என் மலர்
நீங்கள் தேடியது "Medical Camp"
- மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- சம்பூர்ணா சித்தா கிளினிக் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் பகுதியில் அமைந்துள்ள சம்பூர்ணா சித்த மருத்துவமனையில் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனர் சுசான்லி டாக்டர் ரவியின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர் புதுவை மண்டலத்தின் சார்பில் வலி நிவாரணத்திற்காக மாபெரும் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனரும், தலைவருமான சுசான்லி டாக்டர் ரவி தலைமை தாங்கினார். சம்பூர்ணா சித்தா கிளினிக் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
டாக்டர் சினேகா வரவேற்று பேசினார். கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ட் சென்டரின் புதுவை மண்டல தலைவர் டாக்டர் வெங்கடேசன், டாக்டர்கள் சாரதாஸ்ரீ, லீனா, பவானி, இலக்கியா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். புகழ் ஹெல்த் கேர் நிறுவனர் மங்கையர்கரசி நன்றி கூறினார்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் சம்பூர்ணா சித்தா மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.
- காதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முரு கன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.
பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊழியர்களை பரிசோதித்த னர். இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் ஏற்பாடு களை செய்திருந்தார்.
- புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் எதிரில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் அப்பகுதி மக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் எதிரில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம் மற்றும் நோயால், தேசீர், முரளி, செல்வம், காலப்பன், மணிமாறன், அய்யனார், ராகேஷ் கவுதமன், சக்திவேல், வேல்முருகன், மதி, ரகுமான், லாரன்ஸ், மோரீஸ், மதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முகாமில் அப்பகுதி மக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.
- கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது.
- கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தென்காசி:
வீரகேரளம் புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் நெல்லை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை யேசுராஜா, யேசுதாசன் மற்றும் சவுந்தர் , முகாம் ஒருங்கினப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருவந்தா ஊராட்சி உடன் இணைந்து செய்து இருந்தனர்.
- 800-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்
- நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சகாயத் தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள தொன்பாஸ்கோ வேளாண்மை கல்லூரியில் மென் இன் ஒயிட் மற்றும் போர்டிஸ் ஆஸ்பத்திரி இணைந்து மாபெரும் மருத்துவ முகாமை பேராயர் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் டாக்டர் குகநாத் சிவ கடாசம் கலந்து கொண்டார். இந்த மருத்துவ முகாமில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
உடன் மென் இன் ஒயிட் நிர்வாகிகள் ஜோசப், கென்னடி, தீபு ஆண்டனி, டாக்டர் பாஸ்கர்ராஜ், டாக்டர் இம்தியாஸ் ரிபாயி, வீரா பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- மருத்துவ வசதி வேண்டி நிர்வாகத்தினர் வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சியில் பள்ளத்தூர் மலையடிவாரப்பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் பொது மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை என்றும் உடனடியாக தங்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மகேந்திரன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதியை தொடர்பு கொண்டு மருத்துவ வசதி வேண்டி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத்தில் நடமாடும் மருத்துவக் குழு டாக்டர். பிரசாந்த் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது சுகாதாரத் துறையினர், கிராம மக்கள், ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
- தற்போது சென்னையில் மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.
- சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் .
சென்னை:
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையும், மாநகராட்சியும் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
அதன்படி இன்று ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.
200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.
பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.
- மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னை முழுவதும் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. மாநகராட்சி மருத்துவ துறையுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு துறை டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இந்த முகாமை நடத்தினார்கள்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடந்தன. பெரும்பாலான முகாம்களில் கூட்டம் அலைமோதியது.
சேறு நிறைந்த தண்ணீரில் விளையாடியதால் சேற்றுப் புண்கள் ஏற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு மருந்து தடவி தொடர் சிகிச்சைக்கு மருந்தும் வழங்கினார்கள்.
பலர் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்காக சிகிச்சை பெற வந்திருந்தனர். அவர்களை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.
முகாம்களில் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.
மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-
2006-ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது இதே போல் மழைக்காலத்தில் 155 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது 64 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். அது இந்திய அளவில் சாதனையாக பதிவானது.
இன்றும் 200 இடங்களில் நடந்து வரும் முகாம்களில் ஏராளமான மக்கள் பயன் அடைவார்கள்.
கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தது. பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொடர் நடவடிக்கையால் பாதிப்பு குறைவாக இருந்தது.
கடந்த ஆண்டுகளில் மக்கள் பாதிப்புகளை சொல்ல திரண்டதை பார்த்தோம். இந்த ஆண்டு திரண்டு வந்து நன்றி சொல்கிறார்கள். மழை வெள்ளம் மறைந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
இரண்டே நாளில் மழை பாதிப்பில் இருந்து சென்னை விடுபட்டுள்ளது. தேவையான அளவு நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கி தந்தாலும் அதை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகள் பெருமை தேடி தந்துள்ளனர்.
9-ந்தேதி பெரிய அளவில் மழை வரும் என்கிறார்கள். எவ்வளவு பெரிய மழையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. விரைவில் அந்த பணியையும் செய்து முடித்து அடுத்த ஆண்டு நூறு சதவீதம் மழை பாதிப்பு இல்லாத வகையில் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். முகாமில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மணிமாறன் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராய ர், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, குளத்தூர் நாயக்கர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி ராணி மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் வைரக்கண்ணு, மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.
- வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களும், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் 18,70 லட்சம் பயனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1298 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் உழவன் முருகன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை வாழப்பாடி உதவி இயக்குநர் மருத்துவர் முருகன் வரவேற்றார்.
துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்தார். மாரியம்மன்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, கறவைமாடுகள், எருது மற்றும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, கால்நடை மருத்துவர்கள் செல்வராஜ், கோவிந்தன், கால்நடை பாராமரிப்பு உதவியாளர் மூர்த்தி, சுதாகர்
ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இலவச சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாமில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாபு, சுரேஷ், செந்தில், முருகன், பார்த்திபன், தமிழ், பாஸ்கர், வசந்தா, ரஞ்சிதா, ராஜாத்தி, அருணா சந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் தலைமை தாங்கி கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் கால் நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மற்றும் சினை மாடுகளுக்கு கால்நடை மருத்துவர் தில்லை தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாம் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் துணை தலைவர் சாமுடி வார்டு கவுன்சிலர் தேவன் கூட்டுறவு சங்க துணை தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.