search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LITERARY FORUM"

    • காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா பள்ளியின் ஆட்சி மன்ற குழு தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடந்தது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா பள்ளியின் ஆட்சி மன்ற குழு தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் முன்னிலை வகித்தார். மாணவர் கங்காதரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சித்திக், உதவி தலைமை ஆசிரியர் முகமது சித்திக், தமிழ் ஆசிரியர்கள் முகமது இஸ்மாயில், ஷேக் பீர்முகமது காமில், செய்யது ரபீக், சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் அனீஸ் நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய மன்ற சொற்பொழிவு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத் துறையின் நியூ ஐடோலா, இலக்கியமன்றத்தின் சார்பில் தொடர் சொற்பொழிவு "இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடு" என்ற தலைப்பில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் துறைத்தலைவர் ஜான் சேகர் கலந்து கொண்டார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடுகள் என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான அறிவுசார் இயக்கமாக இருக்கிறது.

    ஆங்கில இலக்கிய விமர்சனம் கிரேக்க, ரோமானிய தத்துவவா திகளான பிளட்டோ, அரிஸ்டாட்டில்,ஹோரேஸ் மற்றும் லஜ்ஜானியஸ் போன்ற வர்களின் கருத்துகளால் கட்டமைக்க ப்பட்டது. ஆங்கில இலக்கிய விமர்சனம் சிட்னி, ட்ரைடன், ஜான்சன், வோட்ஸ்வொர்த் மற்றும் கீட்ஸ் போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பால் வளர்ந்தது.

    ஆங்கில இலக்கிய விமர்சன தந்தையாக கொண்டாடப்படும் மேத்யூ அர்னால்டு "தொடுகல் முறை" என்ற புதிய விமர்சன முறையை அறிமுகம் செய்தார். 20-ம் நூற்றாண்டின் புதிய விமர்சன கொள்கைகள் மேற்கு உலகில் பிரபலமானது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலவித விமர்சன கோட்பாடுகளான மனிதம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள், கட்டமைப்பு வாதம் மற்றும் பின் கட்டமைப்புவாதம் போன்ற கோட்பாடுகள் இலக்கிய உலகில் ஆளுமை செய்வதாக கூறினார்.

    ஆங்கிலத் துறைத்த லைவர் பெமினா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் ஸ்வப்னா நன்றி கூறினார்.

    • திருச்சி தேசியகல்லூரியில் வணிகவியல் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடை பெற்றது.
    • நேரத்தை வீணாக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்

    திருச்சி,

    திருச்சி தேசியக்கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் இலக்கிய மன்றத்தின் தொடக்க விழா கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. முனைவர் ஆர்.சுந்தரராமன் தலைமை உரையாற்றினார். முன்னதாக முதலாம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவி ஜெ.லட்சுமி ஜெயா வரவேற்றார். முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் ஜி.ஹரிராம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

    திருச்சி, உருமு தனலட்சுமி கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் ஜெ.ஆல்பர்ட் வின்சென்ட் பால்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "ஒரு வெற்றியாளராக இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் பேசினார். மேலும் அவர் பேசு–கையில், நல்லதை நினைக்க வேண்டும் என்றும், நல்லவனாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    தமிழின் மேல் பற்று வேண்டும் என்றும், தினமும் ஒரு ஆங்கில வார்த்தையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் கூறினார். இளங்கலை பட்டம் படிக்கும் பொழுதே போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டால், படிப்பு முடிந்தவுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று வேலைக்குச் செல்ல முடியும் என்றார்.

    நேரத்தை வீணாக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நம்மேல் நம்பிகை வந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார். முடிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி கே.அக்‌ஷயா நன்றி கூறினார். முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஆர்.மஞ்சு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை பேராசிரியை முனைவர் பி.ஸ்ரீதேவி செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் வணிகத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×