search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan Mela"

    • ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்கள் அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் ஜெயசீலி ஜூலி யட் தலைமை தாங்கினார்.

    இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. சுய உதவி குழு ஒன்றுக்கு ரூ.12 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.

    மேலும் தனியார் குழுக்க ளிடம் அதிக வட்டிக்கு கடனாக பணம் வாங்கி கஷ்டப்படுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு சார்ந்த மானிய கடன்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறைந்த தொகையிலான காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சந்தன கிருஷ்ணன், பணியாளர் மேக்தலின் பிரீத்தி, காசாளர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது.
    • இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த 24 உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். புத்தன்தருவை ஊராட்சி தலைவி சுலைகா, துணைத்தலைவர் பிர்தோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த 24 உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சம் கடனுதவியும், 4 விவசாயி உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.4 லட்சத்து 38 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் கடனுதவி பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. புதிதாக 'அ' வகுப்பு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர்களுக்கு நிதியியல் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலர் அருள்தாஸ் நன்றி கூறினார்.

    • கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா 6-ந் தேதி நடக்கிறது.
    • சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், டாப்செட்கோ-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், டாம்கோ(தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்) மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா நாளை 6-ந் தேதி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் அறிவுரைப்படி கடன் வழங்கும் மேளா நடந்தது.
    • 15 நபர்களுக்கு ரூ.14.37 லட்சம் பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது

    கோவை

    சூலூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் அறிவுரைப்படி கடன் வழங்கும் மேளா நடந்தது.

    விழாவுக்கு சங்க தலைவர் சி.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் எஸ்.ஏ.மோகன், அருண்குமார், எஸ்.வி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் ரவிச்சந்திரன், திலகவதி, ரங்கநாயகி, காந்திமதி, சரோஜினி கடன் மேளா பற்றி சிறப்புரையாற்றினர். சங்க செயலாளர் ஜோதிமணி வரவேற்றார். சூலூர் வட்டார கள அலுவலர் ராமசாமி கடன் மேளாமற்றும் மின்னணு கல்விசார் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    இதில் டாப்செட்கோ 4 நபர்களுக்கு ரூ.2 லட்சமும், 15 நபர்களுக்கு ரூ.14.37 லட்சம் பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முடிவில் சங்க எழுத்தர் ராகவன் நன்றி கூறினார்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
    • இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர்

    சூலூர் அருகே சிந்தாமணி புதூரில் ஒட்டர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.


    நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பேச்சிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த மேளாவில் 8 நபர்களுக்கு பயிர் கடனாக 8 லட்சம் ரூபாய்க்கும், மகளிர் குழு கடனாக 12 குழுக்களுக்கு ரூபாய் 15 லட்சத்துக்கும், மாற்றுத்திறனாளி கடன் தொகையாக இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான கடன் மனுக்கள் பெறப்பட்டன. சங்கத்தின் செயலர் சகாய பவுலின் மேரி நன்றி கூறினார்.

    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவுரையின் படி கடன் மேளா நடைபெற்றது.
    • கடன் மேளாவில் ரூ.5 லட்சம் கடன்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

    கோவை,

    பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவுரையின் படி கடன் மேளா நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் பேராசிரியர்கள் வாசகராஜன் மற்றும் தணிகாசலம் ஆகியோர் கூட்டுறவு மேலாண்மை பற்றி விவரித்தார்கள், பெரியநாயக்கன்பாளையம் வட்டார அலுவலர்கள் பாரதி சிறப்புரையாற்றினார். பெரியநாயக்கன்பாளையம் கிளை மேலாளர் தேவராஜ், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெரியநாயக்கன்பாளையம் கிளை மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், சங்கத்தின் துணைத்தலைவர் வேலுசாமி, செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடன் மேளாவில் ரூ.16 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டது. ரூ.5 லட்சம் கடன்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

    • கால்நடை வளர்ப்புக்கான கடன் பெற்றவர்களுக்கு, கடனுக்கான ஆணை வழங்கப்பட்டது.
    • 1,132 விவசாயிகளுக்கு 4.59 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஆணை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில், 'பாங்க் ஆப் பரோடா' கோவை மண்டல அலுவலகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கடன் முகாம் நடந்தது.வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சரவணகுமார், மண்டல துணை பொது மேலாளர் சலபதி தலைமை வகித்தனர். சுகுணா புட்ஸ் நிறுவன முதுநிலை மேலாளர் அருளாந்தகிருஷ்ணன், கால்நடைத்துறை இணை இயக்குனர் பாரிவேந்தன் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை வளர்ப்புக்கான கடன் பெற்றவர்களுக்கு, கடனுக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கிளைகளில் 1,132 விவசாயிகளுக்கு 4.59 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஆணை வழங்கப்பட்டது. நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை பரோடா வங்கி கோவை மண்டல துணை பொது மேலாளர் ககதால், உடுமலை கிளை முதன்மை மேலாளர் கே.மாரிராஜ் மற்றும் கிளை ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×