என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Malaysia Airlines"
- மார்ச் 8, 2014 இல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது
- விமானம் எங்கு மறைந்திருக்கும் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்
மார்ச் 8, 2014 : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.
MH370 மர்மம்
மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது, இதுவரை கிடைத்த சாட்டிலைட் தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், MH370 விமானமானது இந்தியப் பெருங்கடலின் தெற்கே, ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையை ஒட்டிய பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இதுநாள் வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்தது. MH370 விமானத்துக்கு என்ன நடந்திருக்கும் என்ற பலவாறாக யூகங்கள் கான்சபைரஸி தியரிக்கள் கூறப்பட்டு வருகிறன.
இந்தியப் பெருங்கடல்
ஆனால் விமானம் எங்கு மறைந்திருக்கும் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தென் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் Broken Ridge [முகடு] எனப்படும் 20,000 அடி ஆழம் கொண்ட oceanic plateau துளை உள்ளது. இதற்குள்தான் MH370 விமானம் விழுந்துள்ளது என்றும் அதனாலேயே எந்த ஒரு ரேடாராலும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் டாஸ்மேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வின்சன்ட் லைனே Vincent Lyne கூறுகிறார்.
இந்த துளையில் உள்ள குறுகலான செங்குத்தான பகுதிகள், ராட்சத முகடுகள், ஆழமான பகுதிகள் மற்றும் கடல் படிமங்களை உள்ளடக்கிய இந்த 20,000 அடி ஆழ Broken Ridge விமானம் ரேடாரில் சிக்காமல் மறைய சரியான இடமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எந்திர கோளாறால் வரவில்லை.
- விமானம் ரத்து செய்யப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று விமான நிறுவனத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று இரவு 1.40 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 320 பயணிகள் பரிசோதனைகள் அனைத்தும் முடித்து தயார் நிலையில் இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் புறப்படவில்லை. விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்படும் என்று மட்டும் விமான நிறுவனம் அறிவித்தது. ஆனால் இன்று காலை 7 மணி வரை விமானம் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் விமான நிறுவனத்திடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எந்திர கோளாறால் வரவில்லை. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தனர். வழக்கமாக இந்த விமானம் சென்னைக்கு இரவு 12.50 மணிக்கு வரவேண்டும். பின்னர் இதே விமானம் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். விமானம் ரத்து செய்யப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று விமான நிறுவனத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் மாற்று விமானத்தில் செல்ல விமான நிறுவனம் ஏற்பாடுகள் செய்தது.
- விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
- இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சர்வதேச விசாரணைக்குழு 4 பேர் மீது குற்றம் சுமத்தியது.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்தில் இருந்து 2014, ஜூலை மாதம் 17-ம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்த போது ரஷிய எல்லைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 15 விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், உக்ரைன் படைகள்தான் பொறுப்பு என ரஷியாவும் பிரிவினைவாதிகளும் கூறின.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரஷியர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்காவது நபர் விடுவிக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்