என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leader of Opposition"

    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது.
    • சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- திருப்பூர் மாநகர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக நிதி 1350 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து திருப்பூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி,அதற்காக முழு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ஆகியோருக்கு திருப்பூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதே போல் இந்த மாபெரும் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுஇரவு, பகல் பாராமல் உழைத்திட்டஅதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாகவும், ஊக்கமும், ஆக்கமும்ஆலோசனையும் வழங்கிய மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் மக்களின்சார்பாகவும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.

    அதே நேரத்தில் இந்த சிறப்பான திட்டத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடிவழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இச்சூழலில் பவானிக்குசெல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் நமது திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

    எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்புதீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்துநிறுத்த மேயர் மற்றும் ஆணையாளர் அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து நேரில் சென்று மேற்படி இடத்தை ஆய்வுசெய்து தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
    • மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்

    பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.

    வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.

    இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.

    இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.

    • செயற்குழு கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.
    • மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.

    கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்துள்ளது.

    அதன்படி, இன்று மாலையில் புதிய காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும்போது ராகுலை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம்.
    • பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

    மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர வைக்க காங்கிரஸ் தொடக்கம் முதலே படாத பாடுபட்டு வருகிறது.

     

    ஆனால் ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்து இதுவரை காங்கிரஸ் காமிட்டியினருக்கு பிடி கொடுக்கமாலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் கூட ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி தலைவர் கார்கே உட்பட கமிட்டியினர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

     

    குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம். அதாவது, ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று செல்லமாக மிரட்டியுள்ளாராம்.

     

    இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுலிடன் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு அவர், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் அவர் [கார்கே] அறிவிப்பார், அவர் [கார்கே] என்னை மிரட்டியது உண்மைதான் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

     

    நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமயிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைபற்றி பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை தான் பிராமராக தேர்ந்தெடுப்பேன் என்று கார்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

    • க்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது.
    • மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயக்க காட்டி வந்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியிருந்தனர்.

    இதனையடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. ஆனால் ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயக்க காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது ஒரு பெரிய பொறுப்பு.
    • நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அரசியலில் பெரும் பொறுப்பை முதல்முறையாக ராகுல்காந்தி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரானது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

    எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது உங்களின் உரிமைகளுக்கான குரலாக மாறி போராட வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழைகளுக்கும். சிறுபான்மையினருக்கும், விவசாயிகளுக்கும். தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய ஆயுதம். அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடிக் கொடுப்போம்" என்று அவர் பேசியுள்ளார்.

    • நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
    • 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'

    கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.

     

    இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். 

     

    • 2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை.
    • ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார்.

    டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆவார்.

    2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை. ஏனென்றால் எதிர்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்.பி.க்கள் இல்லை.

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. இதனால் ராகுல்காந்தி கடந்த ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார்.

    • பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
    • கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் இந்த சூழல் ஏற்பட்டது

    288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    கூட்டணியில் பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது. 

    ஆனால் எதிரணியான மகா விகாஸ் ஆகாதி அணியை சேர்ந்த காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 10 இடங்களிலும் என கூட்டணியே மொத்தமாக 46 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

    எனவே அமைய மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியலில் கடந்த 57 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான சூழல் ஏற்பட்டது கிடையாது.

     

    பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சியிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவரைப் பரிந்துரைக்க முடியும்.

    ஆனால் எதிர் கூட்டணியான மகா விகாஸ் அகாதியில் அதிகபட்சமான இடங்களை வென்றது உத்தவ் தாக்கரே சிவா சேனா. அதுவும் 20 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

    எனவே அவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது மகா விகாஸ் அகாதி கூட்டணி தேர்தலுக்கு முன்னரே உருவாகியிருந்தாலும், விதிகளின்படி, மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தைக் கொண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற முடியாது என்று சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×