என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manchuviratu"
- கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
- விழா நிறைவடைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் நிறை குளத்துஅய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் மற்றும் முத்துராம லிங்கதேவர் 31-வது குருபூஜை விழா நடை பெற்றது.
விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.
இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்க மதுரை, விருது நகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2 அண்டா, 2 குக்கர், ரூ.5000 ரொக்கம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.
இந்த வடமாடு மஞ்சு விரட்டு விழா நிறைவ டைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
- மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
- டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தில் மலை மருந்தீஸ்வரர்-முனிநாத சுவாமி கோவில்உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு நடை பெற்றது.
ஏரியூர் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராம மக்கள் ஏரி கண்மாயில் மீன்பிடி திருவிழாவும், அதனை தொடர்ந்து பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நேற்று மாலை நடந்தது.
முன்னதாக ஏரியூர், மயில்ராயன் கோட்டை, வலையபட்டி, கலிங்கப்பட்டி போன்ற 10-க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஓடிய காளைகளை வீரத் தோடு திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
- வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தனர்.
சிவகங்கை
வாடிவாசல் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் விவசாய பணிகள் காரணமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தன. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிகள் மே மாதத்திற்கு பிறகு நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். மீறி மஞ்சு விரட்டு நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.
பின்னர் கவுரவ தலைவர் பனங்குடி சேவியர் கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மாநில தலைவர் அந்தோணி, துணைத்தலைவர் பரத்ராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்