என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "middle class"

    • வீட்டு வசதி வாரிய மனைநிலங்கள் விற்பனையில் புதிய நடைமுறையை கைவிட வேண்டும்.
    • சாமானியர்கள், நடுத்தர வகுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனை நிலங்களை முதல் விற்பனையின்போது குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கமான நடைமுறை.

    இந்த நடைமுறையின் போது சதவீத அடிப்படை யில் ஆதிதிராவிடர்களுக்கு 18, பழங்குடியினருக்கு 1, அரசு ஊழியர்களுக்கு 18, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8, ராணுவத்தினருக்கு 7, சலவையாளர்கள் மற்றும் மருத்துவ சமுதாயத்தினருக்கு 4, பத்திரிகையாளர்களுக்கு 3, மொழிப்போர் தியாகிகளுக்கு 1, வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு 38 என்ற அடிப்படையில் மனை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்போது வீட்டு வசதி வாரியம் இந்த நடை முறையை கைவிட்டு மனைநிலங்கள் முதல் விற்பனையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் மனை நிலங்களை விற்பனை செய்யும் நடை முறையால் ஒதுக்கீட்டு முறையில் தேர்வு செய்யப் படாமல் சாமானிய, நடுத்தர மக்களுக்கும் மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

    இதுவரை வீட்டுவசதி வாரிய மனை நிலங்களுக்கு சந்தை விலையை விட 20 சதவீதம் விலை குறை வாகவே நிர்ணயம் செய்து வந்தது. ஆனால் தற்போது சந்தை விலையை கணக்கிட்டு அதன் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழக அரசு புதிய நடைமுறையான முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் விற்பனை செய்வதை கைவிட்டு பழைய ஒதுக்கீட்டு நடை முறையை பின்பற்றுவதோடு 2-வது விற்பனையில் வேண்டுமானால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்கும்படி சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • உங்களுடைய ஆலோசனைகளை அரசு கவனிக்கும் என மத்திய நிதி மந்திரி பதிலளித்தார்.

    புதுடெல்லி:

    அக்டோபர் மாதத்தின் சில்லரை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்திருந்தது. செப்டம்பர் மாதத்தின் உணவு பணவீக்கம் 10.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. எனவே நடுத்தர வர்க்கத்தினரை பணவீக்கம் மிகவும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், துஷார் சர்மா என்ற எக்ஸ் வலைதள பயனர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

    அதில், நாட்டுக்காக உங்களுடைய பங்களிப்பு மற்றும் முயற்சிகளை வெகுவாக பாராட்டுகிறோம். நீங்கள் எங்களுடைய மரியாதையை பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்படி உங்களை தாழ்மையுடன் கேட்கிறேன்.

    இது சற்று சவாலானது என்பது தெரிந்தபோதும், இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன் என கேட்டிருந்தார்.

    இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உங்களுடைய கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதல்களுக்கு நன்றி. உங்கள் கவலையைப் புரிந்து கொண்டுள்ளேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதில் அளிக்கக்கூடிய அரசு. மக்களின் குரல்களை கேட்டு அதற்கு பதிலளிக்கக் கூடியது. உங்களுடைய ஆலோசனைகள் மதிப்புமிக்கவை என பதிவிட்டுள்ளார்.

    • 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
    • இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.

    இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.

    ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    வாங்கும் திறன்:

    அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.

    ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு:

    இந்தியாவில் ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருவதைப் போல பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கவில்லை என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

    இதன் பொருள் ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்து வரும் வேலையில் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.

    இந்த நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, மக்களிடம் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்திருப்பதும் முக்கியக் காரணம் என்கிறது ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. .இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திதுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    1990 ஆம் ஆண்டில், இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 34 சதவீதத்தை வைத்திருந்தனர். இன்று அதே 10 சதவீத மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.

     

    அதேசமயம், நாட்டின் ஏழ்மையான 50 சதவீத மக்களின் வருமானம் 22.2 சதவீதத்திலிருந்து வெறும் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாவும் மாறியுள்ளனர்.

    நசுங்கும் நடுத்தர வர்க்கம்:

    பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது, அதாவது அவர்களின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது.

    நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. மக்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.

     

    ஆனால் வருமானம் அப்படியே உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்த வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருவதாகத் ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை நிறுவியுள்ளது.

    • முனிஷ் காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’.
    • இப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார்.

    இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கும் படம் 'மிடில் கிளாஸ்'. முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கவுள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா மற்றும் கதிர்மொழி பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.


    படக்குழு

     மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27- ஆம் தேதி தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ×