என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "leaflets"
- அடுத்த நிமிடமே துண்டு சீட்டுடன் குடிக்க சென்ற குடிமகன்களால் அதிர்ச்சி அடைந்தனர்.
- யாரும் குடிக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே சாரதா மில் ரோட்டில் எதிர் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
24 மணி நேரமும் அங்கு வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக தான் செல்ல வேண்டும். ஏனென்றால் டாஸ்டாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் குடிபோதையில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டே இருப்பார்கள்.
சம்பவத்தன்றும் டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மதுபிரியர்களும் மதுவை வாங்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு, டாஸ்மாக் கடைக்கு சென்ற வாலிபர்களிடம், மதுகுடிக்க வேண்டாம் என்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் யாரும் குடிக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் குடும்பத்தையே பாதிக்கும். அதனால் தயவு செய்து குடிக்காதீர்கள் என அவர்களிடம் கூறியதுடன், துண்டு சீட்டையும் வழங்கினார்.
அவர்களும் ஆர்வமாக அந்த துண்டு சீட்டினை வாங்கி கொண்டனர். அதனை பார்த்த அந்த வாலிபர் அனைவருக்கும் நன்றி கூறினார். ஆனால் அவரின் சந்தோஷம் சில துளி நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.துண்டு சீட்டை பெற்று கொண்ட குடிமகன்கள் அனைவரும் அடுத்த நொடியே அதனை மடித்து பாக்கெட்டில் வைத்து கொண்டு டாஸ்மாக் கடைக்குள் சென்றனர்.
இதை பார்த்த வாலிபருக்கு அதிர்ச்சி உண்டானது. தொடர்ந்து அவர் வலியுறுத்தினார். ஆனால் அதனை யாருமே கண்டு கொள்ளாமல் தாங்கள் மதுபாட்டில்களை வாங்குவதிலேயே கவனம் செலுத்தினர். இறுதியில் வாலிபரும் துண்டு சீட்டை வினியோகித்து விட்டு, அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார். இதனை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் 24 மணி நேரமும் சரக்கு விற்கக்கூடிய இந்த இடத்தில், இவர் வந்து பேசினால் மட்டும் கேட்கவா போகிறார்கள் என்று தங்களுக்குள் சலித்துக் கொண்டு சென்றனர்,
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், யாரும் யாரையும் மாற்றி விட முடியாது. அவரவர் திருந்தினால் மட்டுமே மாற முடியும். நாம் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தனர்.
- தூய்மை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
- இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் உலர் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வீடுகளில் தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சி வார்டு வாரியாக நடந்தது.
ஆணையாளர்அசோக் குமார் தலைமையில் ெபாதுமக்களுக்கு தூய்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் ''என் குப்பை என் பொறுப்பு'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
- பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக்பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- உரம் உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அதை தொடர்ந்து புதுமனைத்தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்