search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "late"

    • பால் வினியோகம் பல மணி நேரம் தாமதம்
    • முகவர்கள் காத்திருப்பு-விற்பனை செய்ய முடியாமல் அவதி திருச்சி ஆவின் நிறுவனத்தில் எந்திர கோளாறு என காரணம் கூறப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி ஆவின் நிறுவனம் மூலம் திருச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளி அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இது ஆவின் நிறுவன வாகனங்கள் மூலமாக அதிகாலை நேரங்களில் முகவர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. பின்னர் முகவர்கள் கடைகள் மற்றும் வீடுகளுக்கு கூலி ஆட்கள் மூலம் சப்ளை செய்கின்றனர்.இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவர்களுக்கு ஆவின் பால் மிகவும் தாமதமாக வந்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால் காலை 8 மணிக்கு வந்ததால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் நுகர்வோருக்கு பால் கிடைக்காத காரணத்தால் அவர்களும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக திருச்சி கண்டோன்மென்ட், தில்லைநகர், வயர்லெஸ் ரோடு, வரகனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் ஆவின் முகவர்களின் பால் தேக்கமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநகரில் உள்ள முகவர்கள் பால் வருவதற்கு தாமதமானதால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் முகவர் ஆனந்த் கூறும்போது, பால் பண்ணைக்கு மிக அருகாமையில் கொட்டப்பட்டு பகுதி அமைந்துள்ளது. வழக்கமாக அதிகாலை மூன்றரை மணி அளவில் எனக்கு பால் வந்து விடும். ஆனால் இன்று காலை 7.30 மணிக்கு பால் வந்தது. நான் தினமும் 500 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறேன். தாமதமாக வந்ததால் 300 லிட்டர் பால் கூட சப்ளை செய்ய முடியவில்லை. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பால் தாமதமாக சென்றுள்ளது. காலையிலேயே கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செய்யும் குடும்பத்தினருக்கு பால் சப்ளை செய்ய முடியவில்லை என்றார்.பால் சப்ளை தாமதமானதற்கு பால் பதப்படுத்தும் 2 எந்திரங்கள் நேற்று இரவு திடீரென பழுதடைந்து விட்டது காரணம் என கூறப்படுகிறது. மேலும் தனியார் நிறுவன பால் விலை உயர்ந்துள்ள காரணத்தால் ஆவின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பால் டப்பா தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




    • சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன
    • இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது

    நெல்லை:

    விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அந்த வழியாக நேற்றிரவு புறப்பட்டு வந்த ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து நேற்றிரவு கன்னியாகுமரி, நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு வந்தன. அவை சிக்னல் கோளாறால் தாமதமாக புறப்பட்டன. இதனால் இன்று காலை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு 6.30-க்கு நெல்லை எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 15 நிமிடங்கள் தாமதமாக 4 மணிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு இன்று காலை 6.45 மணிக்கு வரவேண்டிய நிலையில் 6 நிமிடங்கள் தாமதமாக 6.51-க்கு வந்து சேர்ந்தது.

    குன்னத்தூர் அருகே வீட்டுக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்த தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள சுக்காகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பிரகாஷ் (28) என்ற மகன் உள்ளார்.

    கைத்தறி தொழிலாளியான பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு காலதாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனை பழனிசாமி கண்டித்தார். இதனால் தந்தை- மகன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மீண்டும் மறுநாள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பழனிசாமியின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து தந்தையை வெட்டி விட்டு தலைமறைவாக உள்ள பிரகாஷை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி விரைவு ரெயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால், மாற்று எஞ்சின் பொறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டுள்ளது.
    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை கொல்லத்தில் இருந்து ரெயில் புறப்படும் போது எஞ்சின் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    மாற்று டீசல் எஞ்சின் பொறுத்தப்பட்டு ரெயில் 2 மணி நேரம் தாமதாமாக புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில் 2 மணிநேரம் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×