search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorries"

    • சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.

    ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.

    அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.

    தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.

    அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.

    இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.

    சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    • குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் லாரி களில் கொண்டு வந்து கொட்டப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
    • லாரிகளை கடையம் பெரும் பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா உள்ளிட்டோர் சிறைபிடித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட மேட்டூரின் மேற்பகுதியில், மேட்டூரிலிருந்து கடவா காடு செல்லும் சாலையையும் மேட்டூர் தோரணமலை சாலையையும் இணைக்கும் சாலையின் மேற்புறம் உள்ள விளை நிலங்களில் தென்காசி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் லாரி களில் கொண்டு வந்து கொட்டப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அப்பகுதி சுகாதாரமற்ற பகுதியாக காணப்பட்டது. இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்காக வந்த லாரிகளை கடையம் பெரும் பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆனைமணி, கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படாததை கண்டித்து பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டு வருகின்றனர்.
    • பாளை மண்டலத்துக்கு உட்பட்ட 33, 34, 35 மற்றும் 36-வது வார்டு பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளங்கள் தோண்டப்படுவதாலும், குழாய் உடைப்பு ஏற்பட்டும் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    அதிகாரிகளிடம் புகார்

    குறிப்பாக பாளை மண்டலத்தில் 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிதண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டு வருகின்றனர். இன்று பாளை மண்டலத்துக்கு உட்பட்ட 33, 34, 35 மற்றும் 36-வது வார்டு பொதுமக்கள் பாளை தெற்கு பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை தலைமையில் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    லாரிகள் மூலம் சப்ளை

    மாநகர பகுதியில் தொடர்ந்து நடைபெறும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் 10 நாட்களாகியும் குடி தண்ணீர் வராததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பெரு மாள் மேலரத வீதி பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலையில் இன்று மாநகராட்சி லாரி மூலம் குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச் சென்றனர்.

    • ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் ஆகியவை தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டது.
    • மேலும் 6 லாரிகளையும் கனிமவளங்களுடன் பறிமுதல் செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இடையன்குடியில் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த 6 கனரக லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவற்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எந்த வித அனுமதியும் இன்றி ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் ஆகியவை தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக லாரி டிரைவர்கள் ஆனைகுடி பெருமாள்புரத்தை சேர்ந்த சிவா (வயது 29) இடையன்குடி கீழத்தெரு ராஜன் (52), ரோஸ் மாநகர் தெற்குதெரு அமர்செல்வன் (41), சங்கராபுரம் வேத நாயகம்(51), நடுவ க்குறிச்சி செல்வ குமார்(32), தட்டார்மடம் வேதமாணிக்கம் ராஜி(46), லாரிைய வழிகாட்டி அழைத்து சென்ற செட்டிவிளை வடக்கு தெருவை சேர்ந்த ஜேசுராஜன் (52) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 6 லாரிகளையும் கனிமவளங்களுடன் பறிமுதல் செய்தனர்.

    ×