என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manchester City"
- மான்செஸ்டர் சிட்டி 4 முறை தொடர்ந்து பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணம்.
- யூரோ கோப்பையில் ஸ்பெயின் இங்கிலாந்தை 2-1 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.
கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.
அவர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவும். தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். 2023-24 சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008-ல் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காக பலோன் டி'ஆர் விருதை வென்ற பிறகு இங்கிலீஷ் பிரீமியரில் விளையாடும் ஒரு வீரர் பலோன் டி'ஆர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
- எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை மான்செஸ்டர் சிட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
- அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.
அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது. ஹாலண்ட் விளையாடி போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோவை எடிட் செய்து ஜெயிலர் படத்தின், 'Hukum' பாடலை வைத்து ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தது. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ரீல் மான்செஸ்டர் சிட்டியின் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச வீரருக்கு ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற பாடல் பயன்படுத்தப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
- மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
- 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.
இஸ்தான்புல்:
கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.
முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
- 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.
இஸ்தான்புல்:
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.
அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு பிரிமீயர் லீக் அணி அறிவிக்கப்படும். இந்த அணியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரரான பால் போக்பா இடம் பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணியைத் தவிர்த்து இடம் பிடித்த ஒரே வீரர் இவர்தான்.
பிரிமீயர் லீக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்டி ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்னாண்டினோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).
இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.
இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.
மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
அதன்பின் சொந்த நாடு திரும்பி தான் இளம் வயதில் விளையாடிய கிளப்பிற்காக விளையாட இருப்பதாக செர்ஜியோ அக்யூரோ சூசகமாக தெரிவித்திருந்தார். கடந்த 2017-18 சீசனில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் சாம்பியனை வெல்ல செர்ஜியோ அக்யூரோவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இதனால் இவருடான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க மான்செஸ்டர் சிட்டி விரும்பியது. இதை அக்யூரோ ஒத்துக்கொண்டார். இதனால் 2021 வரை செர்ஜியோ அக்யூரோ மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடுகிறார்.
அக்யூரோ மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 210 போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்துள்ளார். இதுவரை வாரத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பவுண்டு வாரச் சம்பளமாக பெற்ற இவர், இனிமேல் 3 லட்சம்து 50 ஆயிரம் பவுண்டு சம்பளமாக பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது பாதி நேரத்தில் செல்சி அணி அசத்தியது. அந்த அணியின் பெட்ரோ 72-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஈடன் ஹசார்டு 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செல்சி 2-0 என வெற்றி பெற்றது.
மான்செஸ்டர் சிட்டி வீரர் ஸ்டெர்லிங் பந்தை கடத்தும் காட்சி
மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - நியூகேஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் அணியின் எட்லின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற்றது.
இதில் மான்செஸ்டர் சிட்டி அணி கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ முதல் கோலை பதிவு செய்தார். 31-வது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் ஒரு கோலும், 35-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோலும் அடித்தனர். முதல் பாதி நேரம் ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னாள் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியின் ஸ்டேன்கோவிச் ஒரு கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதி நேரத்தில் 3-1 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் 48-வது நிமிடத்தில் டேவிட் சில்வா ஒரு கோல் அடித்தார். 75-வது நிமிடத்தில் அக்யூரோ மேலும் ஒரு கோல் அடித்தார். 84-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க மான்செஸ்டர் சிட்டி 6-1 என வெற்றி பெற்றது.
இவர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது வலது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய நீண்ட நாட்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் சுமார் இரண்டு மாதங்கள் ப்ரூயின் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் முதன் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் லெரோய் சானே முதல் கோலை பதிவு செய்தார்.
63-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பதில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
காயத்திற்கான கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் 94-வது நிமிடத்தில் லிவபர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி சாடியோ மானே கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-1 என வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்