search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister SM Nasar"

    • வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
    • இந்தப் படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சா.மு. நாசர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்த போது வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.

    இது குறித்து பேசும் போது, "அவருக்கும் கல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல பேர் பல படங்களை எடுத்தார்கள். பல ஜாம்பவான்கள் படங்களை எடுத்தார்கள். அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய வசூல் செய்துள்ளது. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஒரு படம் எடுத்தார். மகத்தான, மாபெரும், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் பார்த்தீர்கள் என்றால் கல் தான்," என்று கூறினார்.

    உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்தப் படம் நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்டிருந்தது.

    இந்த நிலையில், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் புரட்சியை ஏற்படுத்தியதாக அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலர், இது தொடர்பான வீடியோக்களில் கமென்ட் செய்து வருகின்றனர். 

    • தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.
    • குற்றங்களை ஆராய்ந்து எந்தவித பாகுபாடும் இன்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச இருந்த நிலையில், அந்தப் பணிகளை பார்வையிட சென்ற பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், அங்கு நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.

    அமைச்சர்கள் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டபோது, முதலமைச்சர் வேண்டுகோள் விடுப்பதை தவிர்த்து கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல் நடைபெற்றிருக்காது.

    குற்றங்களை ஆராய்ந்து எந்தவித பாகுபாடும் இன்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சர் சா.மு.நாசர் கல்லை எடுத்து வீசும்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
    • விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுவதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொண்டர்களிடம் கோபத்தை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் அமர நாற்காலிகள் எடுத்து வருவதறகு தாமதம் ஆனதால், தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார். அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 'இந்திய வரலாற்றில், ஒரு அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

    'திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆவடி நாசர் தான் இப்படி செய்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகிறார். கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை. மக்களை அடிமை போல நடத்துவதுதான் திமுக' என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

    • மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை வீசும்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், வந்திருக்கும் நிர்வாகிகள் உட்காருவதற்கு நாற்காலிகளை எடுத்து வரும்படி கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.

    கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் இருந்த நிலையில், ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை தொண்டர்கள் மீது அமைச்சர் நாசர் வெளிப்படுத்தினார். அமைச்சர் சா.மு.நாசர், தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ×