search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Nehru"

    • காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    புளியங்குடி:

    நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புளியங்குடி நகராட்சிக்கு சொந்தமான காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை யான கட்டிட வளாகம் ஆகும். மேற் குறிப்பிட்ட காந்தி நினைவு தினசரி அங்காடி வளாகம் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார் 28 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது.

    காந்தி நினைவு தினசரி வியாபாரிகளின் கோரிக்கைப்படி அப்பகுதியில் வைத்திருந்த வியாபாரிகளின் வாழ்வா தாரம். கருதி மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி இடத்தில் புதிய காந்தி வணிக வளாகம் தரைதளம் மற்றும் முதல் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், தென்காசி மாவட்ட கலெக்டர் கடிதத்தின் படி புளியங்குடி நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வடக்கு ரதவீதியில் வருவாய் துறைக்கு சொந்தமான வார்டு-ஈ பிளாக்-2. டி 5.நம்.1/7- ல் 30 செண்ட் நிலமும், சுகாதார நிலையம் கட்டுவதற்கு 20 செண்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புளியங்குடி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு உத்தேச தொகை ரூ.10 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சந்திப்பின் போது சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ. மற்றும் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார்.
    • சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வியாபார தலம்

    சுரண்டை மிகப்பெரிய வியாபார ஸ்தலமாகும். சுற்றுப்புற விவசாயிகள், விவசாய பொருட்களை கொண்டு வந்து போகும் பகுதியாகும். மேலும் மதுரை, நெல்லை போன்ற பெரிய நகரங்களில் இருக்கிற அளவிற்கு சுரண்டையில் மருத்துவ வசதி மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் சுரண்டைக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்கனவே பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிலையத்தில் கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்ச செலவில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சிரமம்

    பஸ்கள் வந்து நிற்பதற்கு இடமில்லாமல், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பஸ் நிலையம் அமைந்துள்ள சாலை கடைகள் அதிகமாக உள்ள பகுதி. அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே இந்தக் காரணங்களை ஆய்வு செய்து சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் காசி தர்மதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஹசன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, ஓணம்பீடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதி ஸ்டீபன் சத்யராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தொழிலதிபர் சண்முகவேல், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன் பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    ×