என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "launch"
- புதிய பஸ்சை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒ.கரிசல்குளம் என்ற கிராமம் கமுதி-சாயல்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மாலை நேரத்தில் பள்ளி மாண வர்கள் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
கிராமத்தின் விலக்கு சாலையில் இறங்கி 5 கிமீ தூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய நகர பஸ் வசதி ஏற்படுத்தி தரப் பட்டது.
தங்களது கிராமத்திற்கு வந்த இந்த புதிய பஸ்சை கிராம பொதுமக்கள் குலவையிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் பஸ்சை தொட்டு வணங்கி கைகளை கூப்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித் தனர்.
முன்னதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான பாண்டி, புதிய பஸ்சை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இதில் கமுதி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் நடத்துனர், தொழிற்சங்க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.
- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த அணுக்கள் பகுப்புக்கருவி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- சட்டப் பேரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கமும், ரத்த வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்பு கருவி இயக்கி வைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விழாவில் பங்கேற்று, ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டர், வென்டிலேட்டர் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.
முழு உடல் பரிசோதனையில் அனைத்து இரத்தம், இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை தொகுப்பாக பரிசோதனை செய்யப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில்; பரிசோதனை செய்தால் ரூ.3750/- வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.250/- மட்டும் செலுத்தி பொதுமக்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு பயன்பெறலாம்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் குழந்தைவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள்கண்ணன், மலர்மன்னன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கருங்குளம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 6-வது நெல் கொள்முதல் நிலையத்தை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகை யில், தொகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசிடமே நெற்களை விற்க விரும்புகின்றனர். அந்தளவிற்கு நமது தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டடு வருகிறது. விரைவில் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
இதில் வேளாண்மை துறை அலுவலர் தனலட்சுமி கருங்குளம், அப்பநேரி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவிச்சந்திரராஜா, உறுப்பினர்கள் பலராம ராஜா, ராமராஜா, கண்ணன் உட்பட ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்ட னர்.
- வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் தொடங்கப்பட்டது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாலுகா பகுதியில் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தோம். இந்தாண்டு தொடர் மழையின் காரணமாக நல்ல விளைச்சலை சந்தித்து தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தற்போது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்கிறோம். தற்போது கொள்முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தது. இதில் வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Russia #WorldFirstFloating #NuclearPowerPlant
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி, 8 நிமிட நேர ‘கவுண்ட் டவுன்’ நேற்று பகல் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதன் மூலம் ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கி செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைகோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது.
இந்த செயற்கைகோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்காக பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது’.
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், ‘கஜா’ புயல் தமிழகத்தில் உள்ள கடலூருக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்து இருந்தனர். பின்னர் புயல் திசை மாறியதால் ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்து உள்ளனர். ராக்கெட்டும், ஏவுதளமும் அனைத்துவிதமான காலநிலையை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டதால் புயல் பற்றி கவலைப்படவில்லை.
வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், ராக்கெட் விண்ணில் செல்வதை சென்னையில் கண்டு களிக்க முடியும்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #GSLVMark3D2 #ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் இஸ்ரோ, உயர்நுணுக்கமான தகவல்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட்டாகும். இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.
தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது. இதில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன சக்தி கொண்ட ‘கா.கு.பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.
தொலைத்தூரத்தில் உள்ள தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு க்யூ, வி என்ற நவீனதொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகள், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு இதமான காலநிலை நிலவும் பட்சத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். இந்த செயற்கைகோள் மூலம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் விரைவாக இணையதள சேவையை பயன்படுத்த உதவும்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ என்ற கட்சி பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கவிஞர் சினேகன் பாடல்களை எழுத, தாஜ்நூர் இசை அமைத்திருந்தார். இந்த பாடல் குறுந்தகட்டை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு பேசியதாவது:-
நாம் ஒரு மாற்றத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இனிவரும் விழாக்களில் நாம் மாலைகள், பொன்னாடைகளை தவிர்ப்போம். வரும் வழியில் சில பேனர்கள் பார்த்தேன். நம் சாலைகளில் வழிமறிக்காமல், எங்கு அனுமதி இருக்கிறதோ, அங்கு மட்டுமே வைக்க வேண்டும்.
முன்பு எல்லாமே நன்றாக இருந்தது. இப்போது எல்லாமே கெட்டுவிட்டது. மாற்றத்தை நீங்கள் தான் செய்யப்போகிறீர்கள். நான் செய்துவிடுவேன் என்று நம்பி மல்லாந்து சாய்ந்துவிடாதீர்கள். இந்த நாட்டை மாற்றும் வலிமை உங்கள் கையில் இருக்கிறது.
‘எப்படி சார் நீங்களெல்லாம் தாக்குப்பிடிக்க போறீங்க?, இங்கு ஓட்டுகளை மொத்தமாக பணத்தை கொடுத்து வாங்கும் விளையாட்டு நடக்கிறதே... எப்படி ஜெயிக்கப் போறீங்க’ என்று கேட்கலாம்.
நாங்கள் பணம் வாங்கமாட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது. வாங்குபவர்களுக்கு அதனால் என்னென்ன நஷ்டம் உண்டாகிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். 5 ஆயிரத்துக்கும், 10 ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு நம் உரிமைகளை விட்டுத்தருவது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை நாம் உணரவேண்டும்.
இந்த பாடல்களே உங்கள் உற்சாகத்துக்கு தான். என் உற்சாகம் நீங்கள் சொல்லும் சேதிகளில், படும் கவலைகளில் இருந்துவரும். உங்கள் கோபம் அதில் எனக்கு தெரியவேண்டும். எனக்கும் அந்த கோபம் உண்டு. இரண்டையும் கலந்து புதிய சமையல் செய்வோம்.
மாற்றத்தை நோக்கி என்று என்னை மட்டும் சுட்டிக்காட்டிவிடாதீர்கள். ஒரு ஆள் தேரை இழுக்கமுடியாது. மக்கள் நீதி மய்யமே நான் தான் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நான் சோர்ந்து படுத்துவிட்டால் இயக்கம் என்னாவது? என்ற பதற்றம் உங்களுக்கு வரவேண்டும்.
இந்த கட்சி மக்களுக்காகவும், ஒரு காரணத்துக்காகவும் தொடங்கப்பட்டது. அது என்ன காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். அந்த காரணம், அந்த குறை நீங்கும் வகையில் இந்த கட்சி இருந்தாக வேண்டும். அரை நூற்றாண்டு காலம் நடந்திருக்கிறது இந்த சீரழிவு. இன்னும் அரை நூற்றாண்டு காலம் இந்த மக்கள் நீதி மய்யம் செழிப்புடன் இருந்தால் தான் இந்த மாற்றம் ஏற்படும். அந்த அதிசய மரம் காய்க்கும் பழத்தை திண்பது எப்போது? என்று தெரியாது. ஆனால் விதை நாம் போட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் கட்சி நிதி பெறுவோம். அதற்கான கணக்கையும் காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமல்ஹாசனிடம் கட்சி நிதியாக 2 பேர் தலா ரூ.50 ஆயிரம் வழங்கினர். கட்சி உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சி.கே.குமரவேல், கமீலா நாசர், ஸ்ரீபிரியா, தங்கவேலு, சுகா உள்பட பலர் கலந்துகொண்டனர். #KamalHaasan #MakkalNeethiMaiyam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்