என் மலர்
நீங்கள் தேடியது "love couple suicide attempt"
- விஜய்-கலையரசி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைத்து கடந்த 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
- திருமணத்திற்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). பட்டதாரியான இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பரமேஸ்வரன்-மகேஸ்வரி தம்பதியின் மகள் கலையரசி(19) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
பெண்ணின் பெற்றோர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர். கலையரசியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய் மீதான காதலை கைவிடுமாறு எச்சரித்தனர். ஆனால் விஜய்-கலையரசி காதல் நீடித்தது.
இந்த நிலையில் கலையரசிக்கு உசிலம்பட்டியில் வைத்து உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக கலையரசி வலுக்கட்டாயமாக உசிலம்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் இந்த திருமணத்தில் விருப்பமில்லாத கலையரசி அங்கிருந்து தப்பி காதலன் விஜயிடம் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து விஜய்-கலையரசி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பின் ராஜபாளையத்தில் காதல் ஜோடி தங்கினர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் பரமேஸ்வரன்-மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் அடிக்கடி தொலைபேசி மூலம் கலையரசிக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சல் அடைந்தார்.
நேற்று மாலை கலையரசியிடம் செல்போனில் பேசிய அவரது தந்தை பரமேஸ்வரன் இன்று இரவு விஜய்யை கொன்று விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கலையரசி இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என கணவர் விஜய்யிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணமான 15 நாளில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.இ.இ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த மாணவி தர்ஷினி (18) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி பழகி வந்தனர். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் தர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவரவே மகளை அழைத்து கேட்டபோது, நான், என்னுடன் கல்லூரியில் படித்து வரும் சுனில்குமார் என்பவரை காதலிக்கிறேன், நாங்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகிறோம். என்னை அவருடன் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் தர்ஷினியிடம் நீ, சுனில் குமாரை காதலிக்காதே, முதலில் படிப்பில் கவனத்தை செலுத்து என்று பெற்றோர் கூறி சத்தம் போட்டனர்.
இது பற்றி தர்ஷினி, தனது காதலன் சுனில் குமாரிடம் தெரிவித்தார். காதலை பெற்றோர் ஏற்காததால்,காதல் தோல்வி அடைந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லிப்பாளையம் மேம்பாலத்தின் அடியில் ஆசிட் குடித்து மயங்கி கிடந்தனர்.
இதை பார்த்த பொது மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு, வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள காவல்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.
இவருடைய மகன் சந்திரன்(வயது 24). அதே ஊரை சேர்ந்த ரத்தினம் மகள் ரஞ்சிதா(21). இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் தங்கள் காதலை குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் இருவரும் ஒன்று சேர்ந்து பூச்சி மருந்தை(விஷம்) குடித்தனர்.
இதில் மயங்கி விழுந்த அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.