என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mixed Doubles"

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    நிங்போ:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, தைவான் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 12-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, அமெரிக்காவின் டொனால்ட் யங்-டெய்லர் டவுன்செண்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வென்றது.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, குரோசியாவின் இவான் டோடிக்-பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.

    இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

    • விம்பிள்டன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
    • அரையிறுதியில் முதல் செட்டை கைப்பற்றிய சானியா ஜோடி அடுத்த இரு செட்டை இழந்து தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, ஜான் பீர்ஸ் - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • எதிர் ஜோடி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது.

    இந்நிலையில், கடைசி கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ×