search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant death"

    • போளூரை சேர்ந்தவர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    வேலூர்:

    போளூர் அருகே உள்ள எட்டி வாடி பாலாத்து வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48). பூ வியாபாரி. தினமும் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை பைக்கில் பூக்கள் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்தார்.

    கணியம்பாடி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் வைகை ஆற்று சேற்றில் சிக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது72). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று மதியம் கறவைக்காக மாட்டை தேடியபோது அதனை காணவில்லை. எனவே மாட்டை தேடி அந்த பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு சென்றார்.

    தியாகராஜர் கல்லூரி பின்புறம் உள்ள வைகை ஆற்றில் மாட்டை தேடிய போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சேற்றில் கிருஷ்ணன் தவறி விழுந்தார். தலைகுப்புற விழுந்த அவர் சேற்றில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெங்கல் அருகே லாரி மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    மாதவரம் அம்பேத்கார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46).தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். இவர் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை என்ற கிராமத்துக்கு விவசாய நிலத்தில் உள்ள தர்பூசணியை மொத்தமாக வாங்க வந்தார். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை நோக்கி சென்ற லாரி ஒன்று இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த கார் தீ பிடித்ததில் வியாபாரி பலியானார்.

    பேரையூர்:

    நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் (வயது 59). கருவாடு வியாபாரி. இவர் நேற்று நாமக்கல் செல்வதற்காக காரில் புறப்பட்டார். கன்னியாகுமரி அருகே உள்ள ஆலங்கோட்டையைச் சேர்ந்த மோகன் மகன் சதீஷ் காரை ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் 4 வழிச்சாலையில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது.

    அதே வேகத்தில் அங்குள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து உருண்டது. இதில் கார் தீ பிடித்தது.

    இந்த விபத்தில் வியாபாரி ஜெலஸ்டின் காயம் அடைந்தும், தீயில் கருகியும் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் சதீஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியான சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது81). இவர் தள்ளுவண்டி மூலம் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் ரோட்டில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது காளியப்பன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் இக்பால் (வயது 68). நூல்வியாபாரி. இவர் இன்று காலை நாட்டறம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இக்பால் கடக்க முயன்றார். அப்போது கடப்பாவில் இருந்து கேராளா நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் இக்பால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கபட்டது.

    கும்மிடிப்பூண்டி அருகே பஸ் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த அப்பாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஷோபா மற்றும் படுக்கை விரிப்புகளை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    இவரது மனைவி மவுனி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது மவுனி கர்ப்பமாக உள்ளார்.

    நேற்று இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு எளாவூர் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வீராசாமி நகர் அருகே மேம்பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது எளாவூரில் இருந்து கள்ளூர் நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் வியாபாரி சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் வேன் மோதியதில் வியாபாரி பலியானார்.

    விருதுநகர்:

    தேனியைச் சேர்ந்த நாட்டு மருந்து வியாபாரி ஜெயராமன் (வயது 51). வியாபார வி‌ஷயமாக பல்வேறு ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    நேற்று அவர் விருதுநகர் வந்தார். அங்கு நண்பர்களிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அருப்புக்கோட்டை சாலையில் சென்றார்.

    பெரிய வள்ளிக்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது, பின்னால் தண்ணீர் வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர் கிழக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பலியான ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் இருக்கன்குடி மயில்வாணன் (48) கைது செய்யப்பட்டார்.

    வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது39). தாமரை பாக்கம் கூட்டுச்சாலையில் ‘ஹார்டுவேர்ஸ்’ கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    புன்னப்பாக்கம்-பெரு முடிவாக்கம் நெடுஞ்சாலையில் வளைவில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் ஆனந்த் மோட்டார் சைக்கிளை திடீர் என்று பிரேக் போட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ஆனந்த் பலியானார்.

    தகவல் அறிந்ததும் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோத்தகிரியில் பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலியானார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே கோடநாடு சாலையில் உள்ள எஸ்.கைகாட்டியை சேர்ந்தவர் நூர் முகமது. இவரது மகன் முகமது ரபீக்(வயது 41). வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ரபீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதித்து இருப்பதை உறுதி செய் தனர். இதையடுத்து முகமது ரபீக் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், டாக்டர் சிவானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் எஸ்.கைகாட்டி பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் முகமது ரபீக்கின் வீட்டை சுற்றிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவரது உறவினர்களுக்கு காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகமது ரபீக் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோத்தகிரி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை, திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி பலியானார். #Denguefever #Swineflu
    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான புற நோயாளிகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று சென்று திரும்புகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் குழந்தைகளுக்காக 27 படுக்கைகளும், பெரியோருக்கு 37 படுக்கைகளும் கொண்ட தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வார்டுக்கு 3 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தற்போது 7 பேர் வைரஸ் காய்ச்சல் காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் அல்ரோஸ் (வயது 18). கும்பகோணத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தாமஸ் (40) மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியை சேர்ந்த ராஜா (30) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இவர்களை சிறப்பு டாக்டர்கள் குழு கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காய்ச்சல் பிரிவில், திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 40 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குணா (22), பொன்னிறையைச் சேர்ந்த விக்னேஷ் (24), குடவாசல் பகுதியை சேர்ந்த அரவிந்த்சாமி (28), ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணம் பட்டாச்சாரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நஸ்ருதீன் (45). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அப்போது நஸ்ருதீன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்று மருத்துவ மனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்துக்கு நேற்று நஸ்ருதீன் உடல் கொண்டு செல்லப்பட்டது.

    தற்போது கும்பகோணம் நகராட்சி பணியாளர்கள் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். #Denguefever #Swineflu



    திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேடசந்தூர்:

    சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி கிருஷ்ணன் (வயது34). வெள்ளி பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்து வந்தார். மதுரையிலும் பொருட்களை கொடுத்து விட்டு வசூல் செய்வது வழக்கம்.

    அதன்படி மதுரைக்கு சென்று பணம் வசூலித்த முரளிகிருஷ்ணன் காரில் சேலம் நோக்கி 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே வேடசந்தூர் விருதலைப்பட்டி பிரிவு தனியார் மில் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

    சாலையோரத்தில் இருந்த எல்லை கல்லில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த முரளிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×