search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Assembly election"

    • ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • இதில் 68 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுகட்டுகின்றன.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் இரு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த 2வது கட்ட தேர்தலில் 68.01 சதவீதம் வாக்குகள் பதிவானது என்றும், மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் 62.05 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • முதற்கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.
    • ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இதே போன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றன.

    மகாராஷ்டிரா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி 137 முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மற்றவை 2 முதல் 8 இடங்களில் வெற்றி பெறலாம்.

    இதேபோல் ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 150 முதல் 170 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களிலும் மற்றவை 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    சிஎன்பிசி கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 154 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், மற்றவை 6 இடங்களில் வெற்றி பெறலாம்.

    ஜார்க்கண்ட் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:

    ஜார்க்கண்டில் நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 47 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    என்டிடிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க. கூட்டணி 44 முதல் 53 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களிலும், மற்றவை 5 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டைம்ஸ்நௌ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 40 முதல் 44 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 முதல் 40 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெறலாம்.

    • 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு.
    • சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றன.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13 ஆம் தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்று 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

    • மகாராஷ்டிராவில் காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தனர்.
    • ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தனர். இந்த நிலையில் 11 மணி வரை நிலவரப்படி 18.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு காலை 11 மணி வரை 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி வரை 12.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    • மும்பை நகர்ப்பகுதிகளில் 6.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கட்சிரோலி மாவட்டத்தில் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சச்சின் தெண்டுல்கர் போன்றோர் காலையிலேயே வாக்கு மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினார். மக்கள் அதிக அளவில் திரண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    என்றபோதிலும் காலை 9 மணி வரை அதாவது 2 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் தோராயமான 6.61 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    கட்சிரோலி மாவட்டத்தில் 12.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அர்மோரி தொகுதியில் 13.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மும்பை புறநகர்ப் பகுதிகளில் 7.88 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பந்துப் மற்றும் முலுந்த் புறநகர்ப் பகுதிகளில் 10.59 சதவீதம் மற்றும் 10.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மும்பை நகர்ப்பகுதியில் 6.25 சதவீதம் வாக்குள் பதிவாகியுள்ளது. கொலபாவில் 5.35 சதவீதம் வாக்குள், வொர்லியில் 3.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • மகாராஷ்டிராவில் 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.
    • ஜார்க்கண்டில் ஒரு கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.

    மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றன.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்று 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    ஒரு கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    • மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்.
    • 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல்.

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவிகாலம் விரைவில் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய சட்டசபைகளை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிட்டது.

    அதன்படி மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது.

    அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகளும் மறைமுகமாக வேலை செய்தன.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 2 மாநிலங்களிலும் தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை ஆடினார்கள். நாளை வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெறும். 20-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 23-ந் தேதி (சனிக்கிழமை) ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது கிடையாது.
    • பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பஹின் திட்டம் கேம் சேஞ்சராக இருக்காது.

    பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள மகாயுதி கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    இரு கூட்டணிகளிலும் ஆட்சியை பிடித்தால் முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன. இரண்டு கூட்டணிகளும் முதல்வர் வேட்பாளர் இவர்தான் என யாரையும் முன் நிறுத்தவில்லை.

    இந்த நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பல முதல்வர் முகங்கள் உள்ளன. தேர்தல் முடிவு வெளியான பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ஆரிஃப் நசீம் கான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கூறுகையில் "காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது கிடையாது. வளர்ச்சி மற்றும் சித்தாந்ததம் ஆகியவற்றை முன்னிறுத்திதான் போட்டியிடுவோம். மகா விகாஸ் அகாடியில் ஏராளமான முதல்வர் முகங்கள் உள்ளன. ஆனால் தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பஹின் திட்டம் கேம் சேஞ்சராக இருக்காது. பா.ஜ.க. மற்றும் ஷிண்டேயின் உண்மையான முகம் மகாராஷ்டிரா மக்களுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் பொய்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தல் பாடம் கற்பிக்கும்.

    இவ்வாறு நசீம் கான் தெரிவித்துள்ளார்.

    2019 தேர்தலில் நசீம் கான் 409 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா கட்சி தலைவரிடம் தோல்வியடைந்தார்.

    • குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி.
    • அரசியலமைப்பில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம் என்றார் ராகுல் காந்தி.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. [மகாயுதி] கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டின் குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

    அதில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம். செல்வம் பகிர்ந்தளிக்கப்பட்டால் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பில் எழுதப்பட்ட முதல் வரி இந்த நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அதன் முதல் வரி இந்த நாடு அதானி, அம்பானிக்கு சொந்தம் என்பது அல்ல என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம்.
    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்த பேக், ராகுல் காந்தியின் உடைமைகளை சோதனையிட்டனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் யசோமதி தாகூர் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராகுல் காந்தி பேக்கை சோதனையிடும் அதிகாரிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரின் பேக்குகளை சோதனை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு முன்னதாக உத்தவ் தாக்கரே பேக்கை சோதனையை செய்தபோது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் பேக்குகளை ஏன் சோதனை செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

    பின்னர் ஏக்நாத் ஷிண்டு, பட்நாவிஸ், அஜித் பவார் போன்றோரின் பேக்குகளும் சோதனை செய்யப்படுவது போன்ற வீடியோ வெளியானது.

    • பொது வெளியில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக அவர்கள் பேசி வருகிறார்கள்.
    • அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவ்போது பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மகாராஷ்டிராவை பற்றி நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த நிலத்தில் சத்ரபதி சிவாஜி இழிவுப்படுத்தப்படுகிறார். மக்களாக நீங்கள் இழிவுப்படுத்தப்படுகிறீர்கள். பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் சிவாஜி பெயரை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அவருக்கு மரியாதை கொடுப்பது இல்லை.

    பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்த சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்டது. சிந்துதுர்க் பகுதியில் நிறுவப்பட்ட சிலை இடிந்து விழுந்தது. பழம்பெரும் மன்னர் பெயரை எடுத்துக்கொண்டு அந்த நபரை இழிவுபடுத்த வேண்டுமானால் என்ன பயன்.

    பொது வெளியில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக அவர்கள் பேசி வருகிறார்கள். மணிப்பூரில் இருந்து மும்பைக்கு நியாய யாத்திரை மேற்கொண்டவர், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று அவரைப் பற்றி சொல்கிறீர்கள்.

    ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நீதி கேட்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்காகவும் பயணம் செய்தார் என்று தெரிந்தும் பொது மேடைகளில் இருந்து பொய் சொல்கிறார்கள்.

    அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    • அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 20-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் சுமார் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 1.85 கோடி இளம் வாக்காளர்கள் (வயது 18-29) உள்ளனர். இதில் 20.93 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (வயது 18-19) ஆவார்கள். அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரபல தேநீர் கடைக்காரரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான டோலி சாய்வாலா எனும் சுனில் பாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

    ×