search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாடு மஞ்சுவிரட்டு
    X

    வடமாடு மஞ்சுவிரட்டு

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • விழா நிறைவடைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் நிறை குளத்துஅய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் மற்றும் முத்துராம லிங்கதேவர் 31-வது குருபூஜை விழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.

    இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்க மதுரை, விருது நகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2 அண்டா, 2 குக்கர், ரூ.5000 ரொக்கம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.

    இந்த வடமாடு மஞ்சு விரட்டு விழா நிறைவ டைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    Next Story
    ×