என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Loco Pilot"
- பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.
- வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மனிதன் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், உடல் மற்றும் மனதை மீண்டும் புத்துணர்ச்சியூட்ட உறக்கம் மிக மிக முக்கியம். ஆனால், இந்த உறக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.
படுத்ததும் உறங்குபவர்கள், எந்நேரமும் உறங்குபவர்கள், எங்கும் உறங்குபவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அந்த வகையில், டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் குடை பிடித்தப்படி அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தண்டவாளத்தில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்திவிட்டார். பிறகு ரெயிலை விட்டு கீழே இறங்கி வந்து, உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்து அவர் சென்ற பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. பலர் தண்டவாளத்தில் உறங்கிய நபரை வசைபாடியும், பலர் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.
A person was sleeping on the railway track with an umbrella. Seeing this, the loco pilot stopped the train, Then he woke him up and removed him from the track. Then the train moved forward in Prayagraj UP pic.twitter.com/OKzOpHJeih
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 25, 2024
- அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
- இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் இன்று 9ஜூன் 20 அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/06/02/2441521-untitleddesign-2024-06-02t121114353.webp)
அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை சுமார் 3.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இரேன்ப்து லோக்கோ பைலைட்களுக்கும் பதேர்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் ரஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அம்பலா- ஸ்ரீஹிந் ரயில்வே தடத்தில் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுவதால் மிதமிஞ்சிய போக்குவரத்து நிறைந்த வழித்தடமாக உள்ளது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடம்பத்தால் மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் ரயில்கள் செல்ல முடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது.