என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LK Sudhish"
- ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
- பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சென்னை:
சென்னை மாதவரம் பகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது.
இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளை கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளை சுதீசின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறி கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது.
- தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு இந்த முறை வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டசபையில் குரல் கொடுப்பார்.
இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏற்கனவே இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை எதையும் அவர் நிறைவேற்றவில்லை. அதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும் முதியவர்.
இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்த பொதுமக்களிடையே அந்த கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
நாங்கள் ஓட்டு கேட்க செல்லும் போது எங்கள் கட்சி தொண்டர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்தின் விசுவாசிகளான பொதுமக்களும் வருகிறார்கள். ஓட்டு பதிவின் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு மற்றும் பணம் கொடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் மீறி எங்களது கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.
- இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல.
ஈரோடு:
தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் உள்பட அரசு எந்திரமே இங்கு தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படை வர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
இதேபோல் பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இங்கு உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால் வடமாநிலத்தவர்கள் எதற்காக இங்கே வரப்போகிறார்கள்.
இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல. அவர்களுக்கு பழக்கப்பட்டது தான். ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவதை எதிர்த்து தான் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
சென்னை:
தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இவ்வாறு சுதீஷ் கூறி உள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
முதற்கட்டமாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரை சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த வேனில் சென்று சுதீஷுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும், நாட்டை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும் என்றும் முதலமைச்சர் பேசினார். #LSPolls #EdappadiPalaniswami
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டது. இந்தநிலையில் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள் தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். இப்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
விஜயகாந்த் விரைவில் தீவிர கட்சி பணியை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர் தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் அவர் தான் இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakanth
தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது.
நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
என்றாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.
இதற்கிடையே பா.ஜனதா தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த கூட்டணியில் முதலில் நாங்கள் பா.ஜனதா தலைவர்களுடன் பேசினோம். பிறகுதான் அ.தி.மு.க. வுடன் பேசத்தொடங்கினோம். இதனால் தான் கூட்டணியில் சில முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள்தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது.
அடுத்த தேர்தல் பற்றி இப்போதே உறுதிபட கூற இயலாது. கூட்டணி மாறலாம். மாறாமலும் போகலாம். கேப்டனை முதல்-அமைச்சராக்கவே தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. அந்த இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சில பிரச்சனைகள் அடிப்படையில் நாங்கள் முன்பு மோடி அரசை விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மோடி அரசின் நல்ல கொள்கைகளை மனம் திறந்து பாராட்டியுள்ளோம்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் எங்களுக்குரிய தொகுதிகளை (வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்) மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளோம்.
2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டது. எனவே இந்த தடவை 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால் பிப்ரவரி 20-ந் தேதியே பா.ம.க. மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்து விட்டது. இது எங்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது.2014-ம் ஆண்டு ஒரே நேரத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒப்பந்தம் செய்ததைபோல இந்த தடவையும் தேர்தல் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். அது நடக்காமல் போய் விட்டது.
எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தி.மு.க. தரப்பில் இருந்து அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே கேப்டன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அவரது அறிவுரையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டது.
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாறாது. இப்போதும் நான் அவரை அண்ணன் என்றுதான் அழைக்கிறேன்.
தி.முக.விடம் நாங்கள் குழு அமைத்து பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து சென்றவர்கள் அவர்களது சொந்த வேலைக்காக சென்றனர். ஆனால் அரசியலில் அது வேறுமாதிரி பேசப்பட்டு விட்டது.
விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்வார். ஆனால் பேசமாட்டார்.
அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அவர் தொகுதி வாரியாக வரும்போது தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.
கேப்டன் விரைவில் தீவிர கட்சி பணிகளை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர்தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் கேப்டன்தான் இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு சுதீஷ் கூறினார். #DMDK #Vijayakanth #LKSudhish
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.
அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.
கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.
இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி உள்ளது. #DMDK #BJP #Vijayakanth
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.
இதன்காரணமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்த தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது.
விஜயகாந்த் வந்த பின்னர்தான் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். அந்த கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakath #LKSudhish
வடவள்ளி:
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சாய்பாபா காலனி பகுதி தே.மு.தி.க. சார்பில் பொங்கல் பொருள் பரிசளிப்பு விழா தடாகம் ரோடு வேலாண்டி பாளையம் ஆனந்த ஹவுசிங் காலனி 13-வது வார்டில் நடைப்பெற்றது. விழாவில் பொதுமக்கள் 4100 பேருக்கு 15 லட்சம் செலவில் பொங்கல் பொருள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:-
வெளிநாட்டிற்கு சிகிச்சை பெற விஜயகாந்த் சென்றாலும் தமிழ் மக்களின் நலனை எந்நேரமும் விசாரித்தபடி உள்ளார். விஜயகாந்தை விமர்சித்து மீம்ஸ் போட்டவர்கள் எல்லாம் தற்போது அவரை சிறந்த தலைவர் என ஒத்துக்கொண்டு உள்ளனர்.
ஊழல் இல்லாத தலைவன் விஜயகாந்த் மட்டுமே. வரும் மார்ச் மாதம் திருப்பூரில் நடக்கும் மாநாட்டில் அவர் வந்து பேசுவார்.
வருகிற பாராளுமன்ற , சட்ட மன்ற தேர்தலாக இருந்தாலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும் .
வேலூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைப்பெறுகிறது. இதனால் 13 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் . கஜா புயலால் 6 மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. மாநிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது.
விவசாயிகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அடுத்து நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்பது தெரிந்து விட்டது.
அ.தி.மு.க.- தி.மு.க. கட்சிகள் மக்களால் தூக்கி எறியப்படும். வருகின்ற தேர்தலில் தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிடும் .
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவுக்கு சாய்பாபா காலனி பகுதி செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர்கள் பார்த்தசாரதி , அக்பர் , கோவை மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில், தினகரன் , தியாகராஜன், மாநில கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் சிங்கை சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் வார்டு செயலாளர் தவசிமுருகன், பகுதி இளைஞரணி சதிஷ் குமார் , வார்டு இளைஞரணி சக்தி , 14 - வது வட்ட செயலாளர் ராஜா , பகுதி துணைச்செயலாளர் திருநாவுக்கரசு , பகுதி பிரதிநிதி கருப்பையா , சிவபாலன் , கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #vijayakanth #parliamentelection
சூலூர்:
விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டையில் 5-வது நாளாக பல்வேறு கட்டமாக போராட்டம் நீடிக்கிறது.
விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று தே.மு.தி.க. மாநில துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் சுல்தான் பேட்டை வந்தார். போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- விவசாயிகளின் பிரச்சினை பற்றி கவலைப்படாத முதல்- அமைச்சரும், பிரதமரும் உள்ளனர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவை நிலத்தடியில் மூலம் செல்லும் போது மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல முடியாதா? விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
உயர் மின் கோபுரங்களால் ஏற்கனவே 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுர பிரச்சினையை உடனடியாக தீர்க்க விடில் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் போல் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, பனப்பட்டி தினகரன், மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில்இ தியாகராஜன், எஸ்.எம். முருகன் மற்றும் மாவட்ட துணை செயலர்கள் ஒன்றிய நகர ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #farmersstruggle
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்