search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "miscreants"

    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
    • மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு சிட்கோவை அடுத்துள்ளது கணேசபுரம். சிட்கோவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் இப்பகுதியில் தான் குடியிருந்து வருகின்றனர். அவர்களில் வட மாநில இளைஞர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

    சிட்கோவில் இருந்து கணேசபுரம் செல்லும் வழியில் ெரயில்வே கேட் அருகே ஒரு தரைப்பாலம் உள்ளது. தெருவிளக்கு இல்லாத காரணத்தால், இப்பகுதியானது எந்த நேரமும் இருட்டாக காணப்படும்.

    இதனால் அப்பகுதியில் அவ்வப்போது சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பகுதி மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களை மர்ம நபர்கள் குறிவைத்து மிளகாய் பொடி தூவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    மிளகாய் பொடி கண்ணில் பட்டதும் நிலைகுலையும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள உடைமைகளை கொள்ளையடிக்கும் செயல் நடந்து வருகிறது. பிரதி வாரம் சனிக்கிழமை சம்பள தேதி என்னும் காரணத்தால் சிட்கோ பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் பணப்பழக்கம் இருக்கும். இதனால் சனிக்கிழமைகளில் இந்த சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது அந்த இடத்தில் இரவு முழுவதும் போலீசாரின் ரோந்து பணி தீவிர படுத்தப்படும்.

    இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உடனே பொதுமக்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட இந்த இடத்தில், தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 11 மணியில் இருந்து 2 மணி வரையிலும் இது போன்ற மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    சிலர் கூட்டமாக கஞ்சா போதையில் நின்று கொண்டு இருப்பார்கள். தனியாக நடந்து வருபவர்கள் இவர்களை கண்டதும் அச்சப்படுவது இயற்கை. அதனை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய நபர்கள் வழிபறியிலும் ஈடுபடுவது உண்டு.

    எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் உடனே மின் விளக்கு எரிய செய்ய வேண்டும். இரவு முழுவதும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் இப்பகுதியில் ஈடுபட வேண்டும்.

    அத்துமீறும் இளைஞர்களை பிடித்து, போலீசார் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அதைப் பார்த்து மற்றவர்கள் பயந்து, தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிழவிக்குளத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது44). இவர் குடும்பத்து டன் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். இதன் காரணமாக கிழவிக்கு ளத்தில் உள்ள வீடு பெரும் பாலான நேரம் பூட்டியே கிடக்கும்.

    ஆயுத பூஜைக்கு கிழவிக் குளத்திற்கு சென்ற கடற்கரை அங்கு பூஜை செய்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து விட்டார். வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் நேற்று கிழவிக்குளம் சென்ற கடற்கரை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • ஆரங்கி தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார்.
    • அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய கும்ப லை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார். 

    அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44) மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் செந்தில் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். மீண்டும் வேலை முடித்துவிட்டு அவரது மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் முன்பக்க மரக் கதவில் இருந்த பூட்டு உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்டம் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திண்டிவனம் அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ணாவூர் பகுதியில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள்கோவில் கேட்டில் இருந்த பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த 2 உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    • எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • போலீசாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச் சாலையில் கூத்தன் கோவில் அருகே சென்னை அம்பத்தூர் பகுதியில் திருடப்பட்ட கனரக லாரி மர்ம நபர்கள் எரிபொருள் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். லாரியில் பொருத்தப்ப ட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் லாரி யின் உரிமையாளர் தொடர்ந்து லாரியை பின் தொடர்ந்து வந்த போது மேற்கண்ட இடத்தில் லாரி நிறுத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிதம்பரம் போலீசா ருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர்.
    • அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரி அருகே, சைக்கிளில் சென்ற வாலிபரிடம், ரூ.20 ஆயிரம் மதிப்பி லான செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை, கோட்டுச்சேரி போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் தலத்தெரு கே.எம்.ஜி நகரைச்சேர்ந்தவர் கபிலர். இவர் காரைக்கால் நலவழித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (வயது(22). இவர், சுகாதார ஆய்வாளருக்கு படித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார். அபிஷேக், வழக்கமாக சைக்களில் உடற்பயிற்சி செய்வது வழக்கமாம். சம்பவத்தன்று காலை, சைக்களில் உடற்பயிற்சி செய்த வாறு, காரைக்கால் கீழகாசாகுடி சாலை வழியாக, தனியார் மருத்துவக்கல்லுரி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர். தொடர்ந்து, சைக்கிளை ஒழுங்காக ஓட்ட மாட்டாயா என கேட்டு அபிஷேக்கை அடிப்பது போல் கையை ஓங்கி, அபிஷேக் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திடீரென 3 நபர்களில் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    ×