search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "least"

    • ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.
    • கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.

    குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    எனினும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியை வருகை அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் வழக்கத்தை விடவும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் அண்ணா பூங்கா, படகு துறை மற்றும் காட்சி முனை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பணிகள் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    இது குறித்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் கோடை விடுமுறை பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. எனவே சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஞாயிறு ஒருநாள் விடுமுறைக்காக ஏற்காடு வருபவர்கள் குறைந்துவிட்டனர்.

    ஏற்கனவே மழைக்காலம் தொடங்கி விட்டதால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. எனவே ஏற்காடு வருவதை மக்கள் குறைத்துக் கொண்டனர் என்றனர்.

    மேட்டூர்

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொதுப் பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

    பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். மேலும் பூங்கா நுழைவு கட்டணமாக வசூல் செய்ததில் ரூ.29880 கிடைத்தது.

    கடந்த 11 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுதான் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. #Congress
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்யும்.

    அதன்படி 2017-18ம் ஆண்டுக்கான வருமான விவரத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து உள்ளது. அதில் 2017-18ம் ஆண்டு ரூ.199 கோடி வருமானம் கிடைத்து இருப்பதாக கூறி உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 11 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் வருமானத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    2001-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு அதிக வருமானம் இருந்தது. நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக முதலிடத்தில் காங்கிரஸ் இருந்தது.



    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி வருமானம் பெறுவதில் மிகவும் பின்தங்கி உள்ளது.

    2017-18ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் அன்பளிப்பு தொகையில் வெறும் ரூ. 5 கோடி மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால் பா.ஜனதா இத்தகைய வருமானத்தில் ரூ.210 கோடி வரை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரசுக்கு கிடைத்து உள்ள வருமானத்தில் கூப்பன்கள் விற்றதன் மூலம் ரூ.110 கோடி கிடைத்து உள்ளது. தலைவர்கள் பங்களிப்பு மூலம் ரூ.32 கோடி வந்துள்ளது.

    வருமானம் குறைந்ததால் சில மாநில கட்சிகளை விட காங்கிரஸ் பின்தங்கி உள்ளது. #Congress

    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர் மட்டம் சரிந்துள்ளதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் காமராஜர் அணை வற்றியது. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் குடிநீர் தேவைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடி நீர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

    தற்போது ஜிகா பைப் மூலம் அனைத்து பகுதி பொதுமக்களும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு என்பது திண்டுக்கல் நகர மக்களுக்கு தீராத பிரச்சினையாக உள்ளது.

    கஜா புயலின் தாக்கத்தினால் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மழை பெய்தது. இதனால் காமராஜர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே அணையின் நீர் மட்டம் 17.5 அடியாக உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் மழையின்றி அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

    23.5 அடி நீர் மட்டம் கொண்ட காமராஜர் அணையில் தற்போது 13.5 அடி மட்டுமே நீர் உள்ளது. இதனால் கோடை காலத்தில் திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இருந்த போதும் அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் உள்ள நீர் மூலம் 5 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய முடியும். மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் கொண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

    மழை முற்றிலும் ஓய்ந்துள்ளதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    கேரளா எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக பருவமழை பொய்த்து போனதால் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. தற்போதும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணைக்கு 186 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மேலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 119.25 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 56.17 அடியாக உள்ளது. 156 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.86 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 24 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. #Groundwater
    சென்னை:

    தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை.

    கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 4.32 மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுள்ளது.

    அங்கு 2017-ம் ஆண்டு 6.74 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கின்படி 11.06 மீட்டரில் நிலத்தடி நீர் சென்று விட்டது.

    இதேபோல் திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை 55 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருக்கவே வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அம்மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு 15.59 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.34 மீட்டராக உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.25 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக தெற்காசிய நீர் ஆய்வு ஒழுங்கு முறை கூட்டமைப்பு தலைவர் கனகராஜன் கூறியதாவது:-

    நிலத்தடி நீர் மட்டம் உயராததற்கு பருவமழை சரியாக பெய்யாதது காரணமல்ல. நாம் நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 80 சதவீதம் மழை தண்ணீர் நிலத்தடிக்கு செல்லாமல் நிலத்திலேயே சென்று விடுகிறது.



    நீர் நிலைகளில் மழை தண்ணீரை சேமிக்காத வரை நிலத்தடி நீர்மட்டம் உயராது. நமது நீர் நிலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

    இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வறண்டு பாலைவனமாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Groundwater

    மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.65 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது. 142 அடிவரை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறையத்தொடங்கியது.

    அதன்பின்னர் சாரல்மழை மட்டுமே பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு 187 கனஅடிநீர் வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 900கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 127.65 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. 859 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து பாசனம் மறறும் மதுரை மாநகர குடிநீருக்காக 1760 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது. 17 கனஅடிநீர் வரும் நிலையில் 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஈரோட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம் போல் இன்றும் குறைந்தது. தொடர்ந்து விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.10-க்கு விற்கப்பட்டது. இன்று 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.74.88-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.70.86-க்கு விற்கப்பட்டது. இன்று 37 பைசா குறைந்து ரூ.70.57-க்கு விற்கப்பட்டது.

    தொடர்ந்து பெட்ரோல் -டீசல் விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 25-ந் தேதி 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 100.91 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி சரிந்து 99.88 அடியானது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி 100 அடியை எட்டியது.

    அதே மாதம் 23-ந் தேதி அணையின் உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியதால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்து. பின்னர் பானத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மழை சற்று குறைந்ததாலும் கடந்த 5-ந் தேதி நீர்மட்டம் 101.79 அடியாக சரிந்தது.

    இதற்கிடையே மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 19-ந் தேதி மேட்டூர் அணைக்கு 24 ஆயிரத்து 764 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர ஆரம்பித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. நேற்று 2 ஆயிரத்து 989 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 538 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 17 ஆரம் கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 25-ந் தேதி 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 100.91 அடியாக இருந்தது. இன்று மேலும் 1 அடி சரிந்து 99.88 அடியானது. இதனால் கடந்த 105 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Metturdam

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,930-க்கு விற்கிறது. #Goldprice
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,930-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் உள்ளது. #Goldprice
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று முன்தினம் அதிகபட்சமாக 1970 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து 1577 கன அடியாக குறைந்தது.

    இன்று இது மேலும் குறைந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நேற்று மாலை முதல்நீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த நீர்மட்டம் தற்போது மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது.

    நேற்று முன்தினம் 35.03 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றுகாலை 35.21 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 35.13 அடியாக குறைந்துள்ளது.

    நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    ×