என் மலர்
நீங்கள் தேடியது "Mata"
- அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி
- தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது
அரவேணு,
கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
கோத்தகிரி ஆலய பங்கு தந்தை அமிர்தராஜ், எம ரால்டு ஆலய பங்குத்தந்தை ஞானதாஸ் ஆகியோர் தலைமையேற்று கொடியேற்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடக்க உள்ளது.
திருவிழாவின் முக்கிய நாளான 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலியும், 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி நடக்க உள்ளது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து ஆலயத்தில் தேவ நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது.
- இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
- மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூர்:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு தினமும் வருவர்.
இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. 8-ந் தேதி மாதாவின் பிறப்பு பெருவிழா நடைபெற உள்ளது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக சென்று வருகின்றனர்.
சிறிய மற்றும் பெரிய அளவில் சப்பரங்களை இழுத்துக் கொண்டு பின்னால் மினி லாரியில் ஒலிபெருக்கியில் மாதாவின் பாடல்களை ஒலிக்க விட்டவாறு செல்கின்றனர்.
தஞ்சையில் மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை காணப்படுகிறது.
இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.