என் மலர்
நீங்கள் தேடியது "love couples"
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
- மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரிசிராஜ் குவாலியர் போலீசில் புகார் செய்தார்.
- இந்தூரில் காதல் ஜோடி தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஹர்ஷிதா என்ற மகள், ஒரு மகன் உள்ளனர்.
ஹர்ஷிதா அந்த பகுதியை சேர்ந்த வேற்று சமூக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபருடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஹர்ஷிதா வீட்டை விட்டு சென்று விட்டார்.
மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரிசிராஜ் குவாலியர் போலீசில் புகார் செய்தார். போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர்.
இந்தூரில் காதல் ஜோடி தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து காதல் ஜோடியை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
கோர்ட்டு விசாரணையில் நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவரோடு தான் நான் செல்வேன் என்றும் ஹர்ஷிதா கூறினார்.
ரிசிராஜ் மற்றும் அவரது மனைவி தனது மகளிடம் எவ்வளோமன்றாடி கேட்டும் ஹர்ஷிதா கணவரை விட்டு வரமாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் ரிசிராஜ் விரக்தி அடைந்தார்.
குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக மகள் திருமணம் செய்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.
மேலும் அங்கு சோதனை நடத்திய போது உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. தனது மகளின் ஆதார் அட்டையில் அந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில் ஹர்ஷிதா நீ செய்தது தவறு. நான் கிளம்புகிறேன். உங்கள் இருவரையும் நான் கொன்றிருக்கலாம். ஆனால் என் மகளை நான் எப்படி கொல்ல முடியும். ஒரு தந்தையின் வலி யாருக்கும் புரியவில்லை. ஒரு முழு குடும்பமும் அழிக்கப்பட்டு விட்டது. இப்போது சமூகத்தில் எதுவும் மிச்ச மில்லை என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர் பெற்றோரின் உரிமைகள் மற்றும் வயது வந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்ட செயல்முறைகள் குறித்தும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர்.
- ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.
இதேப்போல் உடுமலை அமராவதி பூங்கா, அமராவதி அணை உள்ளிட்ட இடங்களிலும் காதல்ஜோடியினர் திரண்டனர்.
மேலும் சில இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று தங்களது காதலை வெளிப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காதலர் தினத்தையொட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டுகளில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர்.
சேலம்:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதலிகளுக்கு ரோஜா மலர்கள், மலர் செடிகள், நவநாகரிக உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பரிசு பொருட்களாக கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் அங்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காதல் ஜோடிகள் சேலம், ஏற்காடு, மேட்டூர் பகுதி பூங்காக்களில் குவிந்தனர். அவர்களில் சில காதல் ஜோடியினர் முத்தமிட்டு தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.
சிலர் தங்களது காதலிக்கு ரோஜா மலர்களை கொடுத்து மகிழ்ந்தனர். சில காதலர்கள் பேசுவதற்கு வசதியாக செல்போன்களை பரிசளித்தும் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
காதலித்து திருமணம் செய்த ஜோடிகளும் பூங்காக்களுக்கு வந்து மலரும் நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். ஏற்காடு மலைப்பாதையிலும் ஆங்காங்கே காதலர்கள் தடுப்பு சுவர்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஏற்காட்டில் படகுதுறை, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ரோஜா கார்டன், சேர்வராயன் மலைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடியினர் உலா வந்து காதலர் தினத்தை கொண்டாடினர். ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான காதல் ஜோடியினர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பிறகு அவர்கள் பூங்காவிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். சில காதல் ஜோடிகள் சேலம் மாநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
மேட்டூர் பூங்காவுக்கு காதலர்கள் ஜோடி, ஜோடியாக நேற்று காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும் பூங்காக்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பூங்காக்களில் அத்துமீறிய காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஏற்காடு அடிவாரத்திலும் பல இடங்களில் காதலர்கள் அமர்ந்து பொழுதை கழித்தனர். ஏற்காடு மலைக்கு சில கல்லூரி மாணவ-மானவிகள் ஜோடியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினர். தொடர்ந்து போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதே சமயம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் வந்திருந்து தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
- காதலர் தினத்தில் குவிந்தனர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
காதலர் தினத்தையொட்டி காதலர்கள் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். வேலூரில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை, ரோஜாப்பூக்களின் விற்பனை அதிகமாக காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வேலூர் கோட்டைக்கு காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். கோட்டை மற்றும் கோட்டை யின் முன்பகுதியில் உள்ள பூங்காவில் காதல் ஜோடியினர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
கோட்டை பூங்கா மற்றும் கொத்தளத்தில் ஜோடிகள் அத்துமீறல்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பூங்காவில் இருந்த காதல் ஜோடிகளை போலீசார் விரட்டி அடித்தனர்.
