம் பேச இருக்கிறோம்.

    ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் சுற்றுச்சுற்றி படம் எடுத்து வருகிறது. அதனுடைய டேட்டா வைத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறோம். தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 லேண்டர் படம் எடுத்து வருகிறது. அந்த டேட்டாவை வைத்து நிலவில் இருக்கும் கனிமம், மண், கல் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை
    • பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியினை தெரிவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள். குன்னமலை ஊராட்சி பாமகவுண்டம்பாளையம் பகுதியில் இருந்துதான் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் பரிசோதனைக்காக சந்திரனில் இருக்கும் மண் போலவே இந்த ஊரில் இருக்கிறது என்று எடுத்துச் சென்று விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நடவடிக்கைக்கு ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள பாறைகள் நிலவு மண்ணுடன் 99 சதவீதம் ஒத்துப் போவது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த பாறைகளை வெட்டி எடுத்து சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அனார்தசைட் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் -3 ரோவரும் இறங்கி பழகி பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    ×