என் மலர்
நீங்கள் தேடியது "Maintenance works"
- 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- கவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந் தேதி)நடைபெற உள்ளது. எனவே அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, தாழங்குணம், கப்ளாம்பாடி, குந்தலம்பட்டு,நொச்சலூர், கோவில்புரையூர், ஆதிகான்புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரியலூர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரியலூர், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, ஏந்தல், மரூர், கடம்பூர், ஓடியந்தல், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மைய னூர், ஜெ. சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளைய னார்குப்பம், ஜம்படை, திரு வரங்கம், கள்ளிப்பாடி, ரெட்டி யார்பாளையம், கரையாம்பா ளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.
- சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
- நான்கு மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டு 15 நாட்களுக்கு முன் 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது
உடுமலை :
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மண்டலத்திற்குட்பட்ட பாசன நிலங்களுக்கு நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
நீர் திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து கேட்பின் போது காண்டூர் கால்வாயில் நிலுவையிலுள்ள புதுப்பிக்கும் பணி மற்றும் பிரதான கால்வாயில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள 4 இடங்களில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. நடப்பாண்டு இரண்டு மண்டல பாசனத்திற்கும், 4 சுற்றுக்கள் நீர் வழங்கி விரைவில் பாசனத்தை நிறைவு செய்து பராமரிப்பு பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இரண்டாம் மண்டல பாசனம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. அடுத்து மூன்றாம் மண்டல பாசனத்தில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு ஜனவரி 1 முதல் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.நீர் திறப்புக்கு குறுகிய காலமே உள்ளதால் மூன்றாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட கிளைக்கால்வாய், பகிர்மான கால்வாய் மற்றும் உப கால்வாய்களில் பராமரிப்பு பணி துவங்கியுள்ளது.
கிளைக்கால்வாய்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், உப கால்வாய்களில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வாயிலாகவும் புதர்கள் அகற்றப்பட்டு கால்வாய்கள் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது.உப கால்வாய்கள், பாசன சங்கங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் போதிய நிதி ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுள்ள நிலையில் பழைய பாசன சங்க நிர்வாகிகள் பெரும்பாலான சங்கங்களில் வரவு- செலவு கணக்குகளை ஒப்படைக்காமலும் வங்கி ஆவணங்களை மாற்றி தருவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் வரும் கால்வாய்களை ஆய்வு செய்து உரிய நிதி விடுவிக்க வேண்டும். பழைய நிர்வாகத்தினரிடமிருந்து கணக்குகளை மாற்றி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் கடந்த இரு ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது போல் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் வேலை உறுதித்திட்ட பணியாளர்களைக்கொண்டு விரைவில் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஆண்டு துவக்கத்திலேயே விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் 2 மற்றும் 3ம் மண்டல பாசனத்திற்கு 4 சுற்றுக்களில் 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது இரண்டாம் சுற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் மூன்றாம் சுற்றுக்கும் விரைவில் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழைகள் ஒத்துழைப்பு காரணமாக திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளது.
இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றவுடன், பிரதான கால்வாய், கிளைக்கால்வாய்களில் மூன்றாம் மண்டலத்திற்கு நீர் திறப்பதற்கு மடைகள் மாற்றி அமைத்தல், முட் செடிகள், புதர்கள், குப்பை அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீர் வராததால் மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள உப கால்வாய்கள் புதர் மண்டி காணப்படுகிறது. அவற்றை மீட்க சம்பந்தப்பட்ட பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் கருத்து கேட்டு மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து அரசு உத்தரவு அடிப்படையில் நீர் திறக்கப்படும்.வழக்கமாக ஜனவரி 14 பொங்கலுக்கு பின் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு 15 நாட்களுக்கு முன் 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கி ழமை) நடை பெற உள்ளது. இதன் காரணமாக சங்கரா புரம், பாண்டலம், வடசிறு வள்ளூர், வட செட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடை யாம்பட்டு, ஆருர், ராமராஜ புரம், அரசம்பட்டு, அர சராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க் குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.
- வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
- 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் மின்நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால் மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம் பாக்கம், பக்க மேடு, கலிங்கமலை, கோண்டூர், வெள்ளா ழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம் பாளையம், குயிலா ப்பாளையம், தாண்டவ மூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்பு துப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், ரசப்புத்திரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கள்ளக்குறிச்சி:
எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எறையூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அயன்குஞ்சரம். பாளையகுஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம்,எறையூர், வடகுறும்பூர், எஸ்.மலையனூர், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
- சிவகாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகாசி
சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி அர்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, சிவகாசி அர்பன், காரணேசன் பள்ளி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்கடை முக்கு, தபால் நிலையம், பராசக்தி காலனி ஆகிய பகுதிகளில் இருந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
அதேபோல் வடக்கு ரதவீதி, வேலாயுதரஸ்தா, அண்ணா காலனி, லிங்க புரம் காலனி, ராஜிவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசநகர், பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.
- நீலக்குடி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
- வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
திருவாரூர்:
திருவாரூர் மின்வாாிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலக்குடி துணைமின்நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
இதனால் இந்த துணைமின்நிலைத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், நன்னிலம் துணை மின்நிலையம் மற்றும் நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர்,
பிபல்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரை மங்கலம், காரையூர், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-ந் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்வினியோம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலங்காநல்லூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (11-ந்தேதி) காலை 9மணி வரை மாலை 5மணி வரை பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- கரூர் உழவர் சந்தையில் ரூ.48 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது.
கரூர்:
கரூர் உழவர்சந்தை பழைய பஸ்நிலைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. கரூர் உழவர்சந்தை 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 18 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 150 முதல் 160 விவசாயிகள் வருகை புரிவார்கள்.
அப்போது 25 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருக்கும். இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் உழவர்சந்தையை மேம்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, நடைபாதை சீரமைப்பு, கடைகளில் மேற்கூரைகள், தளங்கள் அமைப்பது, அலுவலக மேற்கூரை, உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கரூர் உழவர்சந்தையில் தற்போது ரூ.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடைகள், அலுவலகங்கள் சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் இப்பணிகள் 1 மாதத்திற்கு நடைபெறும் எனவும், அதுவரை கரூர் உழவர்சந்தை தினமும் காலை 8 மணி வரைதான் நடைபெறும் எனவும் தெரிவித்தார். கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணியுடன் விற்பனை முடிவடையும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு உழவர்சந்தை வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு பலகை நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்தது.