இதேபோல கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்.
கோட்டைக்குள் செல்ல காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களில் பலர் அருங்காட்சியகம் மற்றும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.
- விருதுநகரில் காதல் ஜோடிகள் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் ரோசல் பட்டி முத்தால் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது43). இவரது மகன் விசால் (18). இவர் பாலவநத்ததில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முருகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் மாணவர் மற்றும் மாணவியை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் மாணவி ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது மாணவரும் அங்கு சென்றுள்ளார்.
இது கல்லூரி முதல்வருக்கு தெரியவந்தது. அவர் இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை வரவழைத்து மாணவியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வ தாக கூறி சென்ற விசால் பின்னர் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த முருகேஸ்வரி மாணவியின் ஊருக்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவியும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.எஸ்.காலனியை சேர்ந்தவர் நாகலட்சுமி (42). இவரது மகள் கார்த்திகா(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மாசிநாயக்கன்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் என்பவருடன் பழகி வந்தார். இதனை தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திகாவின் 19-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர். பின்னர் கல்லூரிக்கு சென்ற கார்த்திகா வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்த எழிலரசன் வீட்டிற்கு சென்று உறவினர்கள் விசாரித்தனர். அப்போது எழிலரசனை காணவில்லை என்றும் தேடி கொண்டிருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
- 2 நாட்களில் 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களில் 5 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த மஞ்சுளா-அஜித்குமார், உசிலம்பட்டி கீர்த்தனா-திருப்பூர் பார்த்தசாரதி, ஈரோடு புளியம்பட்டி தாஜிதா பானு- பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை அஸ்வினி- திருப்பூர் நெருப்பெரிச்சல் மணிகண்டன், திருப்பூர் அருள்ஜோதிபுரம் இளம்பெண்- வாலிபர் ஆகிய 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் மூலம் காதலிக்க தொடங்கினர். வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வந்ததும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 2 நாட்களில் 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காதல்ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது சில பெற்றோர்கள், காதல் திருமணம் வேண்டாம். எங்களுடன் வந்து விடு என்று கண்ணீர் விட்டு கதறி அழுது மகள்களை அழைத்தனர். ஆனால் அவர்கள் பிடிவாதமாக கரம்பிடித்த காதலன்களுடன்தான் செல்வோம் என்று கூறினர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த பெற்றோர்கள் கடைசியில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதுடன், எந்தவித பிரச்சனையுமின்றி வாழுமாறு வாழ்த்தினர்.
ஒரு காதல் ஜோடியின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்தனர். அவர்கள் தனது மகளிடம், உன்னை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினோம். நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க எண்ணினோம். ஆனால் இப்படி காதல் திருமணம் செய்து வந்து நிற்கிறாயே...எங்களுடன் வந்து விடு.. உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கதறி அழுதனர்.
ஆனால் அவர்களது மகள் காதலனுடன்தான் செல்வேன் என்று கூறியதுடன்தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து காதலனுடன் சென்றார். அப்போது அவரது பெற்றோரின் பாசப்போராட்டம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 19). எம்.வி.எம். கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேடசந்தூர் அடைக்கனூரைச் சேர்ந்தவர் கோபிசரவணன் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
மற்றொரு சம்பவம்...
குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூரைச் சேர்ந்தவர் பெருமாள் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கூம்பூரைச் சேர்ந்த தேன்மொழி (19) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
பெற்றோருக்கு பயந்து நேற்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் தனத்தனியாக வரவழைத்து சமரசம்பேசி அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி அனுப்பி வைத்தனர்.