என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "luxury cruise"
- ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளது.
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் நடைபெற்றது.
பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெட்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு முன் திருமண வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.
தற்போது பிரான்ஸ் கடற்கரையோர சொகுசு கப்பலில் 29-ந்தேதி முதல் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த திருமண விழா கொண்டாட்டத்தில் இன்னும் சில முக்கிய நபர்கள் விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். இது இன்னும் ஆடம்பரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல சிறந்த சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும் கலந்துகொண்டு இசைமழை பொழிய உள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நாள் குரூஸ் பாஷில் நிகழ்ச்சியில் நடனமாட பிரபல பாப் நட்சத்திரம் ஷகிரா சுமார் 15 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.
சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டணங்களை பொறுத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 அடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலில் 10 உணவகங்கள், பார்கள், ஸ்பா, கடைகள் உள்ளிட்டவை கப்பலில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்.. நாங்கள் காக்கா கூட்டமா? அதிமுக-பாஜக இடையே மீண்டும் வெடித்தது கருத்து மோதல்
- பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்தார்.
- சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, கழிவறை மற்றும் எந்திர அறை தனித்தனியாக இருக்கும்.
திருப்போரூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், எந்திர படகுகள், வேகமான எந்திர படகுகள் உள்ளன. இதனால் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் சொகுசு உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல் படுத்தப்பட உள்ளது. இந்த சொகுசு உணவக கப்பல் தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்தார்.
இதில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மிதக்கும் உணவக கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடனும் முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல்தளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, கழிவறை மற்றும் எந்திர அறை தனித்தனியாக இருக்கும்.
மிதக்கும் பிரம்மாண்ட சொகுசு உணவு கப்பல் பயன்பாட்டுக்கு வரும்போது முட்டுக்காடு படகு குழாமிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாமயில் வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் லி.பாரதி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களும் தொடங்கி வைத்தார்.
- கூடார நகரத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடைகிறது. மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, காணொலி வாயிலாக வாரணாசியில் சொகுசு கப்பல் எம்வி கங்கா விலாஸ் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களும் தொடங்கி வைத்தார். கூடார நகரத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்